வெள்ளி 13 2014

வயிற்றுவலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத பெண்.

அவருக்கு நீண்ட காலமாக வயிற்றுவலி மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வரும்பொழுது வயிற்றுவலி மறைந்துவிடும். சில நாட்கள்.அல்லது சில மாதங்கள் கழித்து காணாமல் போன வயிற்றுவலி திரும்பவும் வந்து தொல்லை கொடுக்கும். திரும்பவும் மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்பொழுது மறைந்து விடும். இப்படியாக பத்து வருடங்கள் கடந்து வந்தார்.

பத்து வருடங்களாக வயிற்றுவலியுடன் சண்டையிட்டு கொண்டு இருந்த பொழுதில் ஒருநாள் வயிற்றுவலியின் ஆதிக்கம் அதிகமாயி அதன் கை ஓங்கி இருந்த நேரம்.

தனியார் மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, என்டோஸகோப்பி மூலம் வயிற்றை படம் பிடித்து பார்த்த பொழுது வயிற்றில் 46 செண்டிமீட்டர் அளவுக்கு புண்கள் ஏற்பட்டு இருந்தது.

பத்து வருடங்களாக  வயிற்று புண்ணால் அவதிப்பட்டு வந்தால் வயிற்றுப் புண் புற்று நோயாக மாறும் என்று மருத்துவர் சொன்னார்.

ஆனால். அவருடைய வயிற்றுப்புண் புற்று நோயாக மாறவில்லை என்றார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் வயிற்றுப புண்னை ஆற்றிவிடலாம் என்றார். இதோடு அவரிடம்   எந்தப் பழக்கமும் இல்லாததால் குறுகிய காலத்திற்க்குள்ளே சரி பண்ணி விடலாம் என்றார். மருத்துவர்.

இரண்டு வாரங்கள்  கழித்து  வீட்டுக்கு வரும்பொழுது வாரத்திற்கு ரெண்டாயித்துக்கான மருந்து மாத்திரைகளை ஒரு மாதத்திற்கு விடாமல் சாப்பிட்டு வருமாறு பணித்தார்.

பணக்கஷ்டம் இருந்தும்   முன்பு வாங்கி வைத்திருந்த சிறு சிறு நகை நட்டுகளை அடகு வைத்து மாத்திரை சாப்பிட்டு வந்ததினால்   சில மாதங்களாக வயிற்றுவலி தலை காட்டவில்லை.

நான்கு மாதங்கள் கடந்து ஐந்தாவது மாதம்  இடையில்  வேலையின் போது ஒரு வெயிட்டான  பொருளை தூக்கிய போது தலை காட்டாமல் இருந்த வயிற்றுவலி திரும்பவும் வந்து விட்டது.

இந்தத்தடவை மருத்துவம் பார்க்க, வருமானம் இல்லை. வந்த வருமாணம் வீட்டின் சாப்பாட்டு செலவுக்கே போதவில்லை. அரசு மருத்துவமனையைில்
சிகிச்சை கிடைக்காதால்தான் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லவும் மனம் விருமபவில்லை.

  தன்னைப் போல் கல்யாணம்  ஆகாமல் தியாகியாக  பேரு பெற்ற இன்னொரு வயிற்று வலிக்காரர் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மனத்தக்காளி கீரையை தினசரி உணவுடன் சேர்த்து  ஒரு வேளை உணவை இரு வேளையாக பிரித்து சிறிது சிறிதாக உண்டுவந்தார். முன்பு போல் கடுமையான வேலைகள் எதுவும் செய்யாமல்  இருந்துவந்தார்.

காலையில் எழுந்தவுடன் தாகம் இல்லாத போதிலும் இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு, சிறிது துாரம் நடை பயிற்சி செய்துவிட்டு அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ,வாங்கி வந்த செய்தி தாள்களை   படித்து கொண்டு நாட்களை கடந்து கொண்டு இருந்தார்.

இவர் வீட்டுக்கு எதிர் வீட்டீல் வாடகைக்கு குடியிருக்கும் நான்கு குழந்தைக்கு தாயான பெண் ஒருத்தி, அவரின் வயிற்றுவலியை பற்றி விசாரிப்பதும் சில ஆலோசனைகளை சொல்வதுமாய்  இருந்து அவருக்கு அருகில் வந்து அமர்ந்து அவர் படித்து முடித்த செய்தி பேப்பர்களை படிப்பதுமாய் இருந்தாள். சில நேரங்களில் அவளின் கனவனும் வந்தமர்ந்து வயிற்றுவலியை விசாரிப்பதும் அதனைத் தொடர்ந்து செய்தி தாள்களை படிப்பதுமாய் இருந்தார்கள்

ஒருநாள். அவரிடம், உங்கள் வயிற்றுவலி தீராதற்கு காரணம் என்ன வென்று தெரியுமா? என்று கேட்டாள் அவள்.

