பக்கங்கள்

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 12 2024

நான் கண்ட கனவு எனக்கு பலித்தது....1


புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கும்போது செல் ஒலி எழுப்பி விடுகிறது.. யாராச்சும் வரச் சொல்லி பேசுவாங்க.. வருவதற்கு ஒரு நேரத்த சொல்லி செல் போன நோண்டிகிட்டு இருக்கும்போதே திரும்பவும் தலை ஆட்டம் கண்டுவிடும். திரும்பவும் படுத்து சிறிது நேரம் தூங்குவேன்..

பகலில் நாயாய் மாடாய் அலைந்து விட்டு, இரவில் ஏழு மணிக்கு தொடங்கின்ற வேலை இரவு மூன்று மணிவரை முடியும். சில நேரங்களில் அந்த வேலை முடிந்துவிடும் .சில வேளைகளில் முக்கால் பங்கு வேலை முடிந்துவிடும் கால் பங்கு வேலை பாக்கியிருக்கும் அந்த வேலையை முடித்து விட்டு தூங்கலாம் என்று எண்ணிலாலும், தயார் படுத்தினாலும் முடியாது சோர்வு தட்டி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு.

கொரனா காலத்திலும் கொரனா முடிந்த காலத்திலும் வேலை இல்லாத காரணத்தால் வேலை பார்த்து வந்த மருமக,மருமகன்கள் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் ஒரே ஆளாக பகலில் அலைவதும் இரவில் வேலை செய்வதுமாக  பழகிக் கொண்டேன்.

உண்ணுவதும் உறங்குவதும் விதிப்படி இல்லாமல்  வேலையின் நிலைமையை ஒட்டி மாறிவிட்டது.  ஒற்றைவழி வரும் வருமானத்தை வைத்தே ! கொரோனா வுக்கு முன் வாங்கிய  மிஷின் லோனும் . எனது சாப்பட்டுக்கும்  யாரிடமும் கையேந்தாமல் பயன் படுத்தி வருகிறேன்.

 வேலை இருக்கும் நாளெல்லாம் வேலை நாள்.. வேலை இல்லாத நாளெல்லாம் விடுமுறை நாட்கள்...அந்த விடுமுறை நாட்களில்தான் எத்தனை வேலைகள்

துணி துவைப்பது. இரு சக்கர வாகனத்தை பராமரிப்பது... அலுவலகத்தை சுத்தம் செய்வது இப்படி  வரிசையாக வேலை வந்தபடியே இருக்கும்.

தனிமரம் தோப்பாகாதுதான். என் அக்கா பிள்ளைகளை வளர்த்து அவர்களை ஆளாக்கி தனித்தனியாக செட்டில் ஆக்கி விட்ட காலம் அதிகம் கடந்து விட்டதால் ..நான்தோப்பாகுறதுக்கு எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இருப்பினும் அதற்க்காக நான் வருத்தப்படவும் இல்லை ஏக்கப்படவுமில்லை.

தனிமரமாக இருந்து வாழ்ந்து மடிவதுதான் என் நிலைமை என்றாகிவிட்டதால் அதற்க்காக கவலைப்படுவதுமில்லை. இருக்கும் வரை ஓடிக் கொண்டிருப்பேன்.

பகல்  நேரத்தில் தூங்கும் குட்டி தூக்கத்தினால் கனவு எதுவும் வருவதில்லை. செய்து கொண்டு இருந்த வேலைதான் மண்டைக்குள் குடைச்சலாக இருக்கும் இரவு இரண்டு மூன்று மணிக்கும் தூங்கும் நேரத்தில் தான் எனக்கு கனவு அதிகமாக வரும் அப்படிவரும் கனவுகள் சில நினைவுக்கும் வரும் பல நினைவுக்கு வராமல் மறைந்து   சம்பவம் நடந்து முடிந்த பின்தான் கனவாக வந்தது நினைவுக்கு வரும்.

கண்ட கனவுகளில் பத்துக்கு எட்டு ஒன்பது கண் முன்னே நடந்துவிடும். ஒன்று இரண்டு கனவுகள் நடந்து முடிந்து பின்புதான்....

அம்பானி. அதானி,டாட்டா. பில்லா மாதிரியான பணக்கார அதிபதிகளாக ஆகும் கனவெல்லாம் வந்ததில்லை..இனி வரப்போவதுமில்லை..அந்த கனவுக எல்லாம்  வந்தாலும் பலிக்கப் போவதில்லை.

இப்போதிலிருந்து

கனவு-1

என்னைத் தேடி இரண்டு காவலர்கள் வருகிறார்கள். என் வீட்டுக்கு வரும் தெருப் பாதை இருட்டாக இருப்பதால்  செல்போன் டார்ச்லைட்டில்  என் வீட்டிற்கு வருகிறார்கள். உறங்கி கொண்டியிருக்கும் என் முகத்தில் டார்சலைட் வெளிச்சத்தை அடித்தவாறே என்னை எழுப்பினார்கள்.  திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தேன். தூக்கம் கலையாமல் என்ன விபரம் என்றேன். எழுந்து வெளியே வரச் சொன்னார்கள்.

துண்டால் முகத்தை துடைத்துவிட்டு மேல் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தபடியே என்ன விபரம் என்று கேட்டடேன். என்மீது புகார் கூறப்பட்டதாக அதை விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். புகாரை தெரிவித்தார்கள் என்ன புகார் என்று தெரியவில்லை. நான் மறுத்தேன் தெருவில் உள்ள பாப்பாத்தி மக மகன்கள்  என்னை சுட்டிகாட்டி வந்த காவலர்களிடம் புகார்களை தெரிவித்தார்கள். நான் என்னவென்று தெரியாமல்  முழித்தேன்.. சிறிது நேரத்தில் காலர்களில் ஒருவர் என்னை நிலையத்துக்கு வரும்படி கையோடு அழைத்து சென்றார். திடிரென்று ஒன்னுக்கு வரவே உறக்கத்திலிருந்து விழித்துவிட்டு வேகமாக கழிப்பறையை நோக்கி ஓடினேன். கழிப்பறையில் சாமி கும்பிட்டுகிட்டு இருக்குபோது கனவில் வந்தவை வரிசையாக வந்தன. என்ன புகார் மட்டும் தெரியவில்லை. வந்த கனவுப்படி எதிர்ப்பாரத்தபடியே இருந்தேன்

காலையில் கண்ட கனவு அன்று இரவு நடப்புக்கு வந்துவிட்டது.

