வெள்ளி 14 2014

தனித்து போட்டி ஏன்? ஒரு புன்னாக்கு விளக்கம்!!



காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளையும் பாஜகவின் மதவாத கொள்கைகளையும் லெப்ட்டு ரைட்டுகளான நாங்கள் ஆதியிலிருந்தே எதிர்த்தே வந்தோம்.

காங்கிரஸ் பாஜக அல்லாத  ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற பேராசையில் அதிமுகவுடன் மகிழ்ச்சியாக காலில் விழுந்தோம். விழுந்ததோடு அல்லாமல் அதிமுகவை தொங்கோ தொங்குன்னு தொங்கினோம். கயிறு பலமாக இல்லாத காரணத்தால் கயிறு அறுந்துவிட்டது அதனால் எங்களால் மேலும் தொங்க முடியவில்லை.

இருந்த போதிலும்,அதிமுக தலைமை எட்டடி உதைத்து தள்ளியபோதும் அதற்கு மாறாக பதினாறு அடி வேகத்தில் வந்து காலில் விழுந்தோம். கால்களை விடாமல் பிடித்திருந்தும் பலன் ஏதும் இல்லை.

ஏனென்றால்,எங்களைவிட,காலில் விழுந்து தூங்கி விடுபவர்கள் அதிமுகவில் அதிகமிருப்பதால் எங்களை மிதித்தாலும் பரவாயில்லை என்று இருந்த எங்களால் அவர்களுக்கு பயனில்லை என்று தவறாக கணக்கிட்டு விட்டார்கள்.

ஆகையினால், மகிழ்ச்சியாக காலில் விழுந்த நாங்கள்,மகிழ்ச்சியாக கால்களை தொட்டு எழுந்தோம்.

அடுத்த சில தினங்களில் எங்களின் தன்மான சிங்கங்களான லெப்ட்டு, ரைட்டுவின் கொள்கை வீரர்களை அறிவிப்போம், தேர்தல் திருகுவிழா முடிந்த பின்போ, பிரதமர் பதவியின்போதோ அல்லது அடுத்த தேர்தலிலோ நாங்கள் காலில் மகிழ்ச்சியாக விழுந்து எழுந்ததற்கு பலன் இல்லாமலா போகும்?????



2 கருத்துகள்:

  1. இடது வலதுகள் இன்றைய நிலைப்பாட்டை எத்தனை நாள் கடைப்பிடிப்பார்கள் என்பதையும் பார்க்கத்தானே போகிறோம் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இடது வலதாகவும் வலது இடதாகவும் மாறலாமாம்...ஜீ

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....