பக்கங்கள்

Friday, April 11, 2014

அங்கீகாரத் திருடனுக்கும் அங்கீகாரா திருடனுக்கும் வந்த ஈகோ..


படம் கதைக்களம்
ஒரு மாநகரில் மேற்படியான இரண்டு திருடர்கள் இருந்து வந்தார்கள் அவர்கள் இருவரும் நேசமும் பாசமுமாய் இருந்தாலும் சில நேரங்களில் நாய்ச் சண்டையிலும் இருந்து வந்துள்ளனர்.

இப்படியாக இருந்து வந்துள்ள நாளில்..ஒருநாள் இருவருக்கும் ஈகோ பிரச்சனையால் சணடை மூண்டது. அந்தச் சண்டையில் பிரதானம் யார் பெரியவன், யார் அதிகாரமுள்ளவன். என்பது.

இதில் அங்கீகாரம் இல்லா திருடன் சொன்னான.
என்னை வைத்தே உனக்கு வேலை நான் இல்லை என்றால் உனக்கு வேலையே இல்லை. என்னுடைய மாமுலில்தான் நீ கொழுத்து திரிகிறாய்
என்னுடைய வேலையால்தான் உன்னிடம் வருகிறார்கள். அதனால் நான் பெரியவன். நான்தான் சமூகத்தில் பெரியவன்..........என்றான்

இதற்கு மறுப்பு தெரிவித்து அங்கீகாரம் பெற்ற திருடன் சொன்னான.
போடா ...........லூசு...........ஒன்ன மாதிரி நான் ஒன்னும் பயந்து கொண்டு திருடுபவன் அல்ல. நான் திருடினாலும் என்னை தண்டிக்க முடியாது. அப்படியே என்னை தணடிக்க நிணைத்தாலும் வேறு இடத்துக்குத்தான் மாற்றுவார்கள். நான் இல்லேன்னா நீ இல்லே.........என்னைவிட நீ பெரிய ஆளா ஆகிவிடக்கூடாதுன்னு உன்னை தடுப்பதற்க்குத்தான் என்னை வளர்க்கிறார்கள். ஏதாவது வழக்கில் உன்னை அடித்து விசாரனை செய்யும் போது நீ செத்துப்போனாலும் நானெ அடித்து போட்டு தூக்கில் தொங்கவிட்டாலும் என்னை ஒன்னும் செய்யமுடியாது.எதோ என்னல்தான் உன் பொழப்பே ஓடுகிறது. உன்ன புடுச்சு உள்ளே போட்டா..வருமானமே இல்லாம நீ கானம போயிடுவ..........உன்னடமிருந்து எனக்கு அப்பப்ப மாமுல் வரவில்லை என்றால்........நானே நேரிடையாகவே கண்ட கண்ட இடங்களில் வரும் வாகன ஓட்டிகளிடம் மாமுல் வசூல் செய்து கொள்வேன்.

என் மாமூலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எனக்கு மசா மசாம் டாண் டாண் என்றுஎனக்கு கூலி பட்டுவாடா ஆகிவிடும்.இது போன்று அறிவிக்கப்படாத பல சலுகைகள் எனக்கு உண்டு. யாரையும் தனி நபரையே அல்லது ஒரு கூட்டத்தையோ  அடித்து பின்னி எடுக்கலாம்.  நீ ஒருத்தனையோ அல்லது இருவரையோ அடிக்கலாம் கூட்டத்தைக் கண்டால் தலைதெறிக்க ஒடிவிடுவாய்

நீ  போகமுடியாத இடங்களுக்கெல்லாம் நான் தைரியமாய் போய்வரலாம், உன்னை பிடிப்பதும் பிடிக்காமல் இருப்பதும் என் முடிவு.....பணியின் பொது நீ செத்தால் ஒழிந்தான் என்று தூற்றுவார்கள். நான் பணியின் போது செத்தால் குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள்.இன்னும் இப்படி உன் மண்டைக்குள் தெரியாத ஏகப்பட்ட விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம்...இதிலிருந்தே நான்தான் பெரியவன். நான்தான் அதிகாரமுள்ளவன்
அதனால் இனிமேல் நீ  தான்தான் பெரியவன் என்று சண்டை போடாதே என்றான்.

அதெப்படி என்று சொல்ல அங்கீகாரமில்ல  திருடன் வாய் திறந்த போது......சட்டென்று அங்கீகாரமுள்ள திருடன் அவனின் வாய்க்குள் ரிவால்வாரை வைத்து என்னை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தான் என்று போட்டு தள்ளலாம் என்று சொல்லி..........இப்பச் சொல்லு யார் பெரியவன் அதிகாரமள்ளவன் நானா..? நீயா....?  அதிகாரமள்ளவன் நீயா..நனா..? சொல் என்றான.

பயந்து நடங்கிப்போன அங்கீகாரமில்லா திருடன். வாய்க்குள் திணிக்கப்பட்ட துப்பாக்கியால் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்றான்.

இப்ப நீங்கள் சொல்லுங்கள்..அவன் என்ன சொல்லிருப்பான்.......யார் பெரியவன், யார் அதிகாரமுள்ளவன்....???என்று

2 comments :

  1. சீருடை மட்டும் இல்லைன்னா நீயும் நானும் ஒண்ணுதான்னு சொல்லி இருப்பான் !
    த ம 1

    ReplyDelete
  2. ஆமாமா..நிச்சயம் சொல்லிருப்பான்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com