ஞாயிறு 16 2014

நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ் சொல்லுங்கண்ணே.....




அண்ணே.. நானு முதல் முறையாக வாக்காளாராக ஆகியிருக்கேன் அண்ணே. நடக்கப்போற  ஜனநாயகத் தேர்தல்ல...........மனதில் உறுதியுடனும் மனசாட்சிபடியும் கண்ணியத்துடனும்  வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை தலைக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை வச்சு சொல்லுறாங்கண்ணே அதனால நிக்கிற பல கட்சி வேட்பாளர்கல்ள  நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க ஒரு எளிமையான டிப்ஸ்சு கொடுங்கண்ணே...........

என்னப்பா ..... நல்ல பொருளை கண்பிடிக்க சொல்லும் நுகர்வோர்  மாதிரி, வேட்பாளர்களை கண்பிடிச்சு சொல்லுங்க என்று கேட்குற....

ஆமாண்ணே, அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை ஓட்டு கேட்டு  வருகிறவங்க நல்லவங்களா? கெட்டவங்களாஃ? பாத்து சிந்தித்து ஓட்டு போடுங்கன்னு சொல்றாங்கல... பொருள வாங்குறது விட  ஓட்டு போடுறது ஒரு படி மேல  இல்லீங்கலாண்ணே

ஓ....அப்படியா........ அட போப்பா...“கரையான் புற்றெடுக்க,கரு நாகம் புகுந்த கதையா” எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கன்னு கண்டுபிடிக்க முடியாமத்தான். நானு ஓட்டு போடுறதையே விட்டுட்டேன்ப்பா..........

நிஜமாவாண்ணே.... ஓட்டு போடலைன்னா எதுவும் ஆகாதாண்ணே......

ஒன்னும் ஆகாது... இந்தா எனக்கு விவரம் தெரிஞ்சு ஓட்டுரிமை பெற்ற நாளிலிருந்து ஓட்டே போட்டதில்லைப்பா........... நானு ஓட்டு போடலைன்னு எந்த வேட்பாளர்களும் பதவி ஏற்க மாட்டேன்னு சொல்லலைப்பா...

ஆமா, டிப்ஸ்சுன்னு சொன்னியே,அது என்னப்பா...?

அண்ணே,ஓட்டல்ல சாப்பிட்டு  சர்வர்க்கு தர்ற டிப்ஸ்சு இல்லேண்ணே.நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க எளிமையான வழியை சொல்றதுக்கு தானே டிப்ஸ் சு.......

அட,...டிபஸ்சுக்குகூட ரெண்டு அர்த்தம் இருக்கா...........!!

ஆமாண்ணே.,

ஆமா..தம்பி..ஓட்டு போடு,மனசாட்சிபடி ஓட்டுபோடு,டிப்ஸ் வாங்காமல் ஒட்டு போடுன்னு சொல்றவங்க யாரும்.நல்ல வேட்பாளரை சுட்டிக்காட்ட டிப்ஸ் கொடுக்கலையா.....தம்பி........

இல்லண்ணே..., நான் படிக்கும்போது மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாதன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னவங்களும் சரி, மூச்சுக்கு முப்பதாயிரம் தடவை நல்லவங்களுக்கு ஓட்டு போட்டு ஜனநாயகத்தை தலைக்க சொன்னவங்களும் சரி,... யாருமே நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்ச சொல்லலேண்ணே.........அதனால யாருக்கு ஓட்டு போடுறதுன்னு கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்குண்ணே..............எனக்கு,

நல்லவுக யாருன்னு சொல்லாம ஓட்டு போடு. ஓட்டுபோடுன்னு புலம்புகிறாங்கண்ணே...........

சரி, முதல் முறையா.....ஓட்டுரிமை வாங்கியிருக்கே...யாருக்காவது போட்டு தொலைக்க வேண்டியதுதானேப்பா............

அதெப்படிண்ணே.......வாக்காளர் கடமைன்னு ஒன்னு இருக்குலேண்ணே.....
அந்தக் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டாமண்ணே..... என்னோட படிச்ச பயல்கள பாதிபேரு..டாஸ்மாக் கடையிலும் சினிமாகாரி காரன்கள் பின்னாடியும் விழுந்து கிடக்குறாங்கண்ணே......... அவிங்கள மாதிரி......விழுந்து கிடக்கச் சொல்லுறிங்களா.............???

சே.சே....அந்த அர்த்தத்துல  சொல்லலப்பா....சரி உங்க குடும்பத்துல் இருக்கிறவங்க போன தேர்தல்ல யாருக்கு ஓட்டு போட்டாங்க.........

எங்க வீட்டாளுக்கெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பாத்தெல்லாம் ஓட்டு போடத் தெரியாதுங்கண்ணே........... டீ.வியில  யாரு அதிகமாக தெரியுறாங்களோ யாரு இலவசம் அதிகமா தர்ராங்களோ....அவுக சார்ந்த கட்சிக்கு தாண்ணே ஓட்டு போட்டு இருக்காங்க......

அட,உங்க வீட்டு அனுபவம் அப்படியா...!!! சரி.... உன் அனுபவத்திலே எந்தக் கட்சி நல்லக் கட்சியா தெரியுதுன்னு ஒன்ன சொல்லேன்.

அது தெரியாமத்தாண்ணே..ஒங்ககிட்ட டிப்ஸ் கேட்டேன்.

சரி..தம்பி..........இப்பத்தான் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என்று  நோட்டா பொத்தான் வந்திருக்குல்ல....அத அமிக்கிறு... இந்த தேர்தல்ல அவரு ஒருத்தருதான்  நல்ல வேட்பாளரா தெரியுறாரு......!!!

அப்போ.............நோட்டாவுக்கே...ஓட்டு போட்டுலாம்ண்ணே......

 இருப்பா........அந்த வேட்பாளரு மேலேயும் சந்தேகமாக இருக்குதுப்ப............ இந்த நொட்டாவானது  புதிய மொந்தையில் பழைய கள்ளா தெரியுதுப்பா.........அழுகி நாறும் பிணத்திற்கு அலங்காரம் செய்வது போல் இருக்குதுப்பா இந்த “நோட்டா”

?????????????ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....