அவரும் எனக்கு  வயதாகிவிட்டது என்றும் சிறு வயதில் சரியான நேரத்திற்கு உணவு கிடைக்காமல்  கடுமையாக வேலை செய்தும் வங்கொலையா பட்னியாக கிடந்ததாலும் வயிற்று சுறுக்கத்தால் உணவு கிடைத்தும் சாப்பிட முடியாத காரணத்தையும் சொன்னார்.

இதெல்லாம் காரணமாக இருந்தாலும்  வேறு ஒரு காரணத்தால்தான் உங்களுக்கு வயிற்றுவலி வருகிற்து.  வந்தாலுமம்  தீர மாட்டுகிறது என்றாள்.

என் சிறு வயதிலிருந்தே என்னிடம் எந்தப் பழக்கமும் இல்லையே. பட்னியாய் இருந்ததைத்தவிர என்றார். வேறு என்ன காரணமாக இருக்கும் நீயே சொல்லு என்றார்.

உங்களை என் சிறு வயதிலிருந்தே எனக்கு தெரியும். உங்களிடம் எந்த பழக்கமும் இல்லையென்று... இந்த வயிற்றுவலிக்கு காரணம் நீங்கள் கல்யாணம் முடிக்காமல் இருந்ததுதான் காரணம் என்றாள்.

அப்படியா!! நான் கல்யாணம் முடிப்பதற்கு என் குடும்ப நிலை  இன்றைக்கு இருப்பது மாதிரி அன்றைக்கு இல்லையே என்றார். தொடர்ந்து அவரே பேசினார்.

“ கலியாணத்துக்கும் வயிற்றுவலிக்கும் என்ன சம்பந்தம் ”

நீங்கள் கல்யாணம் முடிக்காமல் இருப்பதினால்தான் உங்களுக்கு வயிற்றுவலி  வருகிறது. என்றாள்.  அவள் சொல்வதில் விபரம் ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அவளே, கல்யாணம் முடிக்கலேன்னாலும் யாரிடமாவது போயி சூட்டை தனித்திருக்கனும் என்றாள்.

அதெல்லாம் தப்பாச்சே என்று அவர் சொல்லிகிட்டு இருந்தபோது

அவள் கனவன் வந்து அமர்ந்து. ”ஏண்ணே, நீங்க கல்யாணம் முடிக்கல” என்று கேட்டான்.

இவர், அதுவா, அது பெரிய கதை என்றார்.என்னைப் பார். நான் அழகா இருக்கேனா.. என்று  கேட்டார்.

”அழகாய்த்தான் இருக்கீங்க ” ஏன் ?கேட்டிங்க   என்று அவன் கேட்டபோது.

இந்த அழகன் ஒரு ஒலக அலகியை  காதலித்தான்.. அந்த ஒலக அழகியை வேறு ஒருத்தன் கட்டிக்கிட்டான். அதிலிருந்து இந்த அழகன் அவள் நிணைவாகவே இருந்ததால் கல்யாணம் முடிக்காமல் மறந்து போய்விட்டான் என்றார் அவர்.

 அவன்.“நிஜமாகவா ணே என்று கேட்டபடி, அவன் மனைவியைப் பார்த்தான் .

அட, நிஜமாத்தான்யா....பொய்யா சொல்லப்போறேன் என்றார் அவர்

அவனின் மனைவி, சிரித்துக் கொண்டே, பொய் சொல்றார். காதல் கீதல் எதுவும்  கிடையாது , அதப்பத்தி அவருக்கு  தெரியாது ..  வேலை வேனை்னு அலைஞ்சகிட்டு இருப்பாரு. இவர் காதல் பன்னியிருந்தா எங்களுக்கு தெரியாம இருக்குமா?? என்றாள்.அவள்.


அவன் மனைவி சொன்னதை கேட்டுவிட்டு, திரும்பவும்  அவன் அவரிடம் கேட்டான்.

.மாமா மகள்கள், அத்தை மகள்கள் யாரும் இல்லையாணே என்றான்.

மாமா மகள்கள் எனக்கு மூத்தவர்களாக இருந்தார்கள். அத்தை மகள்களும் எனக்கு மூத்தவர்களாக இருந்தார்கள். அவர்களை என் தந்தையின் தம்பிகள் அவர்களை கட்டிக்கிட்டார்கள் என்றார்.