நான் வெளியில் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணி வாக்கில் என் வீட்டுக்கு வந்தபோது என் வீட்டு மேற்கு புறத்தில் பாப்பாத்தி. மகள்களில் இருவர். மகன் இருவர் பேரன் பேத்திகள் கூட்டமாக குழுமியிருந்தனர்.  என்னவென்று நான் விசாரித்தேன். என் பேத்தி வளர்க்கும் இரண்டு நாய்களில் ஒன்று பாப்பாத்தி கடைசி மகளின் மகனை அதாவது பேரனை கடித்துவிட்டதாம்.. நாய் கடித்த காயத்தை பார்க்கலாம் பாப்பத்தி பேரனை கூப்பிட்டேன். மறுத்துவிட்டார்கள். பின் நான் என்ன செய்யவேண்டும் என்றேன். ஒன்னும் செய்ய வேண்டாம் என்றார்கள். சிறிது நேரத்தில் இரண்டு போலீஸ் கனவில் கண்டபடி செல் அடித்தபடி  என்னிடம் வந்தார்கள். அவிழ்த்து விட்டுஇருந்த சட்டை பட்டனை மாட்டியபடி நான்தான் என்றேன். வந்தவர்கள் இரண்டு பேரும் சவுண்டு விட்டார்கள் நாய் வளர்த்தால் கட்டிபோட்டு வளர்க்கனும் என்றார்கள். நான் அமைதியாக வீட்டுக்குள்ளே கட்டிபோட்டுத்தான் வளர்க்கிறேன். ஒன்-பாத் போவதற்க்காக நாய் வந்தபோது கடித்தவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்றுவிட்டு அமைதியானேன்


சிறிது நேரத்திற்கு பிறகு வந்த காவலர்களில் ஒருவர் சொன்னார். நாய் கடித்துவிட்டது. அதற்குண்டான ஆஸ்பத்திரி செலவை கொடுத்துவிடுங்கள் என்றார். சரி என்றேன். வந்தகாவலர்கள்  என் பெயர் வயது அப்பா பெயர் கேட்டவர்கள் சாதியை கேட்டார்கள் தோழர் என்றேன். பதில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். பாப்பாத்தி கடைசி மகளிடம் ஆஸ்பத்திரிக்கு சென்று எவ்வளவு என்று சொல் ஜிபே-ல் அனுப்பி வைக்கிறேன்.என்று விட்டு அப்பாடா ஒரு கனவு பலித்துவிட்டது என்று பெருமூச்சு விட்டபடி..ஆஸ்பத்தரி தொகையை எதிர்பார்த்தபடி காத்திருந்தேன்.

சனி 21 2019

இது ஆசையில்லை பெரும் பேராசை....



பேராசை பிடித்த காக்கா க்கான பட முடிவு




வணக்கம் நண்பரே..... என்ன இந்தப் பக்கம்....!!!

உங்களை பார்க்கத்தான்..இந்த பக்கம்..

என்ன விசயம் சொல்லுங்கள்...

ஒன்றுமில்லை.. இந்த செல்லில் வந்த பேச்சைக் கேளுங்கள்..


சரி..கொடுங்கள்...கேட்கிறேன்....

.....................
.......................

.......................


யாரு  இது  இப்படி வசவு....உங்களுக்காக...??!!!

ஆம்..எனக்குத்தான்.... யாரதுஎன்று எனக்கு தெரியவில்லை... அந்த வசவின் சாரத்தை அதாவது விளக்கத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்.. அதற்குத்தான் உங்களை பார்க்க வந்தேன்.. என்னைப்பற்றி  நன்றாக அறிந்தவர்கள் அல்லவா தாங்கள்......!!!!!!!!!

அப்படியா...???? செல்லை கொடுங்கள் திரும்பவும் ஒரு தடவை கேட்டுச் சொல்கிறேன்....

இந்தாருங்கள்.....

............................

..................................

.....................................


நண்பரே..! இந்த வசவு உங்களுக்கு அல்ல.... வேறு ஒருத்தனுக்கான வசவு நம்பர் மாறி வந்துவிட்டது.... மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் அந்த ரிக்கார்டு பதிவை அழித்துவிடுங்கள்.... நானே அழித்துவிடட்டுமா...?
விபரத்தை சொல்கிறேன் பொறுங்கள்...

சரி..அழித்துவிடுங்கள்....

நண்பரே... இது கள்ளக் காதலால் வந்த.... சாரி..சாரி... உங்கள் பாசையில் காதலன் காத்திருந்த காதலியை தவிக்கவிட்டு விட்டதால் வந்த கடுங்கோப வசவு நண்பரே !

அப்படின்னா....!!!

இதுக்குத்தான் நான் உங்களுக்கு அடிக்கடி சொல்றது.... ஒன்னு நீங்க காதலிக்கனும் இல்ல .கலியாணம் பன்னியிறுக்கனும்.. அப்படி பன்னியிருந்தா  உங்களுக்கு நான் சொல்வது புரியும்...

உங்களுக்கு  கிடைச்ச டிமாதிரியான வாய்ப்பும் வசதியும் எனக்கு கிடைக்கலையே  தலீவா....

இப்படிச் சொன்னா எப்படி...நண்பரே!!

உண்மையைத்தானே சொன்னேன்..வயசாயிடுச்சு ...என்னை நம்பி பத்து டிக்கெட் இருக்கு.... தொழில் வேற..அவ்வளவு சிறப்பா  இல்ல..இதுல காதல்....கல்யாணமுன்னு   ......

இத ஒன்ன சொல்லிருங்க  நண்பரே..!   அப்ப பாத்திங்க....  இப்பவுமா....???அவுக அவுக சுமைய அவுக அவுககிட்ட  ஒப்படச்சிடனும் நண்பரே...!.. உடனே..என்ன உதாரணமா காட்டி சொல்லாதிீங்க....

