படம் |
இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதாக தேர்தல் கணக்கெடுப்பில் சொன்னதாக ஞாபகம்.
அது மாதிரியே அந்தத் தெருவிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இந்த பெண்களின் எண்ணிக்கையை வைத்தேதான் ந்தத் தெருவுக்கு பொட்டத் தெருவுன்னு அப்பவே பேரு வச்சுட்டதனால..
வாழையடி வழையாக இந்தத் தெருவும் பொட்டத்தெருவுன்னே நிலைச்சு போச்சு.......அந்தத் தெருவின் பேருக்கு ஏத்த மாதிரி அந்தத் தெருவிலுள்ள பெண்களெல்லாம் கூட்டமாக கூடி நின்று இரண்டு பெண்கள் வாய்ச் சண்டை போ்ட்டுக் கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சண்டையிட்ட இரண்டு பெண்களும் உடன் பிறந்த அண்ணன் தம்பிக்கு வாக்கப்பட்ட பெண்கள்தான் என்று அவர்கள் சண்டையின்போது தெறித்து விழும் வார்த்தைகளிலிருந்து தெரிந்தது.
சண்டை ஏண்? எதற்கு? என்று நின்று கவனித்த போது விபரம் அக்கு வேறு ஆணிவேறாக புரிந்தது.
அதாவது மச்சான் பொண்டாட்டி ஆனவள் வீடு கட்டுகிறாள். அதில் கொழுந்தனின் பொண்டாட்டி வேலை செய்தாள். வேலை முடிந்து அவளுக்கு கூலியை கொடுத்துவிட்டு மீதி இருந்த ரூபா ஆயிரத்தை பத்தரமாக ஒர இடத்தில் வைத்தவிட்டு வெளியே சென்று விட்டாள்.
திரும்பி வந்து வைத்த பணத்தை பாத்து இருக்கிறாள். பணத்தை காணவில்லை, வைத்த இடத்தையும் வைக்காத இடத்தையும் சேர்த்து தேடினால் பணத்தை காணவில்லை...
அமைதியாக யோசனையில் ஆழ்ந்தாள். கடைசியாக..கொழுந்தனின் பொண்டாட்டிமேல் சந்தேகம் வந்துவிட்டது. அவள்தான் தன் வீட்டில் சோறு கஞ்சி,வெஞ்சனம் ஊற்ற்ிக் கொண்டு போவது திபை்படம் மாதிரி மனதில் ஓடியது.
கொழுந்தன் பொண்டாட்டி மீது சந்தேகம் கொண்டு அவளை தேடியபோது அவளைக் காணவில்லை. மச்சான் பொண்டாட்டி காரியும் தன்னுடைய ஆயிரம் ரூபாயைக் காணவில்லை என்று அந்தத் தெருவக்கு டமாரம் அடித்து செப்பி விட்டாள்.
தெருவில் இருந்த பெண்களில் சிலர்..உன் கோளுந்தன் பொண்டாட்டி காரிதான் எடுத்திருப்பா..என்றும் ஒன் பணத்தை எடுப்பதற்கு டில்லியில் இருந்தா ஆள் வரவாளுக்க..........என்றார்கள்.
ஒரு சிலர் தங்களுக்குள் இப்படி பேசிக் கொண்டார்கள், இவள் என்ன அந்தக் பணத்தை வம்பாடு பட்டா ஒழச்சா ,அவ வச்சுருக்க ஆள்கிட்ட இருந்துல..கரந்துருக்கா....என்று முனு முனுத்தார்கள்.
மச்சான் பொண்டாட்டி காரியின் வாயில் ஒழச்ச பணம் என்றும் வார்த்தை வரவில்லை. கள்ளபுருஷனிடமிருந்து பணத்தை கரந்து வீடு கட்டுகிறாள் என்றும் அந்தத் தெரு பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது.
