தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய உரிமை.வாக்களிப்பது நமது தலையாய கடமை, நல்லவர்களை.மக்கள் சேவையில் ஆர்வம் உள்ளவர்களை தங்கள் பிரதிநிதியாக அனுப்புவது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை
ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் நல்லவர், சிறந்தவர் என்பதை முடிவு செய்து,அவர்க்கு நமது வாக்கை அளித்து நமது உரிமையை நிலை நாட்டுவோம்.
மக்கள் தீர்ப்பே? மகேசன் தீர்ப்பு? அதனால் நல்லவர்களுக்கே ஓட்டு போடுவோம். இப்படியாக அடுக்கடுக்காய் வழிகாட்டுதல்கள்.அறிவுரைகள், நெறிமுறைகள்.
இது தேர்தல் திருவிழாவின் போது தூக்கி வீசப்படும் .ஜனநாயகம்,வாக்காளர் உரிமைகள், மகேசன் தீர்ப்புகள், மண்ணு,மட்டை.மசிறு ,மற்றும் மறவாமல் வாக்களிப்போம், ஜனநாயகத்தை காப்போம் இப்படி ஊத்தவாயர்களின் கொள்ளை முழக்கங்கள்.
மண்ணு மட்டை.மசிறு என்று எதை எதையோ சொல்லும் எழுதும் வெண்ணெய்கள் சிந்திக்க விடாமல் தொலைக்காட்சி,சினிமா,டாஸ்மாக் போதை சாதி வெறி,மதவெறி,குடி,கூத்தி,களவு கொள்ளை.கொலை போன்ற எல்லா வகையான சீரழிவுகளில் வாக்காளைனை தள்ளிவிட்டும்....
வேலையிண்மை, கல்வியிண்மை,விலைவாசி உயர்வு, வாழ்க்கை நிச்சயமற்ற தன்மை.அடக்குமுறை போன்ற எல்லாவகையான கொடுமைகளிலும் அல்லல்பட்டு சிக்கி பின்னாமாகி தவித்து கிடக்கும் வாக்காளனை.....
சிந்தித்து வாக்காளியுங்கள்.நல்லவரையே தேர்ந்தெடுங்கள், உரிமையை நிலை நாட்டுங்கள் என்று எதை எதையோ சொல்லும் எழுதும் விணக்கெண்ணெய்கள்..ஜனநாயகத்தின் உரிமையை நிலைநாட்ட அந்த நல்லவர். அந்த வல்லவர். இன்னானென்று சுட்டிக்காட்டாமல். சொல்லாமல் இந்த வெண்ணெய்கள் மட்டும் தங்களின் ஜனநாயக கடமையிலிருந்து தவறி ,தப்பித்து ஓடிவிட்டு, உச்சானி மேட்டிலிருந்து பாதுகாப்பாக இருந்து கொண்டு
மதி மயங்கி நோக்காடால் இப்பேவோ,அப்பவோன்னு புலம்பி தவிக்கும் வாக்காளனிடம் வாக்கு அளியுங்கள்.கடமையை செய்யுங்கள் ,ஓட்டு மட்டுமே போட உள்ள உரிமை யை நிலை நாட்டுவோம் என்று தங்களின் ஊத்த வாயால் தேர்தல் திருவிழா சீசனில் ஓதுகிறார்கள்.
#மதி மயங்கி 'நோக்கா'டால் இப்பேவோ,அப்பவோன்னு புலம்பி தவிக்கும் வாக்காளனிடம் வாக்கு அளியுங்கள்.கடமையை செய்யுங்கள் ,ஓட்டு மட்டுமே போட உள்ள உரிமை யை நிலை நாட்டுவோம்#
பதிலளிநீக்குநோட்டா வோட்டைப் போட்டு இவர்களை மூக்கறுக்க வேண்டும் !
த ம 1
இவர்களுக்கு மூக்கே இல்லாதபோது எப்படி மூக்கை அறுப்பது ஜீ..
பதிலளிநீக்குகூத்து ராஜாவின் ஆணைகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுக்களுக்கும் எதாவது வித்தியாசம் உண்டா ? சிறு வியாபாரிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் .அண்ணா அன்றே சொன்னார் 'குடுக்கிற காசை வாங்கிக்கிட்டு உனக்கு இஷ் டமானவனுக்கு ஓட்டை போடு 'இன்று கேபடனும்
பதிலளிநீக்குஅதையே சொல்றார் .இருக்கிறவன் கொடுக்கிறான் .நாம வாங்காம ஒட்டு போட்டா ,அவன் அடிக்கிற கொள்ளையை நிறுத்தி விடவா போகிறான் .விளம்பரத்துக்கு அலையிறாங்கெ .
அவன் அடிக்கிற கொள்ளையை நிறுத்தி விடவா போகிறான். ---கொள்கையே கொள்ளை. கொள்ளையே கொள்கைன்னு ஆகிப்போச்சு..ஆண்டிசாமி அய்யா..
பதிலளிநீக்கு