பக்கங்கள்

Sunday, December 29, 2013

யானையை புடுச்சு பானைக்குள் அடக்க முயலும் கேச்ரிவால்....ஆமஆத்மியின்  டெல்லிமுதல்வர்  ராம்லீலா மைதானத்தில் இருந்து டெல்லி வாழ் மக்களுக்கு யானையை புடிக்க ஒரு வழி சொல்லியிருக்கிறார். இப்படி.................

மக்களே!  உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். லஞ்சம் வாங்குவோரை  திருத்த (தண்டிக்க அல்ல) ஒரு வழி வைத்திருக்கிறோம். நாங்கள் இரண்டு நாளில் போன் நம்பர் தருவோம், அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் நீங்கள் போனாலும்.அங்கு யாராவது லஞ்சம் கேட்டால்..உடனே, அங்கேயே உட்கார்ந்து லஞ்சம் தர தயராக இருங்கள். எங்கள் லஞ்ச ஒழிப்பு படை வந்து கையும் களவுமாக பிடித்து விடும்

அப்புறம்........................

அப்புறமென்ன.......................யானையை புடிச்சு பானைக்குள் அடைத்த கதைதான்......................

ஐஐடி யில் மெக்கானிக் படித்த மூளைக்கு ஒரு வழி தெரிந்தால்.......... லஞ்சத்திலே ஊறி கொளுத்து வளர்ந்துள்ள யானைக்கு எத்தனை வழி தெரிந்திருக்கும்.............

லஞ்ச ஒழிப்பு படையே லஞ்சம் வாங்குவது தெரியாத ஐஐடி முதல்வர் லஞ்ச யானையை பிடித்து பானைக்குள் அடைக்க போகிறாராம்.

கேப்பையில் நெய் ஒழுகிறது என்று நம்பும்  கேனையர்களாக இருக்குவரை.இப்படிபட்ட கூத்துகளும் நடக்கும்தான்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாத்துகிறவர்கள் இ.இ..இருப்பார்கள்.இதுவும் ஐஐடி மூளை சொன்னதுதான்....                                                                                                    


4 comments :

 1. டி .என் சேஷன் வரும் வரை ஊழல் பெருச்சாளி அரசியல் வாதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் பொது கட்டுப் படுத்த முடியும் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.............

  ReplyDelete
 2. பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ,ஏன் இப்படி அவநம்பிக்கை ?நல்லது செய்ய நினைப்போரை வரவேற்க்கலாமே!

  ReplyDelete
 3. யானையை புடிச்சு பானைக்குள் அடைக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், முதல்வன் என்ற படம் வந்த போது கைதட்டி ஆரவாரம் செய்யும் நாம் அதை ஏன் நிஜ வாழ்வில் ஏற்க மறுக்கின்றோம் என்று தெரியவில்லை....அவர் அரசியலுக்கு புதிது என்றாலும் எதுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டலாமே...

  ReplyDelete
 4. பொருத்தார் பூமி ஆள்வார் என்ற கருத்துபடி நீங்கள் பொருத்திருந்து பாருங்கள் நண்பர்களே! பதவி ஏற்பதற்கு முன்னமே....தண்ணீர் இணைப்பு இலவசமாக 24 மணி நேரத்தில் வழங்கப்படும் என்பது என்னாச்சு..என்பதையும் கவனியுங்கள்............

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com