வியாழன் 26 2014

மூக்கு கண்ணாடியை கண்டு பிடித்தவரை கண்டு பிடித்தவர்.!!!


படம்www.lastplace.com











சூரியனுக்கு எப்போதும் என்மேல் கோபம். அவரின் கோபத்திலிருந்து  கண்களை பாதுகாப்பதற்க்காக நான் வெளியில் போகும்போது பிரவுன் கலர் கூலிங்கிளாஸ் அணிந்து செல்வது வழக்கம்.

ஏன்? கருப்பு கண்ணாடி அணிய மாட்டீங்களா? என்று கேட்பவர்களுக்கு. எம்ஜீயார்,கருனாநிதி இவர்கள் மாதிரியானவர்களுக்கு கருப்பு கண்ணாடி  பட்டா போட்டு கொடுத்து இருப்பதால் நான் அணிவதில்லை என்று
சொல்லி விடுவதுண்டு.

நான் கண்ணாடி அணிவதை பிடிக்காத என் தெருவாசிகள் ஆண்பெண் இருவரும் பேதமில்லாமல் எனக்கு பின்னால் பொறணி பேசுவார்கள். அவர்கள் பேசுவது எனக்கு கேட்காததால்,  அவர்கள் வாய் அசைவதை பார்த்தும் பேசாமல் சென்று விடுவேன்.

அப்படி.ஒரு நாள் காலையில் சென்றபோது.  இரண்டு போலிகளின் கட்சிகளின் ஒன்றான இடது கட்சியில்  தோழராயிருந்து நண்பரான ஒருவர்.

என்னைக் கிண்டல் அடித்தார். “ இப்படி பெரிசுகளெல்லாம், கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு சிறுசுகளாக வேஷம் காட்டுறதலதான் இப்படி வெயில் காலையிலே கொளுத்துது என்றார்.

அய்யா, “என்னயிலிருந்து இடதுலிருந்து  கொய்யா கட்சிக்கு தாவுனிங்க என்றேன்.

நான் சொல்வதை புரியாமல் விழித்தார்.

யோவ்,  கொய்யா ராமதாஸ் கட்சிக்கு. எப்பய்யா போன என்றேன்.

நான் ஏன்? அந்த சாதி வெறி கட்சிக்கு போகப்போறேன் என்றார்.

பின்ன, அந்தாளு சொல்றதான, நீயும் சொல்ற .என்றேன்.

அந்த வெண்ண,சொல்ற மாதிரியா? இருக்கு என்றார்.

பின்ன. உன் கட்சி கொள்கை மாதிரி  பேசுறா...யாக்கும்   என்று கேட்டுவிட்டு நானே தொடர்ந்தேன்

ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு, அவுங்க சாதி பணக்கார பொண்ணுங்கள  காதல் என்ற பேருல மயக்குறாங்கேன்னு அந்த ஆளு சொன்னத.... நீ ஓங் கட்சி மாதிரி.. இந்த ஏரியாவுக்கு ஏத்த மாதிரி என்கிட்ட சொல்லு றீரு... என்றேன்.

ஹா......ஹா......ஹா.....ஹா............. என்று சிரித்தார்.

எதச் சொன்னாலும்.எப்படிச் சொன்னாலும் ஏதாவது ஒரு லொள்ளு--வ கண்டுபிடிச்சுரே...ய்யா என்றார்.

என்ன செய்யுறது. இந்த மர மண்ட கண்டுபிடிக்கிற மாதிரியில நீங்களும் சொல்லுறீக......

மண்ட தான் நறச்சு பொச்சு, அந்த மண்டக்கு டை அடிச்ச .. ஒன்ன பாக்குறவங்களுக்கு நீ இளவட்டமாக தெரிவே..... இந்த வயசிலேயும் மார்க்கண்டனாகவே இருக்க.......

யோவ். ஒன்ன மாதிரி ரெண்டு வீடு கட்டி, அந்த ரெண்டு வீடும் பாத்தாம வேலைக்கு வர்ரதுகளையும் சேத்துகிட்டு. லோ..லோ...லோன்னு அலஞ்சி கிட்டு இருந்தா  ...  நீயும் எப்படி என்ன  மாதிரி  இருப்பே.......

கல்யாணம் முடிக்காம...... தப்பு தண்டா...செய்யாமா  இருந்தா.... நீயும் மார்ககண்டன்தானய்யா என்று சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது.


இந்த மார்கண்டனை பார்த்து பொறாமை படுறது யாரு தோழரே!! என்று 
கேட்டு  மூன்றாவதாக ஒருவர் வந்தார்.

அய்யா...சாமி நானு கிழக்கு பக்கமா போகையிலே,. வெயிலு என் மேல் பட்டு உங்களையேல்லாம் கண்ணை சுறுக்கி பார்க்காமல் இருப்பதற்க்காக காதுக்கு பின்புறமாக உள்ள கழுத்து வலியையும் தாங்கிக் கொண்டு கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து வந்தால்....

சாதி வெறி கட்சித்தலைவர் கொய்யாபழம் சொல்ற மாதிரி சொல்லி என்னை கிண்டல் செய்றாய்யா இந்தப் பெருசு எனறேன். வந்தவரிடம்.

நீங்கள் அணிந்து வந்த கண்ணாடியை கூலிங் கிளாஸ்னு சொன்ன பெருசுக்கு பல்லும்பொச்சு சொல்லும் போச்சு..... இப்போ கண்ணும் போச்சு... அதான் மூக்கு கண்ணாடிய கூலிங்கிளாசுன்னு சொல்லுது பெருசு என்றார் வந்தவர்..