அண்ணே , ரெம்ப கொடுமை ண்ணே என்றபடி, வேலைக்கு செல்வதாக ,சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். அவன் பின்னே சென்ற அவள்  திரும்பி வந்து சாப்பிட்டாச்சா என்று அவரிடம் கேட்டாள்.

உங்ககிட்டதானே இந்நேரம் வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள சாப்பிட்டாச்சா என்று  கேட்டா என்ன அர்த்தம் என்று கேட்டார்.

ஆமாமா... பழக்கத்திலே கேட்டுட்டேன். என்றாள். நீ வேலைக்கு போகவில்லையா என்று அவர் கேட்டபோது, வேலை இல்லை என்றும் இவர் வேலைக்கு போகக்கூடாது என்கிறார் என்றாள்.

காலை உணவு ரெடி என்ற தகவல் வந்ததும். அவளிடம் சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

சாப்பிட்டுவிட்டு அப்படியே வீட்டுக்குள்ளேயே அமர்ந்துவிட்டார். மாலையில் பழைய இடத்தில் வந்து அமர்ந்தார். பள்ளிகூடம் சென்ற பிள்ளைகள் , இவர் வீட்டின் பின்புறமாகத்தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.. இவர் அமர்ந்திருந்தபடியே அவர்களைப பார்ப்பதும், அவளின் மகன் இவரிடம் வந்து அமர்ந்து விளையாடுவதும் இருந்தான்.

அவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் அவள் வந்தாள். கை செய்கையால் வயிற்றுவலியை பற்றிக் கேட்டாள் இவருக்கு எரிச்சலாக இருந்தாலும் இலேசாக வலித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.

உங்க வயிற்று வலி தீர, ஒரு வழியிருக்கு, ஆனா அதுக்கு காசு செலவழிக்கனும் என்றாள்.

எல்லா வைத்தியமும் பார்த்தாகிவிட்டது. இதற்கு ஒரே மருந்து. நேரம் தவறாமல் ஒரப்பு, புளிப்பு இல்லாமல்  சாப்பிடுவதும், வெயிட் துாக்காமல் இருப்பதும் கவலைப்படாமல் இருந்தால் வயிற்றுவலி  குணமாகும் என்றார்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் நான் சொல்வதும் நடந்தால்தான் வயிற்றவலி தீரும் என்றாள்.

நீ சொல்ற வழி! என்னவழி ! என்றார். ஒங்களுக்கு விளக்கமா சொல்லனும் போல... என்றாள்.  புரியாமத்தான் கேட்கிறேன்   சொல்லு என்றார்.

சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு ,மெதுவாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் வாய் பொளந்தார் அவர். அப்படியா..! யார் கிடைப்பா...... அப்படியே கிடைத்தாலும் காசும் இடமும்  வேண்டுமே இந்த வழியெல்லாம் எனக்கு ஆகாதும்மா. வேறு வழி இருந்தா சொல்லு என்றார்.

இவர்கள் குசு குசு  வென்று பேசிக் கொண்டு இருப்பதைப்பார்த்து அவளின் அக்கா , அருகில் வந்து  “என்ன பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்” என்று கேட்டாள்.

 சும்மா பேசிக் கொண்டு இருப்பதாகவும் செல்போனில்  அவளுடைய மகன் படத்தை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும்  தெரிவித்தாள்.  வேறு ஒரு பெண் அவளை கூப்பிட்டதும்அவளின் அக்கா சென்றுவிட்டாள்.

“என்ன நான் சொன்னது புரிஞ்சுச்சா” என்றாள்.

அவர் தலையாட்டிக்கொண்டு, ”ஆசையிருக்கு தாசில் பண்ண, ஆனா அதிர்ஷ்டம் இல்லையே” என்ன செய்ய என்று அவர் சொன்னபோது புரியாமல் அவள் விழித்தாள்.

காசு பணத்துக்கு எங்கே போவேன் என்று அவர் சொன்னபோது,. ஆஸ்பத்திரிக்கு மட்டும் பத்தாயிரம் இருபதாயிரம்ன்னு செலவழிக்கிறீங்க நிரந்தரமாக வயித்துவலி தீக்கிறதுக்கு ஆயிர ரூபா செலவழிக்க  காசு இல்லியாக்கும்   என்று அவள் சொன்னபோது

ஊசலாடியபடி இருந்தவர் சபலத்துக்கும் வயித்துவலி தீர்ந்துவிட்டால் நல்லது அல்லவா?  என்றும் ஆசைப்பட்டார்.

