வெள்ளி 07 2014

இனி,வேடிக்கை பார்த்தால், பளார் அறை,அடி,உதை வாங்க வேண்டும்.

மதுரை மா வட்டம் பேரையூர் செல்லாயி  புரத்தை சேர்ந்தவர் கருப்பையா என்பவர்.

நவம்பர் 28ல் பட்டா மாறுதல் தொடர்பாக பேரையூர் தாலுக்காவுக்கு சென்று கொண்டு இருந்தார்.

வழியில்  செல்லும் வேலையை மறந்து கோழி திருட்டு தொடர்பாக,
நாண்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை பொதுமக்கள் பிடித்து  கட்டி
வைத்து போலீசிடம் ஒப்படைத்துக் கொண்டு இருப்பதை வேடிக்கை
பார்த்து  கொண்டு நின்றார்.

இவர் வேடிக்கை பார்ப்பதைக்கண்ட  டி.ராமநாதபுரம் சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பா ராணி,இவரிடமிருந்த பணத்தையும்,  செல்போனையும் பறித்துக் கொண்டதோடு, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று பூட்சு காலால் மிதித்தார். மேலும் சுகுமாறன்,ராஜேஷ் ஆகிய ஏட்டுகளான போலீஸ்
காரர்ர்களும்  சேர்ந்து தாக்கினார்கள்.

தாக்குதலால் காயம்மடைந்த இவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதன்பின்பு, தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் என்னை தாக்கிய மூன்று போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  மனு தாக்கல் செய்தார்.

இவரின் மனுவை விசாரித்த நீதிபதி,தமிழக உள்துறை செயலர், டிஜிபி, மாவட்ட எஸ்பி ஆகியோர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார்..

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.  செல்லும் வழியில் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, நம் வேலையை பார்க்க வேண்டும். தப்பித்தவறி செல்லும்  வேலையை மறந்துவிட்டு வேடிக்கை பார்த்தால்,   போலீசிடம் பூட்ஸ் எத்தும் அடி.உதையும் வாங்க வேண்டும். மேலும் பணம் வைத்திருந்தால்  காசு பணத்தையும்  செல்போனையும் பறி கொடுக்க வேண்டும்.

அடி வாங்கியதில் காயம் ஏற்ப்பட்டால்.தாமதிக்காமல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டும். பிறகு சிகிச்சை பெற்ற கையோடு..........

(வசதியிருந்தால்)   போலீசை கண்டு பயப்படாத வக்கீலை பார்த்து தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவேண்டும்.

.....................

.....................

.....................


அப்புறம்............


அப்புறமென்ன........பூட்சுகாலால் எத்தியதோடு இல்லாமல் அடித்து
உதைத்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காலம் வரை காத்திருக்கவேண்டும்.

4 கருத்துகள்:

  1. என்ன நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்கள் ?
    இன்னும் இவர்கள் இந்திய போலீசாய் மாறவில்லை,மக்களை துன்புறுத்தும் பிரிட்டிஷ் போலீசாய்தான் இருக்கிறார்கள் !
    த ம +1

    பதிலளிநீக்கு
  2. நடந்ததைத்தானே எழுதியிருக்கிறேன். திரு(மதி?)srividhya mohan அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. மாறா....தய்யா....மாறாது. மனமும் குணமும் மாறாது சரிதான் பிரிட்டிஷ் போலீசாய்தான் இருக்கிறார்கள் ! என்பது பகவான்ஜீ

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....