சரி.சரி...உங்க பாதையிலே வரேன்... வீட்டோட மாப்பிளையாக இருக்கிற மாதிரி ஒரு பொண்ண பாருங்க... என் தொழிலு..வீடு எல்லாத்தையும் அவுக அவுகட்ட விட்டுட்டு போயிடுறேன்...


இது பேராசை நண்பரே.....!!


ஆசையே படதாவனை ஆசை படுங்கன்னு சொல்றிங்க  ஆசை பட்டா பேராசைங்கிறீங்க....

இது ஆசையில்ல நண்பரே..! பெரும்.. பேராசை... உங்கள் பேராசை நீராசையாகிடும் நண்பரே...!!!

(எதையோ கேட்க..எங்கயோ  போகுதே)

திங்கள் 16 2019

கனவல்ல நிஜம்.....




உளைச்சல் க்கான பட முடிவு



தொழில் முடக்கம் கடன் பிரச்சினை, இடப் பிரச்சினை,உடல் பிரச்சினை இப்படி.... இப்படி பல பிரச்சினைகளில் அல்லாடி வந்தநிலையில் ஓரளவுக்கு அஞ்சாமல் சிறு நடைபோட்டு தெம்பு வந்த நிலையில்....கணினியை திறந்து என்ன செய்யலாம் எதை பதிவிடலாம் என்று யோசிக்கையில்  ஒன்னுமே நினைவுக்கு வரவில்லை..நேற்றைய தினத்திலிருந்து ஒவ்வொன்றாக யோசித்தபோது காலையில்  ஊர் பேர் முகம் தெரியாதவரிடம் சம்மதமே இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டது வந்து நின்றது... சரி ..அதை எழுதுவோம். என்று  தோன்றியது.. தோன்றியதை உடனே செயல்படுத்தினேன். அப்புறம் எழுதுவோம் என்றால். மறந்துவிடும். அதோடு கணினியில் உட்கார இடம் கிடைக்காது.. என்பதால் சூட்டோடு சூட்டாக எழுத ஆரம்பித்தேன்

காலையில் விடாமல் அடித்த செல்போனின் ஒலிகேட்டு கண் விழித்தபோது
சிறுநீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது...எழுந்து அவசரமாக வந்த சிறு நீரை கழித்துக் கொண்டு இருக்கும்போதே சாமி வேறு இரண்டாவதாக அருள் வந்து நின்றது.( சாமி என்பது  மலம்) அருள் வந்து சாமி வந்தால் அதை அடக்ககூடாது என்பது ஐதீகம்,  எந்த சிக்கல் வந்தாலும் மலச்சிக்கல் வரக்கூடாது என்று ஆறு அடி,ஏழு அடி உயரமுள்ளபெரியோர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு... கோயில் கருவறையான  கழிப்பிட அறைக்குள் சாமியையும் கும்பிட்டு தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு வருவதற்குள் சத்தம் எழுப்பிய போன் ஒலி நின்றுவிட்டது. செல்போனை நோண்டி  பார்த்தால் பத்து தடவை ஒலித்ததை காட்டியது..யாரென்று தெரியவில்லை.யாரா இருக்கும் என்பதும் தெரியவில்லை போனில் சேமிக்காத எண்ணாக இருந்தது..ட்ரு காலர் அப்பீ என் போனில்இல்லை..

பத்து  தடவை சலிக்காமல் அடித்திருக்கிறார்கள்... நாம் திரும்ப அடித்து கேட்போம் ஏன்? எடுக்கவில்லை என்று கேட்டால் .இருக்கவே இருக்கிறது..ரெடிமேட் பதில்” எனக்கு காது அவுட்டு ”என்பது, இந்த பதிலை ஏற்கவில்லை என்றால்..போனில் சார்ச் இல்லை என்று இப்படி ஒன்றிரண்டு பதிலை தயாரித்துக் கொண்டு..வந்த மிஸ்டு கால் நம்பரை தொடர்பு கொண்டேன்.

சட்டென்று எடுத்தார் ஒரு பெண்... நான் யாரென்று கேட்பதற்குள் சரமாறியான வசவுகள்...  நான் பேசுவதை கேட்க தயாரில்லை...கடைசியாக வசவுகளுக்கு பின் அந்தப் பெண் சொன்னதுதான் என் மண்டைக்குள் நின்றது. அதாவது. உன் உறவும் வேணாம் உன் ஒட்டும் வேணாம்.நான் ஏமாந்தது போதும்.. இனிமேல் என் வீட்டுக்கு  பல்ல இளிச்சிகிட்டு வந்திடாதே!... மீறி வந்தே! உன் மானத்த வீதிக்கு வந்து நாறடித்துவிடுவேன்.. .வைய்யிடா  போன... என்றுவிட்டு இணைப்பை துண்டித்தார்..

என்னடா..இது.... இருக்கிற உளச்சல்ல . இருந்து இப்பதான் மீண்டு வரேன்.இதுல கண் காணதா உளச்சல் வேறா.... என்று நானும் எனக்குள்ளே சிறிதுநேரம் என்னை திட்டிய பெண்னை நானும்  திட்டி புலம்பி  என் கோபத்தை  அடக்கிக் கொண்டேன்...கோபத்தை அடக்க கூடாது என்பதால் நானாக திட்டிக் கொண்டேன் நல்லவேளை... வீட்டில் உள்ளவர்களுக்கு நான் திட்டியது கேட்கவில்லை... இன்னும் கோபம் அடங்காமல் நம்மளைத்தான் . திட்டுகிறேன் என்று நிணைக்கவில்லை...

கடந்த மாதங்களில் இருந்து அக்கா. மச்சான் மருமகன் மருமகள் எல்லாருக்கும்  இறந்து போன என் அம்மாவுக்கும் சேர்த்து டோஸ் விட்டு கோபத்தில் எல்லாரையும் திட்டிக்  கொண்டு இருந்தேன்... கடனும் செலவும் அவர்காளல் அதிகமானதால் வந்த ஆத்திரம்......கெட்டு போன பிறகுதான் புத்தி வரும் என்பது மாதிரி  வரவு-செலவில் நான் கறார் காட்டாமல் விட்டதால் வந்த வினை...

