வெள்ளி 17 2014

என்னிடம் இருப்பது ஏராளம்.........(சிறைக்கவிதை)

மழையில் சொட்டச் சொட்ட நனைந்த
ஒரு நாளின் மாலைப்பொழுது
ஒளியில் இட்டு நெய்தெடுத்த
ஒரு வாழ்ககை

ஒருமித்த கூட்டுணர்வால்
உருவான நாங்கள்
அங்கே விளைந்து
பயிரான நான்

என்னிடமிருந்து உன்னால்
எதை எடுக்க முடியும்
இந்த மாலைப்பொழுதை
எந்த இருட்டுச் சிறையில் பூட்ட முடியும்?

ஒரு உயிரைப் பிறிதோர் உயிரால்
மோதித் தேய்த்து
அழித்துவிட முடியுமோ உன்னால்?
எம்மிலிருந்து என்னைத்
தனனியே பிரித்துவிட முடியுமோ
உன்னால்?

என்னிடம் ஏதுமில்லை
என்றாய் அல்லவா,
உன்னை வெல்லும் சக்தியே
அங்குதான் உள்ளது.
என்னிடம் இருப்பது ஏராளம்
ஏதுமில்லை என்பதிலும் ஒன்றிருப்பது
உனக்கு தெரியாது

--------பாஷ் (சிறைக்கவிதை)











நன்றி! புதிய கலாச்சாரம் மே. 2004.

2 கருத்துகள்:

  1. சிறைக் கவிதை என்றாலும் சிந்தனை சிறைப்படவில்லை !
    த .ம 1

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துரைப்படியே,அவருக்கு சிந்தனை சிறையிடப்படவில்லை. நன்றி! Bagawanjee KA

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...