பக்கங்கள்

Wednesday, January 01, 2014

வாழ்த்தா............................எதுக்கு??????

eluthu.com -

அம்பது வருசத்தை கடந்துவிட்ட எனக்கு இரவில்  சரியாக தூக்கம் வருவதில்லை. சனவரி 1யை முன்னிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால் எழுப்பப்பட்ட வெடிச்சத்தத்தாலும் கூச்சலாலும் அமைதியாக படுத்திருக்க முடியாமல் புரண்டு கொண்டு இருந் தேன். அதன் பலனாக அதிகாலையில் நன்றாக தூங்கி கொண்டு இருந்த நேரத்தில்.............

என் கைப்பேசி விடாமல் ஒலித்தது. விடாது ஒலித்ததன் பயனாக, அந்தத் தூக்கத்திலும் கேட்காத  என் காதுக்கு ஒலி கேட்டு, எழுந்து நமக்கு பெரிய வீடும் இல்ல, சின்ன வீடும் இல்ல, அதிகாலையில்  யாரா இருக்கும் என யோசித்து  கைப்பேசியை எடுத்து

 “யாரு, என்ன விசயம் ” என்ற போது,

“வாழ்த்துக்கள் அண்ணே” சொன்னது.ஒரு குரல்.

“வாழ்த்துக்கள் அண்ணே” என்று சொன்னது. என் காதுக்கு “வாழ்த்துக்கள் வெண்ணே” என்று  பதிவானது.

ஒரு கணம் “என்னடா.......“வாழ்த்துக்கள் வெண்ணே”ங்கிறாங்கே...........என நிணைத்து நிதானத்துக்கு வந்து...............

“வாழ்த்தா..................எதுக்கு”?? திரும்ப கேட்டபோது.........

“புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பதில் வந்தது.

“புத்தாண்டா”........அதத்தான் “தைலிருந்து ஏப்ரல்லுக்கு மாத்திட்டாங்கல்ல” என்றபோது........

“அது தமிழ்புத்தாண்டு.........இது ஆங்கில புத்தாண்டு  என்றது எதிர்முனை.

“ நான்.ஆங்கிலேயேன் இல்லையே”.............. என்றேன் திரும்பவும்.

“நீங்கள்,ஆங்கிலேயேன் இல்லையென்றாலும். ஆங்கிலேயே காலண்டர்கள் தேதிகைளைத்தானே பயன்படுத்துகிறீர்கள். அதற்குத்தான் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார்.

“அட, இதுக்கெல்லாமாவா ..........வாழ்த்துச்சொல்லுவாங்க.,என்றுவிட்டு..............எதுஎதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லனும் என்று நானும் ஒரு சில தியரியை சொன்னேன்.

எனக்கு கல்யாணம் ஆகி.............ஆகியிருந்தால் அந்த நாளுக்கு வாழ்த்து க்கள் சொல்லலாம், எனக்கு குழந்தை பிறந்திருந்தால் அந்த நாளுக்கு, குடிசை வீட்டிலிருந்த நான், சென்டிரிங் வீட்டிற்கு மாறியிருந்தால் அந்த நாளுக்கு, இப்படி பல டிப்சுகளை சொல்லி இவற்றுகளுக்குத்தான் வாழ்த்துகள் சொல்ல வேண்டும் என்றேன்................

இப்படியாக.நானும் வாழ்த்துக்கள் சொன்ன வருத்தப்படாத வாலிபரும் முப்பது நிமிடத்துக்கு மேல் பேசி, வருத்தப்படாத வாலிபரை,வருத்தப்படும் வாலிபராக ஆக்கி விட்டேன.

....இனி யாருக்காவது வாழ்த்து சொல்லும்போது,கண்டிப்பாக என்னை ஞாபகத்துல வச்சுருக்குவாருல்ல...............

நான் சொன்ன மொக்கைகளை “வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சொல்லி.வருத்தபடுவாருல......, கோபம் கொப்பளிக்க  “காலையில ஒருத்தனுக்கு வாழ்த்து சொன்னேன்டா”.......  என்ன கொன்னுன்டான்டா என்று சொல்லுவாருல.............

அதனால.............வாழ்த்து சொல்லும்போது, காரணகாரியம்,நேரம்காலம் பாத்து
சொல்லனும்..புரியுதா.....................

2 comments :

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி! திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com