அதில் ரிலாக்ஸ் ஆகி வந்தால்....கனாக்கடி மாதிரி..கனா வசவு  போல......அடுத்த ஒரு உளச்சல்....ஏற்கனவே..மோடி..அமித்சா...ஆட்சியில் பல  புற உளச்சலை ஏற்படுத்தியது போல..இது அக உளச்சலு போல............






ஞாயிறு 18 2019

அதிகாலை கனவு-50.














செத்து போவது எந்தன் உடம்பு மட்டுமே க்கான பட முடிவு


க...க..கதை கேட்பதில் ஆர்வம்தான்...


தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ,
 நண்பர்களோ.வேறு சிலரோ..
கதை சொல்லும்
போது,. கதை
கேட்பதில் ஆர்வம்தான். ....
 ஆனால் அப்படி
கேட்ட கதைகள்
அதிகாலை கனவில்
வந்து கொல...
கொலய்யா..முந்திரிக்கா...
என்பேரு கத்திரிக்கான்னு
 மறக்காமல் வந்து
ஆட்டம் போடுவதிலிருந்து
தப்பிக்க முடியவில்லை..

அப்படி வரும்
கதைகளில் கதாநாயகன்
வேறு நபராக
இருந்தாலும்..ஏதோ.
.நான் அதில்
சம்பந்தபட்டு   பக்கத்தில்
 இருந்து பார்ப்பது
போல் தோன்றுகிறது....

 இதுவும் காலத்துக்கேற்ற.
டிஜிட்டல் கனவோ..!!!!!!!!

என்னவோ...ம்ம்.......

கேட்ட கதை.. கனவில் வந்த நிலை..

நான் நாற்பது வயதில் இறந்துவிட்டேன்... என்னை உலுக்கி ஒரு பெண் அலறுகிறாள். பிற்பாடு தெரிகிறது அது என் மனைவி என்று  முகம் யாரென்று தெரியவில்லை.. அருகில்  தவழும் வயதில் ஒரு குழந்தை.. அது என் மகனாம்..
 முகம் தெரியாத என் அப்பா..முகம் தெரிந்த என் அம்மா... அக்கா மற்றும் மருமகன் மருமகள் உற்றார் உறவினர் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருத்தாராக வந்து செத்துப் போன என் உடலுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறார்கள்... வந்தவர்களில் ஒருவர் எனது பாஸ் அதாவது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி  அவரைக்கண்டதும் என் மனைவியானவள் என் குழந்தையை  சுட்டிகாட்டி அழுகிறாள்..  அதிர்ச்சி அடைந்த என் முதலாளி என் உடலருகே வந்து பாவிப்பயலே என்றபடி என் தொடையில் ஊசியால் குத்துகிறார்... தமிழ்மணம் மாதிரி.. செத்துப்போனவன் எப்படி்? கத்திருப்பான்.????



நிஜத்தில் ஆ..ஆ.ஆ..வென்று கதறி சத்தமிட்டுஎ  ஊசி குத்தின தொடையை பார்த்தேன்....... நிஜத்தில் எதோ கடித்தது.கனவில் ஊசி குத்தியது.

இது எப்படி...???
















செவ்வாய் 13 2019

அதிகாலை கனவு-49.

ஏமாந்த பாதகத்தன்....



பலமுறை  கைபேசி மணி அடித்தது. வண்டியில் சென்றதாலும்  காது கேட்பு திறன் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் கேட்கவில்லை.. வீடு வந்து சேர்ந்து கைகால் முகம் கழுவி வயிற்றுக்குள் ஆகாரத்தை தள்ளிவிட்டு பின் கைப்பேசியை எடுத்து பார்த்தபோது மிஸ்டு கால் பத்துக்கு மேல் அதில் ஒருத்தர் மட்டும் ஆறுதடவைக்கு மேல் இருந்தது.

முதலில் தெரிந்த நபர்களிடம் இருந்து வந்த கால்க்கு ஒவ்வொன்றாக பேசி முடித்துவிட்டு  ஆறு..ஏழுாவது தடவையாக அடித்த தெரியாத நபர்க்கு கால் செய்து  சார்..வணக்கம், வண்டியில் போய்க் கொண்டு இருந்ததால் பேச முடியவில்லை மன்னிக்கவும்.  இனி விபரத்தை சொல்லுங்கள் என்று பேச்சை முடிக்குமுன்....

ஆ...ஆ.... மன்னிப்பா...சே...சே... வேண்டாம்   ...இதுவரையில் கேட்டிராத பெண் குரல்.  எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்றது. குரல்... என்ன உதவி சொல்லுங்கள் என்னால் முடியுமா?  என்று சொல்கிறேன்.. நீங்கள் அன் மேரிடா என்றது குரல்...ஆமாம் என்றதும்.. ஓ..ஓ... தேங்கஸ் என்றது குரல்.

பின் அந்தக் குரலே..பேசியது.... நான் வீட்டைவிட்டு ஒடி வந்துவிட்டேன்... நான் வைத்திருந்த காசுபணமெல்லாம் செலவாகிவிட்டது..... அதனால....நீங்க
எனக்கு ஒரு உதவி ..??  எவ்வளவு வேண்டும்....அய்யோ..பணம் கேட்கவில்லை ஒரு உதவி மட்டும் வேண்டும்... என்ன உதவி  சொல்லுங்கோ...... நீங்க நேரில வரமுடியுமா..? நேரிலா...? எங்க வரணும்... இடத்த சொல்லுங்கள்..

இடத்தை கேட்டபின் தயக்கமாக இருந்தது .. போகவர   இருநூறுக்கு மேல் செலவாகும்...பேரு. ஊரு, போன் நம்பரு இடம் எல்லாத்தையும் தப்பு இல்லாம சொல்லுது... உண்மையாகத்தான்...இருக்கும்...  எவரிடமும்  எதுவும் சொல்லாமல் பஸ் ஏறி... புறப்பாட்டுச்சு.......



பஸ்சில் செல்லும்போது பற்பல நினைவுகள்.  ஊசலாட்டங்கள்.   பின் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தக் குரல் சொன்ன இடத்தை அடைந்த போது அந்தத் தெரு  திருவாளர் ஏரியாகவாக இருந்தது.. திருவாளர் ஏரியா என்றால்... பக்கத்துவீடடில் யார் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது...

