புதன் 13 2013

தந்தையிடம் சென்ற மகன் திரும்பி வந்த கதை......



என் தந்தையிடம் சென்றேன்
அங்கு அவரை காணாததால்
திரும்பி வந்து விட்டேன்.

திரும்பி வந்ததில் என்
தாயாருக்கும்  என்
தமக்கைக்கும் மகிழ்ச்சி.................

எனக்கு இல்லை.
பாதி கடனாளியாக
இருந்த என்னை
முழு கடனாளியாக்கி
விட்டார்கள் அவர்கள்.

நான் பிறந்த சில வருடம்
என்னைக் கொஞ்சி குலாவிய
சிலநாளில் நோய்வாய்பட்டு
துபாய் சென்று விட்டார்.

காலம் கடந்த நான்
அவருக்கு துணையாக
இருக்க மேலூர்க்கு
சென்ற போது

தாயாரும் தமக்கையரும்
தமக்கையின் பிள்ளைகளும்
வசூல் ராசாக்களிடம்.........
மொய் பணம் சரியாக
செலுத்தியதால்.........

வசூல்ராசாக்கள் இரக்கப்பட்டு
மேலூரிருலுள்ள எமனுக்கு
இமெயில் அனுப்பியதால்
மேலூர்க்கு செல்லவிருந்த
எனக்கு விசா மறுக்கப்பட்டு

கீலூருக்கே திருப்பிஅனுப்ப
பட்டுவிட்டேன்...................
விசா மறுக்கப்பட்ட நான்
இனி செய்ய வேண்டியது
என்ன......................

வசூல்ராஜாக்களுக்காக
வாங்கப்பட்ட கடனுக்காக
விசா கிடைக்கும்வரை
குடும்பத்தோடு பாடு
பட வேண்டும்............


 மொழிப்புரை----
(தூபாய்  சென்றார்---------- செத்துபபோனார்)
(மேலூர்-------------- மேலோகம்)
(கீலூர்.........பூமி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....