பணத்தை திருட்டு கொடுது்தவளின் கொழுந்தன் பொண்டாட்டி காரிதான் பணத்தை திருடி இருப்பாள் என்பதற்கு ஆதாரமாக அந்தத் தெருவிலுள்ள ஒரு வீடட்டில் ரெண்டாயிரம் பெருமானமுள்ள பித்தளை அண்டாவை திருடியதையும் மற்றொரு வீட்டில் இட்லி சட்டி மற்றும் பெரிய வட்டயை திருடியபோது கையும் களவுமாக பிடித்ததையும் சுட்டிகாட்டி சொன்னார்கள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டும் தெரிந்து கொண்ட மச்சான்காரனின் பொண்டாட்டி ஆனவள். ஊருக்கு போயிட்டு மறுநாள் வந்தவளிடம்
“ஆயிரம் ரூபாய எடுத்தியே கொண்டாடி என்று கேட்க” மற்றவளோ,“ நான் எங்க பாத்தேன், நான் எடுக்கவே இல்லை என்று ஊருல உள்ள எல்லா தெய்வத்தின் பேயரைச் சொல்லி சத்தியம் செய்தாள்.
அவள் .என் பணத்தை கொடுடீ என்று கேட்க,இவள் இல்லை என்று சொல்ல இந்தச் சண்டையில் அந்தத் தெரு பெண்கள் கூட்டம் கூடியதற்கு காரணம்.
“சத்தியம் பொங்கச்சோறு என்று தெரிந்த அவள்,“ இந்தா பாருடீ பணத்த நீ எடுத்துக்கிட்டு போனதை ஜோசியக்காரரிடம் மையோட்டம் பா்த்தேன். ஒழுங்கா பணத்தை கொடுடீ என்றாள். இவள்.
எதற்கும் பயப்படாத.மசியாத கொழுந்தனின் பொண்டாட்டிகாரி, தான் எடுக்கவே இல்லை என்று சாதித்தாள். இப்படியாக ரெண்டு பேரும் ஒருவர்மாத்தி ஒருவர் புழுதி வாரி தூற்றிக் கொண்டுவிட்டு ஒருவழியாக
தங்களின் வாய்ச் சண்டையை முடித்துக் கொண்டனர்.
மறுநாள் காலையில் பித்தளை அண்டாவை பறிகொடுத்த குடும்பத்தாரிடம் ஆயிரத்தை பறிகொடுத்தவள் சொன்னாள்.
“ஒங்க வீட்டு பித்தளை அண்டாவை தூக்கிய மாதிரிதான் என்னுடைய ஆயிரம் ரூபாய தூக்கிட்டா என்றாள்.
அந்தவீட்டு ஆம்பளை ஒருவர், ”உனனுடைய ஆயிர ரூபாயை அந்த பொம்பளைதான் எடுத்தாள்” என்று எப்படி கண்டு பிடிச்சே ” என்று கேட்டார்.
மையோட்ட ஜோசியரிடம் போயி பார்த்தேன். அதுல இவள் பணத்த எடுத்துகிட்டு போனது தெரிஞ்சது என்றாள்.
அப்போ, “ அந்த பொம்பள.உன் ஆயிரம் ரூபாய திருடிக்கிட்டு போனது, சினிம்,டிவி மாதிரி மையோட்டத்துல தெரிஞ்சுத்தா என்றார். நக்கலாக
சும்மா கிணடல் பண்ணாதிங்க..,மையொட்டத்தைப்பத்தி ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது. திருடியவங்களை மையோட்டத்துல பாத்து கண்டுபிடுச்சிலாம் என்றாள்.
சரி,அந்த பொம்பளதான் திருடியதை கண்டுபிடிச்ச பின்பு,பணத்தை வாஙகியாச்சா என்று கேட்டபோது....
எங்க கிடச்சது அவ திண்டு செமிச்சிட்டா..என்றாள் கோபத்தொடு...
ஏனுங்க...சாமிகளா....???? மையோட்டத்துல திருடினவங்களை கண்டுபிடிக்கலாம்லன்னா....போலீஸ் ஸ்டேசன் எதற்கு? துப்பு அறியும் இலாக எதற்கு?? குற்றப்பிரிவு எதற்கு??? விசாரனை என்ற பிரிவில் அடி உதை சாவு எல்லாம் எதற்கு???? சொல்லங்க.. சாமிகளா.....!!!!!
மையோட்டம் உண்மையானால் உலகில் திருட்டே நடக்காது !
பதிலளிநீக்குத ம 1
அது உண்மை இல்லேங்கிறதானே பிரச்சனை......
பதிலளிநீக்கு