கேட்டை திறந்து வாசல் மணியை அடித்து நின்றபோது..கதவைத் திறந்த பெண்... ஓ...வந்திட்டீங்களா...!!! வாங்க.... வாங்க உள்ளே வாங்க  ! என்று அழைத்துப் போனார். வரவேற்பு பலமாக இருக்கிறதே உள் குத்து எதுவும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் உள்ளே போனதும் என் பெயரைச் சொல்லி அழைத்த குரல் .வந்த திசையை பார்த்தவுடன்    திடுக்கிட்டு போனேன்...












செவ்வாய் 30 2019

அதிகாலை கனவு-46.


 சந்நியாசிக்கு  இப்படியோரு விதிமுறை இருக்கோ...??

மதுரையில் சந்நியாசி மாநாடு க்கான பட முடிவு

அண்ணே...என்னண்ணே இங்க... இது உங்களுக்கான இடம் இல்லையே..


“அய்யோ... நானும் சந்நியாசிதானப்பா...... சந்நியாசி மாநாட்டுக்கு வரக்கூடாத..??


“யாருண்ணே சொன்னா உங்கள சந்நியாசின்னு  நீங்க தியாகிண்ணே.... போங்கண்ணே  வீட்டுக்கு.....


“யாருப்பா..இவரு......ஆ..ஆ  சார்..வாங்க......நல்லாயிருகீங்களா..... வேலை எல்லாம் எப்படி போகுது...”

“அதுவா... தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துகிட்டு அதுபாட்டுக்கு போய்கிட்டு  இருக்கு... வேல இல்ல  அதான் இங்க வந்து உட்காந்துட்டு இந்த கூட்டத்தை பார்த்திட்டு போகலாம்முன்னு வந்தா..சாரு  நானு சந்நியாசி இல்லன்னு சொல்றாரு...


“ உங்களுக்கு கல்யாணம் ஆகியிருச்சா....”

“இல்ல”

“பிள்ள குட்டிக”

“கல்யாணமே ஆகல.. பின் எப்படி புள்ள குட்டி...”

“ உங்களுக்கு கல்யாணமே  ஆகலையா..” அப்போ  , நீங்க சந்நியாசி லிஸ்ட்ல வரமாட்டிக....”

“பின்ன எந்த லிஸ்டுல வருவேன்”

“ அது தெரியல.... ஒரு சந்நியாசிய கூப்பிட்டு கேட்டுப்பார்ப்போம்.”


கல்யாணம் ஆகாதவுக.... சந்நியாசி லிஸ்டுல வருவாங்கலா.... அந்த விபரத்த  சார்க்கு கொஞ்சம் விவரமா சொல்லுங்க  ..ஜி”

” நீங்க ஏன்? கலயாணம் செய்துக்கல..?”

“ அது பெரிய கதைங்க..” சுருக்கமா சொல்லனும்னா.? அந்த வாய்ப்பே கிடைக்கலங்க...” இப்ப கிடச்சா செய்விங்கலா.

“ கிடச்சாதானே..?  கிடைச்சா செய்துகிறலாம்...”

“ .அப்ப நீங்க செய்த பின் சந்நியாசியா மாறலாம்...”

“ இப்ப  நடப்புல..சந்நியாசியாகத்தானே இருக்கேன்”  

“ இருக்கலாம்  கல்யாணம் ஆகி இல்லற சுகத்தில் முழ்கி..பின் தெளிந்து  எல்லாவற்றையும் துறந்து  காவி உடையணிந்து இறைவன் மேல் பற்றாகி இருந்தால் ” நீங்கள் சந்நியாசி லிஸ்டுல வரலாம்....”அதன் மோட்சம் பெறலாம்..


“அப்போ காவி உடை அணிந்தால்தான் சந்நியாசி  என்று தெரியுமோ..?”

“ காவி உடை அணிவது அது ஒரு படி... முதல்படி, இரண்டாம்படி என்பதுபோல் இது ஒருபடி..”

“அப்போ கல்யாணம் ஆகி இல்லற சுகம் அனுபவிச்ச பிறகுதான்..சந்நியாசி ஆக முடியுமா...?”

“ஆமாம்”

“அப்ப சரிங்க...” சார்    இவரு சொல்வதை பார்த்தா... நான் சந்நியாசி லிஸ்ட்டுல வரவே முடியாதுங்க..வர்ரேன் சார்..  சார் வர்ரேன்..


“சரிண்ணே.. ”  ...சரிங்க சார்,....

விடிந்த பிறகுதான் புரிந்தது. நான் சந்நியாசி ஆக மாட்டேன் என்று...அதாவது  அதாவது வந்து..... 












வியாழன் 18 2019

அதிகாலை கனவு-42.

அப்பவே அப்படின்னா...இப்ப..எப்படி ...???





நேரத்தை பார்த்தபோது அதிகாலை மூன்றரையை காட்டியது.படுத்திருந்த படுக்கையை விட்டு எழுந்தார். பின்பு  விரித்திருந்த பாயை எடுத்து சுருட்டி பாதுகாப்பாக  வைத்துவிட்டு வெளியே வந்து அடக்கி வைத்திருந்த சிறுநீரை வெளியேற்றிவிட்டு மண்ணென்னை விளக்கை பற்ற வைத்து அந்த விளக்கை பிடித்த வண்ணம் வீட்டின்.முன்பு சிறிதாக இருந்த அடுப்படிக்குள் நுழைந்து விளக்கை ஓரமாக வைத்துவிட்டு.. முன்னமே வாங்கி வைத்திருந்த கிழங்கு மாவை ஒரு சட்டியிலே கொட்டி அதில தண்ணிரை ஊற்றி உருண்டை விழாத வண்ணம் நன்றாக கரைத்தார்

பின் தீப்பெட்டியை தேடி பிடித்து எடுத்து  அடிப்பின் ஓரமாக வைத்திருந்த எருவாட்டியை இரண்டாக உடைத்து தனியாக சீசாவில் இருந்த மண்ணென்ணையை இரண்டுக்குமாக சிறிது ஊற்றி .தீப்பெட்டி குச்சியை எடுத்து உரசி தீயை எருவாட்டின் மீது வைத்தார். தீ மள மள வென்று எறிந்தது. எருவாட்டின் ஒரு முனையை பிடித்து அடுப்பில்இரண்டையும் உள்ளே வைத்துவிட்டு.. கிழுங்கு மாவை கரைத்த சட்டியை தூக்கி அடுபபில் வைத்து தீ எரிந்து சட்டி சூடாக சூடாக கரண்டியால் கின்டிக் கொண்டே இருந்தார். இடையில் இரண்டொரு எருவாட்டியை உடைத்து அடுப்புக்குள் வைத்தார்.

