பக்கங்கள்

Sunday, December 15, 2013

நாய்களும் .........மனிதர்களும்.............

www.tamilaustralian.com.au
நாய் ஒன்று பழைய
தெருவிலிருந்து புதிய
தெருவுக்கு வந்தது.

புதிய தெருவில்
பழைய நாயொன்று
புதிதாய் வந்த
நாயை கண்டது

சட்டென எழுந்து
தன் கோரப் பற்களை
காட்டி குரைத்தது.

உர்ர்ர்............உர்ர்ர்...
லொள்ள்ள்.....லொள்

ஒரு நாய் குரைத்ததும்
பல நாய்களும்..........
சேர்ந்து குரைத்தது.

லொள்.லொள் லொள்
லொள்..லொள்..லொள்

வந்த நாயோ சற்று
பலமுள்ளது அதுவும்
தன் வீரத்தை காட்டியது

உர்ர்ர்ர்ர............உர்ர்ர்ர்ர்
உர்ர்ர்ர்ர.............உர்ர்ர்ர்ர்

புதிய தெருவிலே
இருந்த பழைய
நாயும்-பழைய
தெருவில் இருந்து
வந்த புதிய
நாயும் ஒன்றுடன்
ஒன்று மோதின.

பழைய தெருவில்
இருந்து புதிய
தெருவுக்கும்
புதிய தெருவில்
இருந்து பழைய
தெருவக்கும்
போய் கொண்டும்
வந்து கொண்டும்
 இருந்த மனிதர்கள்

நாயின் சத்தத்தை
கேட்டும் அதன்
பற்களை கண்டும்
எட்டடி தள்ளி
சென்று பதினாறு
அடி வேகத்தில்
கடந்தார்கள்........

டாஸ்மாக் குடி
மக்களோ போதை
தெளியாத சாக்கில்
தூரத்தே நின்றனர்.

பழைய தெருவென்ன
புதிய தெருவென்ன
நாய்களை ப் போல
மனிதர்களும் குரைப்பதால்
தானே, “நாயே”
நாய்களே...........
என்று பட்டம்
வாங்குகிறார்கள். 

No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!