செவ்வாய் 17 2013

அதிலிருந்து இதிலோ.............இதிலிருந்து அதிலோ்........சிறுகதை


tamil.yahoo.com 












ஒரு வாரத்துக்கு மேல் கடுமையான வேலை,அந்த வேலையின் காரணமாக நேரத்துக்கு சரியாக உணவு உண்ணமுடியவில்லை,  நல்ல தூக்கமும் இல்லை

வேலையை முடித்த மறுநாள் இரவில் பயங்கரமான.தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வயிற்று வலி.

என்ன செய்தும் வலியை குறைக்க முடியவில்லை.நேரம் இரவு 12 மணிக்கு மேல்,பக்கதில் இருக்கும் கிளினிக் எதுவும் இல்லை. அரசு மருத்துவமனையோ தூரத்தில் உள்ளது.

அப்படியே,அரசு மருத்துவமனைக்கு சென்றாலும்  உடனடியாக கவனித்து விட மாட்டார்கள்.“ இந்நேரத்தில் வந்து ஏன்டா ?எங்க உயிர வாங்குறீங்க!”என்று
திட்டுவார்கள். வேறு வழியில்லை என்றும்  கெஞ்சினால் நோயாளியை  ஓரமாக சாய்த்து வைக்கச் சொல்லுவார்கள்.

காசும்மாச்சு,மயிருமாச்சு, இரவும்பகலுமா வேலை பார்த்த காசைக் கொண்டு.ஆட்டோவைப் பிடித்து, சற்று தூரத்தில் இருந்த 24 மணி நேர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவிர் சேர்த்து சிகிச்சை செய்யப்பட்டது.

உள் நோயாளியாக தங்க வைக்கப்பட்டுதினசரி 3 அல்லது 4 குளுகோஸ் பாட்டிலுடன் ஊசியும் ஏற்றப்பட்டு.மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. வயிற்றை பட்ம் பிடித்து பார்த்தில் குடல்களில அதிகமான புண்கள்., கேன்சராக ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பிவிட்டதாக வழி மொழியப்பட்டது. தினசரி  காலை மாலை மருத்துவரும் செவிலியர்களும் வந்து பார்வையிட்டனர்..

வசூல்ராஜாவானர் ஏழை நோயாளிடம் விசாரனை செய்தார்.

“தண்ணி அடிப்பிங்களா?”

“இல்ல,சார்”

“பாக்கு போடுவிங்களா? ”

“இல்லசார்”

“பீடி.சிகரெட் ..........”

சிறு வயதிலிருந்து எந்தப் பழக்கமும் இல்ல சார்.”

”அன் மேரிடா”

“ஆமாம் சார்”

“ஏன்”

“அது பெரிய கதை சார்,”

வசூல்ராஜாவானர். அந்த நோயாளியை ஆச்சரியமாய் பார்த்தார்.

“தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்திருந்தால்,வெறும் வயிற்றில் தண்ணி அடித்தால் குடல் வெந்து போகும் என்ற பயத்தில் பாரில் விற்கும் சிக்கனையோ,அல்லது முறுக்கையோ ஏதாவது ஒன்றை உள்ளே தள்ளி இருப்பீர்கள்..”

அங்கு கொடுக்க வேண்டியதை , மொத்தமாய் இங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

“ தண்ணி அடிப்பதெற்கெல்லாம்,  தினசரி வருமாணம் இல்லை.சார்,

“இப்ப மட்டும் பணம் எப்படி வந்தது.” “ எப்படித்தான் நீங்கள்  இருந்தாலும்.
“அதிலிருந்து இதிலோ.........இதிலிருந்து அதிலோ............”தப்பிக்கவே முடியாது என்பதை புரிஞ்சிக்கிங்க.............என்றார் வசூல்ராஜா.


வயிற்றுவலி குணமாகி வீட்டிற்கு வந்த போது, கடன் கொடுத்தவர்கள் நலன் விசாரிக்க வந்தபோது தான் தெரிந்தது. இராப்பகலா உழைத்து சம்பாதித்த பணமும் போயி,மேற்க்கொண்டு கடனும் எகிறி இருப்பது.

இனி, கடனை அடைக்க உழைப்பு, ஆஸ்பத்தரி செலவு, திரும்பவும் கடன்......உழைப்பு.......

இப்போதுதான் எனக்கு புரிந்தது.என் மண்டை தரையில் சாய்கிற வரைக்கும்..“

“அதிலிருந்து இதிலோ......இதிலிருந்து அதிலோ........ .தப்பிக்கவே முடியாது என்று”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....