சிறிது நேரத்துக்கு்பின்.. சட்டியை கிளறுவதை நிறுத்திவிட்டு சொம்பில் வைத்திருந்த தண்ணியில் கையை நணைத்து அந்தக்கையை வெந்து கொண்டிருந்த சட்டியில் ஒரு விரலை  மட்டும் முக்கி எடுத்தார்.. கையில் எதுவும் ஒட்டவில்லை என்பதை கண்டவுடன்  கூரையில் சொறுகி வைத்திருந்த கரித் துணியை அதாவது அடுப்பு துணியை எடுத்து சட்டியின் சூடு கைகைள தாக்காதவாறு துணியால் சட்டியின் மேல்பாத்தை துணியால் பிடித்து  இறக்கி அதை வீட்டு வாசலில் ஆற வைத்தார்...

வீட்டின் உள்ளே படுத்திருந்த அவருடைய அம்மா .சொல்வதை கேட்டு சரிம்மா என்றவாறு... ஒரு  கவிழத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஈயச்சட்டியை எடுத்து சிறிது தண்ணிரை ஊற்றி  சட்டியின் உள்ளே நன்றாக தேய்த்துக் கழுவி அடுப்படிக்குள் வந்து எரிந்து கொண்டிருந்த அடுப்பில் இன்னும் இரண்டொரு எருவாட்டியை வைத்து கழுவிய ஈயச்சட்டியில் பாதி வரை தண்ணீரை ஊற்றிய ஈயச்சட்டியை அடுப்பில் வைத்து அந்தச் சட்டிக்கு பொருத்தமான ஒரு ஈயத்தாம்பாளத்தை கொண்டு மூடி வைத்துவிட்டு... தன் அம்மாவிடம் 
”யம்மா....  உல வச்சட்டேன் ம்மா...என்றார். அவருடைய தாய் மீண்டும் எதோ சொல்ல  பதிலுக்கு அவர் “வச்சுட்டேன் அம்மா என்றபடி .. எறிந்தபடியே அடுப்புக்கு வெளியே வந்து விழுந்த எருவாட்டியை எடுத்து திரும்பவும் அடுப்புக்குள் திணித்து மீண்டும் ஒரு எருவாட்டியை இரண்டாக உடைத்து அடுப்புக்குள் திணித்துவிட்டு வாசலுக்கு வந்தார்.

வாசிலில் ஆற வைத்திருந்த சட்டியை தொட்டுப் பார்த்தபோது சட்டியில் சூடு கொஞ்சமாக குறைந்திருந்தது.  அதை ஒரு வாளியல் கொட்டினார்  கொட்டிய வாளியில் சிறிது தண்ணிரை ஊற்றி ஓரமாக வைத்துவிட்டு.. வாளியில் சிறிதுதாக தண்ணீரை ஊற்றி  கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுநிலை பக்குவத்தில் கரைத்தவிட்டு, கடைசியில்  தண்ணிர் ஊற்றி ஓரமாக வைத்திருந்த சட்டியில் ஓட்டியிருந்தவற்றை நன்றாக வழித்து எடுத்தவிட்டு நல்ல பக்குவத்தில் கரைத்துவிட்ட திருப்பியுடன்  சட்டியையும் கையையும்  நன்றாக கழுவி விட்டு மாலையில் மடித்து வைக்கப்பட்டிருந்த போஸ்டரை எடுத்து சைக்கிளின் பின் கேரியல் வைத்துவிட்டு பசை வாழியை சைக்கிளின் ஆன்பாரில் தொங்கவிட்டு  அம்மா என்றபடி வீட்டுக்குள் நுழைந்த போது.. அடுப்புகடியில் அமர்ந்திருந்த அவருடைய அம்மா உலையில் அரிசி போட்டுட்டேன். சோறும் உப்பு சாம்பரையும்  ஆக்கி வைத்துவிட்டு நான் வேலைக்கு போறேன். நீ வந்து சாப்பிட்டுக்கோ என்று சொன்னபோது.. சரிம்மா என்றுவிட்டு சைக்கிளில் மாட்டியிருந்த பசை வாளியை பிடித்தபடியே   சைக்கிளை உருட்டியபடி அவர் தெருவின் விளிம்பை வந்தடைந்தார்.

அவர் எரியாவிலிருந்து  ஓட்டத் தொடங்கிய  வேலை காலை ஏழு மணிவரை நகர மத்திய பேருந்து நிலையத்தில் முடிந்தது.  அவரால் முடித்து வைக்கப்படவில்லை இரண்டு காக்கிகளால் தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது  ஒன்றிரண்டு போஸ்டர்களே இருந்த நிலையில் முடிந்திருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்ற வந்த அனைத்து பஸ்களிலும் ஒட்டியதால் போஸ்டரின் வாசகம்  பட்டி தொட்டி எல்லாம்  தீயாக பரவியது...

போஸ்டரின் வாசகம் தீயாக பரவியதால்தான் அருகில் இருந்த காவல் நிலையத்திக்கு செய்தி “தீ”யாக பரவி நாலைந்து காக்கிகள் படை சூழ  சுற்றி வளைத்து ஒட்டிய போஸ்டரை சிலவற்றை கிழித்தும் பலவற்றை கிழிக்க முடியாமலும் தவித்தனர்.  பெரும்பாலும் பேருந்துகள் பட்டி தொட்டிகளுக்கு சென்று விட்டதால் காக்கிகளால் அவற்றை கிழிக்க வழியில்லாமல் போய்விட்டது  . 

