19.11.2013 செவ்வாய் கிழமையை உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்குமாறு “உலக அய்யோ..........நானில்ல” அறிவித்துள்ளது.
இந்த உலக கழிவறை தினத்தில் அணைவருக்கும் கழிவறை கிடைக்காதததைப் பற்றியும் விலை உயர்ந்த செல்போன் வைத்திருப்பதைப்பற்றியும் படைப்பாளி தன்தளத்தில் பதிவிட்டுருந்தார் சொந்தமாக வீடு இல்லாதவர்களும், சொந்த வீ டு இருந்தும் கழிப்பறை கட்ட முடியாமல் போனதற்கு சில காரணங்கள். இருக்கின்றன. அந்தக் காரணங்களை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.
இப்போ,,,, வேதம் ஓதும் உலக வங்கியைப்பற்றி சொல்கிறேன்.
இந்த உலக கழிவறை தினத்தில்,இந்தியாவில் 53 சதவித வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் அறுபது கோடிப்பேர் திறந்த வெளியை பயன்படுத்துவதாக ,உலகத்தையே அடித்து உலையில் போட்டுக் கொண்டு இருக்கும் உலக வங்கி சொல்கிறது.
உலக முழுவதுமுள்ள நாடுகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து, பெரும்பாலான மக்களுக்கு பயனுள்ள இலவச திட்டங்களை ரத்து செய்யச் சொல்லி,அதன் மூலம் கடன் வாங்கிய நாடுகளை ஒட்டச்சுரண்டி கொழுப்பேறிபோன உலக வங்கி தன் அறிக்கையில் இப்படி வேதம் ஓதுகிறது.
உலகம் முழுவதும் 250 கோடி பேருக்கு போதிய கழிப்பறை வசதியில்லை என்றும். 100 கோடிப்பேர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள் இதில் இந்தியர்கள் மட்டும் 60 கோடிப்பேர் திறந்த வெளியை பயன்படுத்துகிறார்கள் என்று ஓதியிறுக்கிறது.
இந்தியாவில் இலவச கழிப்பறை மூடிவிட்டு, நவீன கட்டண கழிப்பறையாக மாற்றிவிட்டது வேதம் ஓதிய உலக வங்கிதான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
செவ்வாய்க்கு மங்கல்யான் ராககெட் விட்ட புன்னியவானுக்கு,மனித மலத்தை அப்புறப்படுத்த ராக்கெட் விட தோனவில்லை, நகரத்தில் மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலத்தை.சதியை, ராக்கெட் விடும் அறிவியலால் மாற்றுவாரில்லை.
இந்த லட்சணத்தில் பார்பபனர்கள் மட்டுமா வேதம் ஓதுவார்கள். நாங்களும் வேதம் ஓதுவமில்ல என்று ஓதியிறுக்கிறது உலக வங்கி.
இந்த உலக கழிப்பறை தினத்தில்...... ம.க.இ.க வின் மையக் கலைக் குழுவின் பாடல் ஒன்றையும் நீங்கள் நிணைவு கொள்ள வேண்டும்.
“கருவக் காடெல்லாம் கட்டடம்மா.... போச்சு......
வெளிக்கு போவதே பெரும்பாடா ஆச்சு.................”
நிச்சயம் இருக்களை வசதிகள் மிக முக்கியமானதாகவும். ஒரு தேசமும் அதன் மக்களும் இவற்றை முழுமையாக பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இது குறித்து விரிவாக நானும் எழுதியுள்ளனே வாசித்துப் பார்க்கலாமே..
பதிலளிநீக்குவெளியே போய் குந்தினால் இனி கலியாணம் கிடையாது - இந்தியாவின் டாய்லட் புரட்சி
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி! நீல வண்ணன் அவர்களுக்கு....
பதிலளிநீக்குநண்பர், என்ன இது? உங்களுக்கு உலகவங்கி மீதும் ஒரு ஜாதி மக்களிடமும் வெறுப்பிருக்கலாம்,அதற்காக உலக மக்களின் அடிப்படை சுகாதார விஷயத்தில் இப்படி சிந்திக்கலாமா?
பதிலளிநீக்கு//சொந்தமாக வீடு இல்லாதவர்களும், சொந்த வீடு இருந்தும் கழிப்பறை கட்ட முடியாமல் போனதற்கு சில காரணங்கள். இருக்கின்றன.//
கழிப்பறையில்லாம வீடுகட்ட முடியாது என்று மற்ற நாடுகள் செயல்படும் போது கழிப்பறை கட்ட முடியாமல் போனதற்கு எந்த ஒரு காரணமும் ஏற்றுக்க இயலாது.
செல் போன் இந்தியர்கள் வைத்திருக்க வேண்டும் என்று எந்த பார்பன ஜாதிகாரனும் உலகவங்கியும் சொல்ல போவதில்லை.
ஆனா அதிக விலையுதர்ந்த mobile போன் பாவிக்கும் இந்தியர்களுக்கு கழிப்பறை இல்லையா?
மற்றவங்க நாட்டவங்களை பார்த்து நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு விஷயமல்ல கழிப்பறை.
மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம்.
நண்பர் வேகநரியார்க்கு, கழிப்பறை கட்டுவதில் ஏற்ப்பட்ட தடங்கலையும் இடைஞ்சலையும் பற்றி சொந்த அனுபவத்தை முன்பு ஒரு தடவை, ”ரோட்டில் மலம் கழித்தது அந்தக்காலம்,இப்போ ஆற்றுப்பக்கம் ஓடுவது இந்தக்காலம்” என்று பதிவிட்டு இருந்தேன்.அதை தேடிப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதை படித்தால் , கழிப்பறை கட்ட முடியாததன் நிலைமை தங்களுக்கு தெரியவரும். நன்றி! வேகநரியாரே!!
பதிலளிநீக்கு