இடது கட்சி நண்பர் சொன்னார். ஏ...ய். எனக்கு கண்ணு நல்லாத் தெரியும் ஒனக்குத்தான் தெரியல.... என்றார்.

ஆமாமா,....ஒமக்கு நல்லாத் தெரியும் , மூக்கு கண்ணாடிய போயி.. கூலிங்கிளாஸ் கண்ணாடியின்னு சொல்லியிருந்தபோதே தெரியும். 
என்றவர் ஒரு பீடியை பற்ற வைத்தார்.

சரிப்பா.... ஓம் பார்வைக்கு மூக்கு கண்ணாடின்னே வச்சுக்குவோம். இந்த மூக்கு கண்ணாடிய கண்டுபிடிச்சது யாரு? சொல்லு என்றார் நண்பர்.

அட,கொக்கா...மக்கா...சத்தியமா.. நான் கண்டுபிடிக்கலப்பா என்றார். புகையை விட்டபடி

நானும், பதிலுக்கு, மூக்கு கண்ணாடிய நீங்க கண்டு பிடிக்கலைன்னா... மூக்கு கண்ணாடின்னு உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டேன.

பீடியை இழுத்து புகையை விட்டபடி மேல பார்த்தபடி யோசித்தார். யாருன்னு கண்டுபிடித்தவராக, தன் சட்டைப்பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து விரித்துப் பார்த்தார். பிறகு எங்களிடமும் காட்டினார்.

அதிலிருந்தவர் தன் மூக்கு கண்ணாடியுடன் தன் பல்லு இல்லாத பொக்கை வாயை காட்டி சிரித்தபடி இருந்தார்.

தோழரே, மூக்கு கண்ணாடி போட்டு இருப்பவரை, மூக்கு கண்ணாடிய கண்டு பிடித்தவாராக காட்டுறாரு... என்றார் நண்பர்.

ஆமாங்க,  சொல்றது சரிதாங்க!!! மூக்கு கண்ணாடி போட்டு இருப்பவங்க... தங்களுடைய பயன்பாடு முடிந்ததும் கழட்டி வச்சுருவாங்க.. ஆனா, ரூபா நோட்டல் இருப்பவரு, எப்பவாச்சும் மூக்கு கண்ணாடிய கழட்டி வச்சதை பாத்து இருக்கிங்களா??... நான்கூட வீட்டுக்கு போனதும் இவரு கண்டுபிடித்த மூக்கு கண்ணாடியை கழட்டி வச்சுருவேன்.... 

படத்து ல இருப்பவரு.... ரூபா நோட்ட இவரு மடுச்சு வைக்கும்போது, “ அய்யோ மூக்கு கண்ணாடி ஒடஞ்சபோகுமுன்னு பயந்து கழட்டி வச்சு இருக்காரா..என்றபோது..

ரெண்டு பேருமே.என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

தோழரே, வெயிலு, உண்மையிலே..உங்க மண்டையை பொளந்திருச்சு, எதுவும் ஆகிவிடறதுக்குல்ல.. போற இடத்துக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க....  என்று எனக்கு விடை கொடுத்தார் நண்பர்.

 இப்போதாவது கண்ணாடி அணிவது புரிஞ்ச்சேன்னு சொல்லி நண்பரிடமும், மூக்கு கண்ணாடியை கண்டுபிடித்தவரை கண்டுபிடித்தவரிடமும் விடை பெற்று சிரிக்காமல் நடக்க ஆரம்பித்தேன்.















7 கருத்துகள்:

  1. அப்பப்பா தாங்கமுடியலே !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. அபுதாபியிலேயும் வெயில் மண்டையை பொழக்குது.... நான் எதை மாட்டுறதுன்னு சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  3. இதிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால்...

    கூலிங் கிளாஸ் போட்டு செல்பவரை வம்புக்கிழுப்பது வேலியில் போகும் ஓணானை பிடித்து..................... ஒப்பாகும் !

    பேச்சோட பேச்சா மருத்துவருக்கே வலிக்காம பல் பிடிங்கிட்டீங்களே வலிப்போக்கன் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. திரு.பகவான்ஜீ...எது தாங்க முடியவில்லை,. மதுரையில அடிக்கிற வெயிலா...அல்லது கூலிங் கிளாஸ கண்ணாடிய ..மூக்கு கண்ணாடின்னு கண்டுபிடிச்சதையா.... நீங்களும் கூலிங்கிளாஸ் அணிந்திருக்கிங்க....

    பதிலளிநீக்கு
  5. திரு. கில்லர்ஜீ அபுதாபில வெயிலு மண்டைய பொளந்தாலும். நீங்க அந்த மண்டைக்கு எதுவும் அணிவதில்லை என்பதிலிருந்தே..ஏ.சியிலதான் இருக்கீங்கன்னு எனக்கு தெரிஞ்ச போச்சு,

    பதிலளிநீக்கு
  6. திரு. சாமானியன்...வேறு வேலை இல்லாததால்தானே. வேலியில போற ஓணான்கூட படிச்சு விளையாடுறாங்க..
    இதிலிருந்து வேலையில்லாம நிறைய பேர் இருக்காங்கன்னு தெரியுதுங்களா....

    பதிலளிநீக்கு
  7. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...