வியாழன் 10 2014

அந்த ஆளு ஓட்டு போட மாட்டான்..அவன் மகஇக..








16 வது நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் வேட்பு மனுதாக்கல் முடிந்து .ஓட்டு போடும் நாளும் நெருங்கி வந்து கொண்டு இருந்தது.

ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று வாக்கு சேகரிக்கும் கட்சியை சேர்ந்த இருவர் ஒரு வார்டு பகுதிகளில் ஓட்டு போடும் வாக்காளரின் எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டு இருந்தனர்.

ஒரு வீட்டின் முன் அவர்கள் சென்ற போது. அந்த வீட்டீற்க்குள் இருந்து ஒரு பெண் குரல் பேசியது..

“ இந்தாப்பா..........போன தடவ,ஒரு ஓட்டுக்கு 500 ரூபா பேசி....200ரூபாதான் கொடுத்தீக....... நாங்களும் கை நீட்டீ காச வாங்கிட்டோம் என்ற மருவாதிக்காக ஒங்களுக்கே ஓட்டு போட்டோம். இந்த வாட்டி போனவாட்டி ஏமாந்தது மாதிரி இந்த தடவ ஏமாற மாட்டோம்.முழுசா...சொளையா வந்தாத்தான்.நாங்க இந்தத் தடவ நாங்க ஓங்களுக்கு ஓட்டு போடுவோம். சொல்லுறத சொல்லி பட்டோம் ஆமா.......நாபகத்தில் வச்சுக்கங்க.............

கணக்கெடுப்பாளரும் அந்த வார்டு வாசியுமான ஒருவர் மறுமொழி பகிர்ந்தார்

அக்கா.........போன தடவ,நம்ம வார்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையிலே பாதிதான் வந்து சேர்ந்தது. இடையில் பெரிய தளைகள் புகுந்து கலாட்டா பண்ணி சுருட்டியதால்..பேசிய தொகையை தரமுடியவில்லை. இந்தத் தடவை அது மாதிரி  எதுவும் ஆகாமல் இருப்பதற்குத்தான்  மேலிருந்து வந்த இவருடன் கணக்கெடுப்பு......

அடுத்து எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் வீட்டுக்குச சென்றனர். அவர்கள் வீட்டு வாசலில் நின்றபோது வீட்டுக்குள்லிருந்து ஒரு நாய் குரைத்தபடி வேகமாய் வந்தது. அந்த நாயை அதட்டியபடியே எல்லாம் தெரிந்த எகாம்பரம் வந்தார்.

என்னப்பா.........என்றார் இருவரையும் பார்த்து.

கணக்கெடுப்பாளர் இருவரும் அவரது காதில் கிசகிசுத்தனர். மணடையை ஆட்டிய ஏகாம்பரம் தொகை எவ்வளவு என்ற கணக்கில் கையை செய்கையாக காட்டினார்.

கணக்கெடுப்பாளரில் ஒருவர் ஒரு விரலை காட்டினார். அது போதாதென்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தொண்டையை செருமிவிட்டு சொன்னார்.

ஒன்னா ரெம்ப குறச்சுப்பா...........ஒரு ரூபாக்கு 66கோடிய 16.17 வருஷத்துக்கு கணக்கிட்டு பாரு 66 கோடி அப்படியேவா.......இருக்கும். நானும் நீங்க கொடுத்த காசுக்கு அப்பேலிருந்து இப்ப வரைக்கும் ஒங்களுக்குத்தான் போட்டு வாரேன் விலை வாசியெல்லாம் ஓட்டுக்கு ஏறதா.... ரெண்டாயிரமா கொடுத்தா  என்ன கஜனா காலியா ஆயிருமா...........

சார், எல்லாத்துக்கும்  ஒன்னு குறையாம போய் சேரனுமுன்னு அம்மா உத்தரவு  அடுத்த எலக்சனில் ரெண்டு உறுதியா கிடைக்கும் என்று கணக்கெடுப்பாளர். சொன்னதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மௌனமாகிவிட்டார்.

ஏகாம்பரம் வீட்டைக் கடந்ததும்  இவரென்ன மஞ்ச துண்டு கட்சியா என்றார்.
இல்ல  ரைட்டு கட்சிய சேர்ந்தவரு......அவிங்க கட்சிக்கே ஓட்டு போடமாட்டாரு.....பாத்தில்ல..பேசுனத....அதனாலத்தான் இவரை
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமுன்னு பேரு வச்சுருங்காங்க..............

இருவரும் பேசிக்கொண்டே......ரெண்டு மூனு வீட்டைத்தள்ளி ஒரு வீட்டீன் முன் நின்றனர்.

வார்டு வாசியான கணக்கெடுப்பாளரில் ஒருவர் வீட்டை கண்டதும் அடுத்த வீட்டை நோக்கி அவரை இழுத்துக் கொண்டு நகர்ந்தார்.

தள்ளி சென்ற பிறகு வார்டு வாசியானவர் சொன்னார். முன்னாடி அந்த ஆளு ஓட்ட கட்சி மாறி  ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொருத்தாரா முறை வைத்து போட்டோம். இப்போ  வாக்காளர் அடையாள அட்டை வந்தபிறகு அந்த ஆளு ஓட்ட போட முடியல................

அந்த ஆளு ஓட்டே போட மாட்டான். அவன் மகஇக..........!!!!!!!!!!!!

2 கருத்துகள்:

  1. மகஇக ஏன் பேரம் பேசப் போறார் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. மகஇக காரர்தான் தேர்தல்பாதை திருடர் பாதை. மக்கள்பாதை புரட்சி பாதையின்னு சொல்லுபவராச்சே......

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...