பக்கங்கள்

Tuesday, March 18, 2014

சொன்னா...நம்ப மாட்டீங்க.....இதுதான் உண்மை....!!!

என் தொழிலில் நிறைய வேலை வரும்போது
செலவும் வருமானத்துக்கு அதிகமாகவே வந்து விடுகிறது.

போன்பில்,கரண்ட்பில்,அரிசிசெலவு,காய்கறி செலவு
முன்பு வாங்கியிருந்த கடனுக்கான வட்டிச்செலவு

இப்படியாக வர்ர வருமானத்துக்கு அதிகமாகவே
செலவு வந்து என் கழுத்தை நெருக்குது

எப்படித்தான் குன்னி குன்னி பார்த்தாலும்
செலவுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

ஏனென்றால் அந்தச் செலவுகள் எல்லாம் மிகவும்
அத்தியாவசியமானவை செலவுகள் ஆகும்.

வாடகையில்லாவீட்டைத்தவிர குடும்பவழி
சொத்து ஏதும் கிடையாது.. அந்த வீட்டீன் மேல்
என் தந்தையாரின் பன்னையார் போட்ட வழக்கும்
“வாய்தாராணி” வழக்கு போல்  பன்னையார் செத்தும்
 வழக்கு நடத்திய வக்கீலும் செத்தும் பதினேழு வருடத்தை
கடந்து பதினெட்டாம் வருடத்தை நோக்கிச செல்கிறது.

என்னிடம் பீடி,சிகரெட்,காபி.டீ ,டாஸ்மாக்போன்ற செலவுகள்
ஏதும் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இன்று
வரைக்கும் கிடையாது. இனிமேலும் தொடர்வதற்க்கான
வாய்ப்பும் இருக்காது. கிடைக்கவும் கிடைக்காது....

இப்படியும்  இருந்தும் அடிக்கிற வெய்யிலுல
பச்சை புல்லுகூட கருகி தவிக்கிறபோது
விவைாசி உயர்வினாலும் வேலையில்லா
திண்டாட்த்தினாலும் நானும் தவிக்க வேண்டியதாகிறது.

வந்த வேலயை முடித்துவிட்டு. அடுத்து வர்ர வேலை
இல்லாம சுனங்கிப் போயி கிடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நேரம் பாத்து நேரத்துக்கு கிடைக்காத உணவை
நேரத்துக்கு சாப்பிடாததால் வந்த வயிற்றுவலியாலும்,
தலைவலி.நெஞ்சுவலியாலும் வரும் நோய்களை
தாங்க முடியாமல் , மருத்துவ சிகிச்சைக்கு கடன் கிடைக்காம
அல்லாட வேண்டியிருக்கிறது.

இந்த நிலமை சாபமா? வரமா? ன்னு யோசிப்பபோ....
ரெண்டுமே....... இல்லைன்னு தோணுச்சு....................

என் நிலமை எனக்கு மட்டுமா? இல்ல...... பலபேருக்கு இருக்குன்னு
தெரிந்தப்போ.....இந்த நிலமை  விதியா??ன்னு என்று பார்த்தால்

விதியில்லை!! சதியின்னு தலைவலியோடு நச்சுன்னு
மண்டையில வந்து விழுந்துச்சு..................

இந்த சதிக்கு காரணமானவர்கள் யாருன்னு தேடினால்
அவிங்கதான்..................வாரானுக.....பலவித வாக்குறுதிகளோடு
 பல வண்ணங்களில்    உங்களைத்தேடி.........................

4 comments :

 1. இப்படி எல்லோருக்கும் சிந்திக்க தெரிந்தால் எவனாவது வோட்டு கேட்டு வருவானா ?
  த ம 1

  ReplyDelete
 2. இப்படி சிந்தித்து இருந்தால் ஓட்டுதான் போ்ட்டுருவோம்மா...........

  ReplyDelete
 3. தலைப்புதான் உண்மை என்றால் ,வேதனைப் படுகிறேன்!

  ReplyDelete
 4. இந்த தடவை என் ஒட்டு......
  நோட்டாவுக்கே

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!