பக்கங்கள்

Wednesday, October 09, 2013

டீ குடிக்க...டீ கடைக்குள் புகுந்த பஸ்..........

டீ குடிக்க, டீ கடைக்கு  மனிதர்கள் மட்டுமா போவார்கள்.. நாங்களும் போவோம்ல என்று ஒரு பஸ் சொல்லிக் கொள்ளாமல்   டீ குடிக்க, டீக்கடைக்குள் புகுந்தது.

டீக கடைக்காரர் பஸ்க்கு டீ ஆத்தி கொடுத்தாரா.....?   பஸ் டீ  குடித்ததா...? என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.........

ராஜபாளைத்திலிருந்து மதுரைக்கு அரச பஸ் ஒன்று. சென்றது.  அந்த பஸ்க்கு பயண களைப்போ, பசி களைப்போ.....தூக்க களைப்போ , அல்லது முந்தின நாள் அடித்த சரக்கின் பாதிப்போ என்னவென்று   தெரியவில்லை.

ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ். திடீரென்று ரோட்டில்  ஓரமாக சும்மா நின்று கொண்டு இருந்த மின் கம்பத்துடன் மோதி தன்பலத்தைக் காட்டியது.. பஸ் மோதிய பலத்தால்  மின் கம்பம் தாக்கு பிடிக்க முடியாமல் ரெண்டாக பொளந்து கதறியது.

கம்பத்தில் மோதி வீரத்தை காட்டிய பஸ் நிலை தடுமாறி  குறுக்காக நின்று கொண்டு இருந்த வேப்ப மரத்தையும் ஒரு முட்டு முட்டியது  , கடைசியாக முட்டுவதற்கோ பலத்தை காட்டுவதற்கோ, வேறு எதுவும் இல்லாததால்  டீ கடைக்குள் நுழைந்து  நின்றது. டீ குடிக்க............

பஸ் டீ குடிக்க , டீ கடைக்கு வருவது தெரியாமல் ,  வழியை மறித்துக் கொண்டு டீ குடித்துக் கொண்டுருந்தவர்களில் நான்கு பேரையும்,  பஸ் அடித்து படுகாயப்படுத்தியது.

பஸ் டீ குடிக்க போவது தெரியாமல் பஸ்ஸில் பயணம் செய்த ஒருவரையும் பஸ்  படுகாயப்படுத்தியது.

எக்ஸ்ட்ரா தகவல்.... பஸ் மோதியதில் பாதிப்படைந்த வேப்பமரம்  சாலையில் விழுந்து  ரெண்டு மணிநேரம்  மறியலில் ஈடுபட்டது.


அடங்கப்பா.............. எத்தன.......எத்தன கண்டத்துல இருந்துதான்  மனிதர்கள்   தப்பித்து வாழ்றது.


3 comments :

  1. நல்லவேளை ,உயர் நீதி மன்றம் ரோட்டோர டாஸ்மாக் கடைகளை எடுக்க உத்தரவு போட்டது ...இல்லையென்றால் ,இன்று டீகடையில் நுழைந்த பஸ் நாளை டாஸ்மாகிலும் நுழைய வாய்ப்பு இருக்கே ...அங்கிருக்கும் கூட்டத்தில் புகுந்தால் உயிர் சேதம் அதிகமாகுமே !

    ReplyDelete
  2. வீட்டுக்குள்ளயே பஸ் நுழையும் காலமிது. டீக்கடைதானே!

    ReplyDelete
  3. கருத்துரைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com