வியாழன் 14 2013

சொந்த சாதிக்காரனையே துடிதுடிக்கக் கொன்று ரசித்ததுதான் சாதிவெறி..!!!


சுனாபனாJune 6, 2011 at 6:26 pm

33
காலங்காலமாக தேவர் மீது பெருமை ஏற்றுவதற்காக சொல்லப்படுவது என்னவென்றால், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவுக்கு இவர் துணையாக நின்றார் என்பதுதான்.
முதலில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த வரலாறையும் அதில் தேவர் ஆற்றிய பங்கையும் பார்ப்போம்.
காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.
1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.
1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட “”கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி” தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (“”பண்பாட்டு அசைவுகள்”, தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).
1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். “”கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்” என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (“”சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்”, தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)
ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.
கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?
ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் “”முதுகுளத்தூர் கலவரம்”, தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).
தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!
சுனாபனாJune 6, 2011 at 6:30 pm

34
“”முதுகுளத்தூர் கலவரம்”, எனும் நூலின் மூலம் தேவரின் சாதிவெறியை அம்பலப்படுத்தியவர் தினகரன். இவரும் இதே சாதியைச் சேர்ந்தவர்தான் எனினும் சாதிவெறியை ஒழிக்கப் போராடியவர். இந்நூல் மூலம் சாதிவெறியைக் கண்டித்தபடியால் தினகரனை தேவரின் அடிப்பொடிகள் தினகரனைக் கடத்திச் சென்று பனைமரத்தின் கருக்குமட்டையால் கொஞ்சம் கொஞ்சமாக தினகரனின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். அறிவாளாக் வெட்டுப்பட்டிருந்தால் கூட சில நிமிட வலியோடு உயிர் போய் இருக்கும். சாதி வெறியைக் கண்டித்த சொந்த சாதிக்காரனையே துடிதுடிக்கக் கொன்று ரசித்ததுதான் சாதிவெறி..


நன்றி! வினவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...