நகரப்பேருந்தில் ஒற்றையாளக ஒட்டிக் கொண்டிருக்கும்போது உதவிக்கு ஒரு தோழர் வந்து சேர்ந்தார்.... இவர் பசை தடவி கொடுக்க அவர் பஸ்சில் ஒட்ட..அவர் ஒட்டி முடித்து வருவதற்குள் இவர் அருகில் நிற்கும் பேருந்தில் ஒட்ட ..இப்படி பம்பரமாக ஒட்டியதால் காக்கிகள் வருவதற்குள் ஒட்டி முடித்திருந்தார்.

வந்த காக்கிகள் இவரை சுற்றி நின்று கொண்டு இவர் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து காவல் நிலையத்துக்கு வருமாறு கையைப் பிடித்தனர்.. இவர் கையை பிடிக்காதீர்கள் பசை உங்ககள் ஒட்டிக் கொள்ளும். நான் தப்பித்து ஓடிப் போக மாட்டேன் உங்களோடு வருகிறேன். என்ற படி பசை வாளியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் செல்ல ஆரம்பித்தபோது.. இவருக்கு துணையாக ஒட்டிக் கொண்டிருந்தவரை இரண்டு பேர் கூட்டி வந்தனர்

அவரைக்  கண்டதும்  .“சார். அவருக்கும் போஸ்டர் ஒட்டுனதுக்கும் சம்பந்தமில்லை எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு..சும்மா வேடிக்கை பார்த்தவரை புடிச்சுட்டு வர்றிங்க நான்தான் வர்றேன்ல.. எத்தன தடவ என்ன பிடிச்சுட்டு போயிருக்கிங்க.. எப்பவாவது  ஓடியிருக்கேன்னா சொல்லுங்க... அவர விட்டுருங்க என்று சொன்னதும்.இவர் அருகில் இருந்த காக்கி  ஒருவர் சொன்னதும் அவரை விட்டுவிட்டனர். உடனே..இவர் அவரிடம் நண்பரே...! பிளாட்பாரத்தில் நடுவே நின்று கொண்டிருந்த சைக்கிளை  எடுத்துச் செல்லுங்கள்.. என்று சொல்ல... சுற்றி வளைத்து நின்றிருந்த  காக்கிகள் எஸ்ஐ சத்தமிட்டு வருவதை கண்டதும்  பதற்றமடைந்து அவரை பர பரவென்று இழுக்க .பசை வாளி , போஸ்டரை எடுக்க இவர் இழுக்க ஒரே தள்ளுமுள்ளாகி கொண்டிருந்தது...


இந்த தள்ளு முள்ளுவை  கண்டு .. நான் விழி பிதுங்கி விழித்து பார்க்க படுக்கையைில் விரித்த பாயை விட்டு தரையில் படுத்திருக்க கண்டேன்.. உடம்பெல்லாம் மண்ணாக இருக்கக் கண்டேன். என் அம்மா போட்டோவில் இருந்தபடி என்னை பாரத்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன்   பொழுதும் எப்பொழுதும் போல விடிந்திடக் கண்டேன்..

வியாழன் 11 2019

அதிகாலை கனவு-39.

 நடப்பும் சிந்தனையும்......








வர வர என் தொழில் நலிவடைந்து வருகிறது..கிடைக்கின்ற ஒன்ரண்டு வேலைகளையும் உடனுக்குடன் முடித்துக் கொடுத்தாலும்  உடனடியாக பில்லும் உடனடியாக கிடைப்பதில்லை.. இதனால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமமாக இருக்கிறது. வேலையாட்களும் இதை உணருவதில்லை.. சென்ற மாதத்திற்குண்டான பில்லுக்கான ஜிஎஸ்டி
வரி கட்டுவதற்கு கூட திண்டாடும் நிலை....


சும்மாவே பகலில் நான் தூங்குவதில்லை... வேலை இல்லாததால். சுத்தமாக தூங்கவதில்லை.... வேலையில்லாததால் படிக்காமல் விட்ட புத்தகங்களை படிக்கலாம் என்று புத்தக்ததை திறந்தால்  தலை கோடாங்கி அடித்தாலும் விடக்கூடாது என்று உறுதியுடன் புத்தகத்தை விரித்தால்...கெடுப்பதற்கே சிற்றெறும்புகள் படை வரிசையாக வந்து தொல்லை கொடுத்தன. அவற்றோடு ஒரு சில பெரிய கருப்பு எறும்புகளும்  நான் படிப்பதை கெடுத்தன..


ஒரே அடியாய அடித்து போட கையை ஓங்கினாலும். எனக்கு இருக்கும் இரக்க குணத்தால்.. சே.... நாம..யாரு.அதக் கொல்வதற்கு..அது என்ன  தெருவில இருக்கிற மனுசி, மனுசன்மாதிரியா  நமக்கு தொல்ல கொடுக்குது... அம்புட்டு தொல்ல கொடுத்த அந்த மனிதர்களையே விட்டுவிட்டோம்..இதுகிட்டயா நம்ம வீரத்த காட்டுறது என்ற சிந்தனை வந்தவுடனே... ஓங்கிய கையை மாற்றாமல். அப்படியே  அந்த பெரிய கறுப்பு எறும்புகளை பிடித்து வாசல் வெளியே தூக்கி எறிந்து விட்டு  புத்தகத்தை பார்த்து படிக்க ஆரம்பித்தால் இன்னொறு எறும்பு... இப்படி  நாலந்து தடவை... படிக்கிற சிந்தனை போச்சு..

சிற்றெறும்பு கட்டெறும்பு, கறுப்பு எறும்பு..என எல்லாவற்றையும் அடிக்காமல் டேபில் காற்றாடியை  அதி வேகத்தில் ஓடவிட்டு எல்லாவற்றையும் ஓடவிட்டேன். அதை முடித்துவிட்டு கடையப் பக்கம் மற்றும் ரோட்டு பக்கம் சென்று கொஞ்சம் நடை நடைந்து  அப்புறம் வீட்டுக்குவந்து.. இருக்கிறதை அதாவது தட்டில் போடுவதை வயிற்றுக்கள் இறக்கிவிட்டு...  சிறிது நேரம் செல் போன்  நோண்டல் அதுவும் போரடித்துப்போக...  தூக்கம்வர மீண்டும் புத்தகத்தை திறந்து ஒரே பக்கம் ஒரு பக்கம்தான் படித்திருப்பேன்  கண்கள் சொருக..அப்படியே சாய.....


