மார்கழி மாதம் பிறந்து விட்டாலே.பதினோரு மாத அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாத்த்திற்கு யோக்கியர்கள் வேடம் தரித்து விடுகிறார்கள்.
என்னென்ன அயோக்கிய தனங்கள் இருக்கிறதோ அத்துனை தனங்களிலும் புகுந்து விளையாடியவர்கள், புதிய அயோக்கிய தனங்களுக்காக இந்த ஒரு மாதத்தில் யோக்கியர்களாக வலம் வருகிறார்கள்.
அதிகாலையில் எழுந்து குளிரில் நீராடி நெற்றியில் பட்டையிட்டு.மார்கழி மாத சீருடை அணிந்து. காட்சி அளிப்பார்கள். நாங்கள்தான் மார்கழி மாத யோக்கியர்கள் என்று பறை சாட்டுவார்கள்.
சாஸ்திரப்படி பதினோறுமாத பாவம் ஒரு மாதத்தில் தீர்த்துவிடுமாம். பதினோறு மாதம் கடவுளை நிணைக்காதவர்கள். ஒரு மாதத்தில் நிணைத்தால் பதினோறு மாத பலன் கிடைக்குமாம். அந்த ஒரு மாதத்தில் பலன் கிடைத்தவுடன் அடுத்த பதினோறு மாதத்தில் பழைய புதிய அயோக்கிய தனங்களில் ஈடுபாட்டாலும் அதனால் கெடுதல் ஏற்ப்படாதாம்.
கடலில் மீன் பெருக தடைகாலம் இருப்பது மாதிரி, பதினோறு மாத அயோக்கிய தனங்கள் செய்யும் அயோக்கியர்களுக்கு மார்கழி மாதம் தடைகாலம்.
சாதராண அப்பிராணி குடுமபங்களைச சேர்ந்தவர்களுக்கு இந்த மார்கழி மாத தடைகாலத்தை பற்றி அவ்வளவாக தெரிய வாய்பில்லை என்றாலும் அவர்களும் இந்த மார்கழி மாத தடைகாலத்தை இப்படி பயன் படுத்துகிறார்களாம்
பதினோறு மாதம் குடியே கதியின்னு கிடப்பவனை,மார்கழி மாத அயோக்கியர்கர்களின் தடைகாலத்தை பயன்படுத்தியவது ,குடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற நப்பாசையில் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
பழைய பழமொழியான “யோக்கியன் வாரான், செம்பை எடுத்து உள்ளே வை ”என்பதை
இப்படிக் கூறலாம்............
”மார்கழி மாத யோக்கியன் வாரான். செல்போனை எடுத்து உள்ளே வை” என்று
“ மார்கழி மாதத்து யோக்கியர்கள் வருகிறார்கள் மாராப்பை இழுத்து மூடிவை”
தொடர்புடைய பதிவு.http://valipokken.blogspot.com/2013/01/11-1.html
11மாத அயோக்கியர்களும் ஒரு மாத யோக்கியர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை