.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை.
நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு பெரியவர் வெய்யிலிலும் மழையிலும் பொம்மைகள்
விற்றுக் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டே செல்வார்.
அவர் சம்பளம் வாங்கிய ஒருநாள் எதாவது ஒரு பொம்மை அந்த பெரியவரிடம் வாங்கலாம் என்று நிணைத்து..ஒரு பொம்மையை காட்டி விலை கேட்டார். அந்தப் பெரியவர் விலையை சொன்னார். நண்பர் தன் பழக்க வழக்கத்தில் அவரிடம் பேரம் பேசினார். பெரியவர் தான் கூறிய விலை கிடைக்காது என்று தெரிந்ததும் நண்பர் கேட்ட விலைக்கு கொடுத்துவிட்டார்.
பிறகு நண்பர் சொன்னார். பெரியவரிடம் இந்த பொம்மை எனக்காக வாங்கவில்லை ..உங்களுக்காக வாங்குகிறேன் என்றார்.அந்த பெரியவர் எனக்காகவா...? ஏன்? என்றார். அப்போது நண்பர் சொன்னார் தினமும் இந்த வழியாகத்தான் நான் வேலைக்கு செல்கிறேன். திரும்பி வரும்போது.. பொம்மைகள் எதுவும் விலையாகமால் இருப்பதை பார்த்து இருக்கிறேன். இன்றைக்கு எனக்கு சம்பள நாள் எனக்கு கூலி குறைவாக இருந்தாலும் அந்தக் கூலிக்குள் உங்களிடம் ஒன்றாவது வாங்க வேண்டும் என்று எண்ணினேன். தாங்கள் கூறிய விலை எனது சக்திக்கு அதிகமாக இருந்ததால்தான் உங்களிடம் பேரம்பேசி பத்து ரூபாய் குறைத்தேன். வேறு ஒன்றும் இல்லை. சும்மா கொடுத்தால் தாங்கள் வாங்க மாட்டீர்கள் என்று தெரிந்து கொண்டதால் இந்த பொம்மையை வாங்கி உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன். தயவு செய்து மனம் கோணாமல் என் மீது கோபம் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
பெரியவர் சிறிது நேரம் அமைதியானார்... நண்பர் மீண்டும் சொன்னார்.. அய்யா..இது நான் பாடுபட்டு உழைத்த பணத்தில் என் சக்திக்கு உட்பட்டு இந்த பொம்மையை வாங்கி இருக்கிறேன். நான் செய்த பாவத்தை போக்குவதற்காக இந்த காரியத்தை செய்யவில்லை. ஒரு ஏழை இன்னொரு ஏழைக்கு உதவுவதற்காக செய்கிறேன். வேறு எவற்றையும் நிணைத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றபோது.. பெரியவர். தான் விற்ற பொம்மையை தன் பரிசாக பெற்றுக் கொண்டார்.
அந்தப் பெரியவர்க்கு பிள்ளைகள் இருந்தும் இன்றைய கால சூழலில் அது அதுகளுக்கு எந்தவித இம்சைகள் கொடுக்காமல் தன் சுயமாக இருந்து வாழ்வதையே விரும்பி ஏற்றுக் கொண்டு இருப்பதை எனக்கு சுட்டிகாட்டி..எனது கதை தெரியாமல் எனக்கு அறிவுறை சொல்வதாக நிணைத்துக் கொண்டு இந்தக் கதையை கூறினார்.....
என்னை என்னான்னு நிணைத்துக் கொண்டு எனக்கு அறிவு உரை சொல்கிறார் என்று எனக்கு ஒரு குழப்ப இம்சையாக இருக்கிறது..
என்னை என்னான்னு நிணைத்துக் கொண்டு எனக்கு அறிவு உரை சொல்கிறார் என்று எனக்கு ஒரு குழப்ப இம்சையாக இருக்கிறது..
இதுவும் ஒரு பாடம்தான் நண்பரே...
பதிலளிநீக்குஅழுத்த நிகழ்வு,,,/
பதிலளிநீக்குகுழப்பம் எதற்கு?. அந்த சம்பவம் உங்களை பாதிக்கிறது என்றால் உங்களுக்குமந்த பொம்மை விற்பவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கும். அது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். இல்லையேல் அந்த சம்பவத்தை மறந்துவிடுங்கள்
பதிலளிநீக்குகதை நல்லது. நல்ல அனுபவ பாடம் இது.
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
கதையில் அந்தப் பெரியவருக்கு பிள்ளைகள் இருந்தும்,அவர்களுக்கு எந்தவித இம்சைகள் கொடுக்காமல் தன் சுயமாக இருந்து வாழ்வதையே விரும்பியது நல்லதொரு விஷயம்.
பதிலளிநீக்குஆனா அதை நண்பர்? என்று ஒருவர், உங்களுக்கு சொன்னது அபந்தம்.
உங்க நிலை நேர்மாறு. உங்க உறவுகார பிள்ளைகள் தாங்கள் சுயமாக இருந்து வாழ்க்கையில் முன்னேற விரும்பாம, உங்களை தங்களது சுமை தாங்கியாக பாவித்தார்கள்.
கதை சொன்னவரிடம் எச்சரிக்கையாக நீங்க இருங்கள்.