சரி, அந்த ஆஸ்பத்திரிக்கு செலவழித்தது மாதிரி, இந்த ஆஸ்பத்தரிக்கும் கொடுத்திடலாம். இடத்துக்கு எங்கே போவது என்றபோது......

இடத்துக்கு ஒன்றும் கவலையில்லை. மோதல்ல காச கொடு, மற்றது நானாச்சு என்றாள்.

இப்பவரைக்கும் “ங்“ என்று மரியாதையாக பேசியவள். தான் சரி, என்றதும் ஒருமையில் பேசுகிறாளே என்று ஒரு கணம்  நிணைத்தார்.

சரி,ரெண்டு நாள் பொறு நீ கேட்ட பணத்தை ரெடி பண்ணி  வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு ரெண்டு மூனு நாள, அவள் சொன்னதின் ஞாபகத்திலே பித்து பிடித்து போய் இருந்தார்.   அதிலிருந்து அவருடைய வேலை ஒழுங்கு முறை அடியோடு குலைந்தது.  சபலத்துக்கு ஆட்பட்ட நாயாய் போனார்.

அவளை பார்க்கும் போதெல்லாம் இவருடைய பார்வையும் மாறியது.. அவளும் இவருக்கு போதை ஏற்றினாள். அவள் அவளுடைய வீட்டீற்குள் இருக்கும்போது இவர் பார்த்தால் மாராப்பு இல்லாமல் இருப்பதும்  உள்ளாடையுடன்  இவருக்கு கா்ட்சி அளிப்பதுமாய் இருந்தாள்.

“கானாதவன் கண்டவன் மாதிரி” என்ற பழமொழி இவரப் பார்த்துதான் சொன்னார்களோ...... என்னவோ,  காணாததை கண்டு ரெம்பவுமே பித்து பிடித்து போய்விட்டார்.

தன்னுடைய வயிற்றுவலி தீர வேண்டும் என்ற தீவிர ஆசையில் முன்பின் விளைவுகள் எதுவும் தோன்றவில்லை, குடிக்காத மயக்கத்தில் இருந்தார்.

ஒரு வழியாக  , அவளின் நச்சரிப்பு தாள முடியாமல்    கடன் வாங்கி ஆயிரம் ரூபாயை கொண்டு வந்து அவளிடம் கொடுத்து , எப்போது வச்சுக்கிறலாம் என்றார்.

பொறுமையா....இரு. நான் சொல்றேன். என் வீட்டிலேயே வச்சுக்கிறலாம் . யாருக்கும் தெரிந்திடக்கூடாது. யாரும் இல்லாத போது  சொல்றேன் அப்போது வச்சுக்கிறலாம் என்றாள். அவர் கொடுத்த பணத்தை மராப்பை விளக்கி தன் அங்கங்களை அவர் பார்க்கும்படி, இடது பக்க ஜாக்கெட்டுக்குள் வைத்தாள் .

சபலத்துக்கு ஆட்பட்டு மயக்கத்தில் இருந்தவருக்கு  அதைக் நேரில் கண்டதும் மெய்சிலிர்த்துப்போனார்.

மறநாள் காலையில் அவளை பார்த்தபோது அவளைக் காணவில்லை. அவள் வீடு பூட்டியிருந்தது. மாலையில் பார்த்தபோது  வீடு பூட்டியிருந்தது. மறுநாள் காலையிலும் பார்த்தபோதும் வீடு பூட்டியிருந்தது. அவளின் அக்காவிடம் கேட்டபோது . விசேசத்திற்க்காக ஊருக்கு சென்று இருக்கிறாள். வருவதற்கு ஒருவாரம் ஆகும் என்று சொன்னாள் அவள்.

சபல மயக்கத்தில் இருந்தவருக்கு லேசாக பொறி தட்டியது. அவள் ஊருக்கு போக காசு வேண்டிதான் அவள் தன்னை சபலத்துக்கு ஆட்படுத்தி விட்டாளோ என்று தோன்றியது. வந்த பொறியும்  காணாததை காணப்போகும் சபலத்தால் அந்தப் பொறியும்  வந்த வேகத்திலே மறைந்து போயிற்று.

ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவள் வீடு பூட்டியே கிடந்தது.என்னவென்று தெரிந்து கொள்வதற்க்காக  அடுத்த வீட்டாரிடம் கேட்டபோது.

அவளின் அக்காவுக்கும், அவள்  வாடகைக்கு குடியிருந்த   வீட்டுக்காரியின் மகனுக்கும் அடிதடி சண்டையானதால் அவளை உடனே வீட்டைக் காலி செய்யச் சொல்லி அவள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் கொடுத்துவிட்டார்கள்.

