ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ராஜா இருப்பது மாதிரி..சுத்திமுத்தி பாத்தா நாற்பது வீடுகள் கொண்ட குடும்பம் வசிக்கும் தெருவுக்கும் ஒரு ராஜா இருந்தான்.
அவரே தெருவுக்கு ராஜாவாகவும் அந்தத் தெருவுக்கு நாட்டாமையாகவும் அந்தத் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு பூசாரியாகவும். கோயிலின் திருவிழாவின்போது சாமியாட்டம் போடும் சாமியாராகவும் தன்பெயரைக்கொண்டே குருசாமியாகவும் இருந்தான்..இதோடு அந்தத் தெருவிலே அந்த ஒருத்தர் மட்டுமே மின்சார வாரியத்தில் வேலைலை பார்த்த அரசு ஊழியர் என்ற பெருமை வேறு இருந்தது.
இவ்வுளவு பதவி இருந்தது மாதிரியே அதற்கு ஈடாக சின்னப்புத்தியும் சபலபுத்தியும் அடுத்தவன் மனைவியை பெண்டாளுவதோடு நில்லாமல் வறியவர்களின் இடத்தையும் அபகரிப்பதிலும் எதிர்த்தவர்களை தெருவில் உ ள்ளவர்களிடமும் தன் குடும்பஉறுப்பினர்களையும் சாட்சியாக கையெழுத்து பெற்று போலீசில் புகார் செய்து அடி உதையுடன் தண்டம் கட்டச் செய்வதிலும் கில்லாடி..
அந்த ராஜாவை நேரில் பார்த்தால் இந்தப் பூணையும் பால் குடிக்குமா? என்று கேட்குமளவுக்கு நடிப்பில் சினிமா நடிகளையே தூக்கி சாப்பிட்டு அளவுக்கு திறமைச்சாலி. தனது தனிப்பட்ட பிரச்சனையை பொதுப் பிரச்சனையாக்கி தெரு கோயில் வரிபோட்டு தன்னை எதிர்த்தவனை அந்தத் தெருவை விட்டே ஒதுக்கி வைத்து இம்சை கொடுத்து ரசிப்பதில் பலே கில்லாடி...........
இப்பேர்ப் பட்ட பலே கில்லாடியை எந்தவொரு பின்புலம் இல்லாமல் எவர் துனையின்றியும் ஆத்திரத்தால் போட்டு தள்ளாமல் தனக்கு தெரிந்த சட்ட வழிமுறைகளிலே எதிர்த்து வந்தான் ஒருவன். அவனுக்கு அந்தத் தெரு ராஜாவோடு அந்தத் தெரு மக்கள் கொடுத்த பல இம்சைகளையும் தாங்கிக் கொண்டு வந்தான்.
இப்படி பெற்ற பல இம்சைகளின் ஒரு இம்சை ஒன்றைப்பற்றித்தான் பதிவிடப்படுகிறது.
அந்த ராஜா கோலோச்சும் அந்தத் தெருவில் ஒரு இடத்திற்கு நடை பாதை இல்லாததால் அந்த இடத்தை அந்த ராஜா அடிமாட்டு விலைக்கு வாங்கி வழி நடை பாதையாக ராஜாவை தனி ஒரு ஆளாக எதிர்ப்பவனின் வீட்டுக்கு மேற்கு புறமான இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தான். அதனை எதிர்த்தபோது தனது நான்கு ஆண்பிள்ளைகளுடனும் தன்வைப்பாட்டி பிள்ளைகளுடன் கூட்டமாக சேர்ந்து தெற்கு புறமாக வாசல் உள்ள அவன் வீட்டை மறித்து தனக்கு இதுவரை பாத்தியமுள்ளது என்று அடவடியாக வேலி கட்டி தன்னை எதிர்த்தவன் அவனுக்கு பாத்தியமான இடத்தில் நடமாட முடியாத அளவுக்கு அராஜகம் செய்து வந்தான்.
அந்தப் பிரச்சனையில் தெரு நாட்டாமையான குருசாமிக்கும் வைப்பாட்டி ராணிக்கும் பிறந்த மகனும் வெளியில் ஏழரை மகன் என்று அழைக்கப் படுபவனுமான திருமா வளவன் என்று பெயர்சூட்டியக் கொண்டவன் நாட்டாமையின் உத்தரவில் அடிதடியில் இறங்கி கொலை வெறியுடன் பாய்ந்தான்.
நாட்டாமையின் உத்தரவால் கொலை வெறியுடன் பாய்ந்தவனிடம் அடிதடியில் இறங்கி தப்பித்து அப்பகுதி போலீசில் அவன் மீது புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல்நிலைய ரைட்டர். மாலை ஏழு மணிக்கு வா..என்றார்.
தொடரும்....................
கட்ட பஞ்சாயத்து ஆரம்பம் ஆயிடுச்சா ?
பதிலளிநீக்குத ம 1
ஆமாம்ஜீ ஆரம்பம் ஆயிறுச்சு.....
பதிலளிநீக்கு