குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் அருகே கிடங்கன்கரைவினை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசபாபதி இவரது மனைவி அகிலா .
இவர் தனது அரைப்பவுன் கம்மலை கழற்றி வீட்டில் இருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு வேறு ஒரு வேலையை முடித்துவிட்டு.. மேஜையில் வைத்திருந்த கம்மலை கானாது திடுக்கிட்டார்.
என்னடா இது மேஜையில் வைத்திருந்த கம்மலை காணவில்லை..நம்மளைத் தவிர வேறு யாரும் வரவில்லை. பிறகு எப்படி கம்மல் காணாமல் போயிருக்கும் என்று யோசனை செய்தார்.
அப்போது அவர் வீட்டு கோழி ஒன்று அருகில் மேய்ந்து கொண்டு இருந்தது. அந்தக் கோழியும் தீவணத்தை லாவகமாக கொத்தி உடைத்து சாப்பிட்டதைக் கண்டார்.
அகிலாவுக்கு கோழி மேல் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டிற்குள் வேறு யாரும் வராதபோது..கம்மலை இந்தக் கோழி விழுங்கியிருக்குமோ என்று நிணைத்தார்.
நடந்த விபரத்தை தனது கனவரிடம் தெரிவித்தார். அவரின் ஆலோசனைப்படி கோழியை கட்டிப்போட்டு இரண்டு நாட்களாக தீனி போட்டு பார்த்தனர். கோழியின் கழிவிலிருந்து கம்மல் வெளியே வரும் என்று...எதிர்பார்த்து இருந்தனர்.
கோழியின் கழிவிலிருந்து கம்மல் வரவில்லை. கோழியின் மீதுள்ள சந்தேகமும் தீரவில்லை.
கோழியின் குடலுக்குள் தங்கக் கம்மல் ஒட்டிக் கொண்டு வெளியே வராமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்ற காரணத்தால்..கடைசி முயற்சியாக..
தம்பதியினர் இருவரும் கோழியைக் கொன்று அதன் வயிற்றை அறுத்துப் பார்த்தனர்.
தம்பதியினரின் சந்தேகத்தின்படியே தங்கக் கம்மல் கோழியின் கழிவுடன் இருந்தததைக் கண்டனர்.
கல்லையும் கரைக்கும் சக்தி கோழியின் இரைப்பைக்கு இருக்கிறது என்றாலும் தங்கக்கம்மல் கரையாமல் துண்டு துண்டாக இருந்தன.
தங்கக் கம்மல் கிடைத்த மகிழ்ச்சியில் வயிற்றைக கிழித்த கோழிக்கறியையும் சமைத்து சாப்பிட்டனர்.
கம்மல் கோழியால் துண்டுதுண்டாய் போனது.கோழி இவர்களால் துண்டு துண்டாய் ஆனதோ ?
பதிலளிநீக்குத ம 1
துண்டு துண்டான கோழிக்கு எதிரான வன்முறையை எதிர்க்கத்தான் யாருமில்லை.ஜீ
பதிலளிநீக்கு