ஊருக்கு போனவள் திரும்பி வந்தபோது இரவோடு இரவாக வீட்டைக் காலி செய்து  அய்ந்தாறு தெரு தள்ளி  மாடியில் உள்ள வீட்டுக்கு குடி போய்விட்டாள்  என்று தெரிந்தது. குறிப்பாக எந்த வீடு என்று தெரியவில்லை அவருக்கு.......

ஒரு மாதம் கழித்து யாரிடமும் விசாரிக்காமல் , புதிதாக குடியிருந்த அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டார். வீட்டிற்கு சென்றபோது அவளின் கனவன் இருந்தான். இவரைக் கண்டதும்

வாங்கண்ணே ! வாங்கண்ணே!என்று வரவேற்றான். வீடு காலி பண்ணின விபரத்தை சொன்னான். அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , அவன் மனைவியை கானாததால் அவளைக கேட்டார். அவள் அம்மா வீட்டீற்கு சென்றதாக சொன்னான். நான் வந்து போனதாக சொல் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து  காலை  பதினோறு மணி வாக்கில் அவரது செல்லுக்கு  ஒரு போன் கால்வந்தது. அவள்தான் பேசினாள்.

நான்தான் பேசுகிறேன் என் வீட்டுக்கு வரவும் என்று சொன்னாள். ஆவல் மேலோங்க அவர் சென்றார். குளித்து முடித்து அழகாக கா்ட்சி அளித்தாள். அந்தக் அழகைக்கண்டவுடன் இந்த அழகில்லாதவனுக்கு இந்த அழகியா.... நமக்கும் அதிர்ஷ்டம இருக்கிறது என்று சந்தோசம் கொண்டார்.

அவளிடம்  ஆசையாய் நெருங்கியபோது, வேண்டாம் பக்கத்து வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். அதுவும் இப்பொழுதுதான் குளித்தேன். இரவு பத்து மணிக்கு வா..!!  என்றாள். அவள் கனவனை பற்றி கேட்டபோது வெளியூர் வேலைக்கு சென்று விட்டதால் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்றாள். அவருக்கு ரெம்பவும் சந்தோசமாக இருந்தது.

அப்படிச்சொல்லிக் கொண்டே உரிமையுடன் அவரின்  சட்டைப்பையில் கையைவிட்டு  அதில் இருந்த இறு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு  பத்து மணி ! மறந்து விடாதே! என்றாள்.

சே... ஏமாத்திட்டா.. ன்னு...சந்தேகப்பட்டமே என்று தனக்கத்தானே சொல்லிக் கொண்டு , இரவு பத்து மணியை  எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்

இரவு  ஒன்பது  ஆயிற்று ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் . அவள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையின் அருகில் நின்று கொண்டு பத்து மணிக்காக காத்துக் கொண்டு இருந்தார்.

அவளின் வீட்டை பார்த்துக் கொண்டு இருந்தவர்க்கு, கொஞ்சம் திகைப்பாக இருந்தது. அவளும், வேறு ஒருவரும் இவர் நின்று கொண்டு இருந்த கடைக்கு வந்து கொண்டு இருந்தார்கள். இவர் அவர்கள் வருவதைக் கண்டதும் கடையைக் கடந்து  இருட்டான பகுதியில் நின்று கொண்டு அவர்களை கவனித்தார்.

அவருடைய செல் ஒலித்தது. அவள்தான் பேசினாள்.. அந்தக் கடையிலுள்ள ஒரு ரூபா காயன்ஸில்  அவள் பேசுவதை கவனித்தார். இன்னைக்கு வர வேண்டாம், என் வீட்டுக்காரரின் தங்கச்சி  வந்திருக்காங்க... அதனால நீ வர வேண்டாம் என்றாள்.

இவர் நிஜமாகவா,... பொய் சொல்லலியே என்றார்

சே...சே.....ஓங்கிட்ட பொய் சொல்வேனா..... காலையில நான் போன் பன்னுறேன் அப்ப வா........ என்றாள். தப்பித்தவறி வந்திடாத... பிரச்சினையாகிவிடும்  எச்சரிக்கை செய்து  விட்டு போனை வைத்தாள்..பின் அருகில் நின்ற நபரை கூட்டிகிட்டு தன் வீட்டிற்க்குள். சென்றாள்.

இவருக்கு ஏமாற்றமும் கோபமும் வந்தது.  அந்தக் கடையின் வழியே வந்து சிறிது நேரம் நின்று விட்டு, சோகத்துடன்  தன் வீடு வந்து சேர்ந்தார்.

அடுத்து.............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...