ஞாயிறு 03 2013

நீங்க....தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா........!!!


 தீபாவளி அன்னிக்கு தொலை காட்சியால் ஒரே தொல்லையாக இருந்தது, கைகாலும் சும்மா இருந்ததால, கைக்கும் காலுக்கும் வேல கொடுக்குற
துக்காகவும்  , மக்கள் எப்படியெல்லாம் தீபாவலிய கொண்டாடுறாங்கன்னு பார்ப்பதற்க்காகவும், அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து வாக்கிங் போயிட்டு வரலாமுன்னு  வீதி வழியா போய்கிட்டு இருந்தேன்.

ஒன்னாவது தெருவிலிருந்து என் வீட்டுக்கு அருகிலுள்ள மெயின் ரோட்டு வரைக்கும் உள்ள கடைகளெல்லாம் அடப்பு, ஆனா, அதில. ஒரே ஒரு கடை மட்டும் ஜெக ஜோதியா ஒளி வீசிகிட்டு இருந்தது. அந்தக் கடையில ஒரே வெள்ளையும் சொள்ளையுமான கூட்டம்.......

அது எந்தக் கடைன்னு ஒங்களுக்கு  படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கும் இருந்தாலும், தெரியாதவங்களுக்கு சொல்லனும்ல....... அதனால ,அந்தக் கடை  வேறு கடை இல்லங்க.............ஒயின் ஷாப்புங்க,

அந்தஒயின்ஷாப்ப கடந்துதான் நான் போகனும்  வரனும்.. அத அவாய்ட் பண்ணாம போகவம் வரவும் முடியாதுங்க........ அந்தக் கடைக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு கூடாரத்துல“ உங்கள் உதவிக்கு காவல்நிலையம்னு இருக்கிற.  இடத்த போட்டு அது பக்கத்துல தொலை பேசி எண் எழுதிய போர்டு ஒன்னு மாட்டி இருந்தது.ச்சுங்க......... அத இப்பதாங்க...நானும் பார்க்குறேனுங்க.. நா...........அத பாத்தபடி முகத்த வேறு பக்கமா திருப்பி கிட்டு போனேனா..........

ஒரு குடி மகன் என்ன தடுத்துட்டாருங்க................

என்னா,அந்த போர்டையே பாத்துகிட்டு போறீரு..........அந்த மகன் சொன்னாருங்க........ அப்புறம் அவரே..பேசினாருங்க.........போலீசக்காரன் செல் நம்பர போடலேன்னு.... பாக்குறீரா...............ன்னு கேட்டுன்னு  சிரிச்சாருங்க.......

 பதிலக்கு சிரிக்கலைன்னா அந்த குடிமகனுக்கு கோபம் வருமுன்னு  எனக்கு முன்னாடியே தெரிஞ்சதுனால....... நானும் பதிலக்கு பல்ல மட்டும் காட்டினேனுங்க................

நான் பல்ல காட்டினனோ, இல்லையோ.அத பாத்துட்டு.இன்னொரு குடி மகன் தள்ளாடி தள்ளாடி  வந்து.என் தோள் பட்டையில கைய வச்சாருங்க.......

அவரும். பொன்னான ஒரு கேள்விய கேட்டாருங்க............. என்னாது தீபாவலி அதுவுமா.......கருப்பு சட்டய போட்டுகிட்டு, தீ  பாவ  லீக்கு   ட்ரெஸ்  எடுக்கலை யான்னு.....................

நா.............அந்தக் குடி மகன திரும்பி பார்த்து பதில் சொல்றதுக்குல்ல.முதல் குடி மகனே....... பதில்  சொன்னாரு............பாய்காட் பன்னுறாருன்னு...........என்றார்.....

ரெண்டாவது குடி மகனறாருக்கு, நானு யாருன்னு திடீரென்று ஞாபகம் வந்திருச்சு போல......... ஓ......ஓ................ஓ..........காம்ரேட்.........காம்ரேட்...........
என்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு விரல்களில் ம ற்ற விரல்களை மடக்கிவைத்து ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி தலையை பல தடவை ஆட்டி ஆட்டி சொன்னார்.

இப்படியே விட்டால் என்னைச் சுற்றி  குடி மகன்கள் கூடி விடுவார்கள் என்பதால் நல்லபடியாக அவர்களிடமிருந்து தப்பிக்கும் முகமாக.. தோழர் ஒருவர் என்னை பார்க்க, பஸ்நிறுத்தில் நிற்கிறார்.  அவரை பார்க்க செல்ல வேண்டும். பிறகு பேசலாம் என்று   அவர்களின் ஒப்புதலை பெற்று நடையை கட்டினேன்.

 கொஞ்ச தூரம் சென்று,வீட்டுக்கே செல்லலாம், என்று திரும்பி பார்த்தால்...மூனு நாலு குடி மகன்கள் நின்று கொண்டு இருந்தார்கள். மனதை மாற்றிக் கொண்டு வாக்கிங் செல்ல தொடங்கினேன்.

பைபாஸ் ரோட்டைக் கடந்து பிக் பஜார் பில்டிங்கிட்ட நடந்து வரும்பொழுது. அங்கு    கணவனும் மனைவி மான ரெண்டு பேர் வழி மறித்து தீபாவளி வாழ்த்து சொன்னார்கள்.

எதுக்குங்க...வாழ்த்து.. நாந்தான் தீபாவலியே கொண்டாடடுறதே..இல்லையே என்றேன்.  ரெண்டு பேருமே சேர்ந்து ..நீங்க.....தீபாவளிய  கொண்டாட மாட்டிங்களா ....? என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு தியரியை  எடுத்து சொல்வதை விட்டுட்டு, சிம்பிளிக்கா..சில விபரங்களை மட்டும் சொன்னேன்.

எனக்ககு விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீபாவலியை கொண்டாடடுவது இல்லை, அன்று புத்தாடை துணிமணியும் எடுப்பதில்லை. அணிவதுமில்லை, என்றேன்.

 ஆட்டுகறிகூட எடுத்து சமைத்து சாப்பிடுவதில்லையா என்றார்கள் வியப்புடன. அவர்களுக்கு   தோழர்களின் மொழியின் சில விளக்கங்கள் சொன்னேன்.

விலை அதிகமிருப்பதால் காந்தி(ஆட்டுகறி) எடுப்பதில்லை..பறவையில் ஊசி ஏற்றி பெருக்க வைப்பதால் அதையும் சாப்பிடுவதில்லை.  காங்கிரசும் (மாட்டுக்கறி) வரவர ரப்பராக இருப்பதால். சாப்பிடுவதில்லை. “நவம்பர் 7 புரட்சி தின”த்தில் மட்டும்  சமைத்து சாப்பிட்டுக் கொள்வது.... இந்திய்ன் பார்லி மென்ட் ( கருப்பு பன்னி) மற்றும் அய்ரோப்பிய பார்லிமெண்ட (வெள்ளைப்பன்னி) இரண்டையும் தொடுவதே இல்லை.. என்றேன்.

 அடப்பாவி!  தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா !!! என்று கேட்தற்க்கா இம்புட்டு விவரம் என்பது போல்  கணவனனமனைவி இருவரின்  வாய்  திறந்து இருக்க.............அவர்களிடம் விடைபெற்று, “ விட்டா போதுமடா........ சாமி” என்று வாக்கிங்கை பாதியிலயே முடித்துக் கொண்டேன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...