அப்படி சாய்ந்து தூங்கின தூக்கத்தில் மேற்படி  சொன்னவை எல்லாம் நிணைவுக்கு வர திடிரென்று  காதுக்குள் எறும்பு புகுந்து விட்டதால் தூக்கம் கலைய காதுக்குள் சென்ற எறும்பு காதை கடிக்கும் வலியை பொறுத்துக் கொண்டே அருகில் வைத்திருக்கும் தண்ணீரை  காதுக்குள் விட  வலி குறைந்தது.... விபத்தினால் காது சரிவர கேட்பதில்லை.. இந்த லட்சணத்தில் இந்த எறும்பு போயி காதை கடித்தால்  காது என்ன கேட்டுவிடவா போய்கிறது என்று சிந்தித்தபடியே  சூரிய வெளிச்சம் வருவதற்க்காக ஊறும் எறும்புகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் காத்திருந்தேன்...


வெள்ளி 28 2019

அதிகாலை கனவு-33

ஒரு கடவுள் தந்த  சாபமும் வரமும்....


நந்தினி ஆனந்தன் க்கான பட முடிவு




எந்த மதக் கடவுள்னு எனக்கு தெரியல..  ஒரு கடவுளு போலீஸ் மாதிரி மாறு வேடத்தில் வந்து சோதனை செய்துகிட்டு  இருந்தப்ப அவருக்கு தாகம் ஏற்பட்டது..கையோடு இருந்த வாட்டர் கேனில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்... பக்கத்தில் தன்னிடம் -வியாபரம் நல்லா போகனுமுன்னு தினமும் வேண்டிகிட்டு இருக்கும் பக்தனான பால் காரன் வீட்டுக்கு போயி தண்ணி கேட்டார்.

அதுக்கு பால்காரன். வந்தியிருக்கிறவர் யாருன்னு தெரியாம.“பால்ல கலக்கவே தண்ணி இல்லாம கஷ்டப்படுறேன் இதுல ஒனக்கு எங்க தண்ணி தர்றது போப்பா”-ன்னு  விரட்டி விட்டாரு....

மாறு வேடத்தில் இருந்த  கடவுள் நொந்து போயி அங்க சுத்தி இங்க சுத்தி  கூட்டமா இருந்த  ஒரு இடத்த நோக்கி போயிருக்காரு.....அங்க சாராயத்த குடிச்சிகிட்டு இருந்தாங்க பலபேரு.... மாறு வேடத்தில் வந்த கடவுள்  சாரயத்துக்கும் தண்ணிக்கும் வித்தியாசம் தெரியாம சாராய பாட்டில் இருப்பதை தண்ணின்னு நிணச்சு மடக் மடக்ன்னு குடிச்சு தன் தாகத்தை தீர்த்திட்டார்.

தன் தாகத்தை தீர்த்தக் கொண்ட மாறு வேடக் கடவுள்  .. எனக்கு தண்ணி தராத பால்காரன் வீட விடாக அலைந்து தண்ணிகலந்த பாலை ஊத்தி பொழைக்ககடவது...என்று சாபம் விட்டார்

தண்ணிதந்து தாகத்தை தணித்த சாராய கடைக்கு மக்கள் அள்ளி அள்ளி கொடுத்து கும்பல் கும்பலாக  குடித்துவிட்டு போகக்கடவது என்று வரம் கொடுத்தார். இந்த நிலையில்..

கடவுள் சாபமும்  வரமும்  கொடுத்த கதையை படித்தேனா..அல்லது கேட்டேனா என்று தவியாய்  தவித்த தவியில்  கடவுளே  ! என் கனவில் வந்து சாபம் விட்டதையும் வரம் கொடுத்ததையும் எனக்கு தெரிவித்தார்..

என்னிடம் வந்து தெரிவித்த கடவளிடம்.... நீர் .வரம் கொடுத்த சாரயத்தை பற்றி நீதி தேவதையிடம் விவரம் கேட்டதால் நந்தினி என்ற செயற்பாட்டாளரும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற  விவரம் தெரியுமா கடவுளே என்று கேட்டதுதான் தாமதம் கண்களை திறந்து கடவுளை பாரத்தால் கடவுள் தன் மாறுவேடத்தை கலைத்துவிட்டு ஆளைவிட்டால் போதுமடா சாமின்னு மாயமாக மறைந்து விட்டார்.......

இனி எங்க  விடிஞ்சு போச்சு பகல்ல எங்க கடவுள் வரப்போறார் ........






ஞாயிறு 23 2019

அதிகாலை கனவு-30.

தொட்டில் பழக்கம்......







எனக்கு நினவு தெரிஞ்ச நாளிலிருந்து  இப்பவரைக்கும். நான் உடுத்தும் உடைகளை நானே துவைத்து கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த பழக்கம். மற்றவர்களுக்கு கிடைத்த பலாபலன் மாதிரி  எனக்கு துணையும்.இல்லை இணையுமில்லை.... நமக்கு ஒன்னுக்கோ- வெளிக்கோ வந்தா நாமதானே கழிக்கனும். நமக்கு பதிலா.. வேறு யாரும் கழிக்க முடியாதல்லவா  அதுமாதிரிதான்..என்னுடைய பழக்கவழக்கம்...

ஆத்துலயும் தண்ணி வரல..குளத்துலயும் தண்ணியில்ல இதுல தண்ணி பஞ்சம் வருவதற்கு முன்னமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கமும்  என் அம்மாகிட்ட அடி வாங்கி பழகிய பழக்கமுங்க... குளிக்கையிலோ..அல்லது துணிமணிகளை துவைக்கபோதே  சிறுநீர் வந்தால் தண்ணியோடு தண்ணியாக போகட்டும் என்று பெய்துவிடமாட்டேன். அந்தப் பழக்கமும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.


 தண்ணியில்லாததால் நாலு நாளைக்கு ஒரு தடவையாக தண்ணிர் வந்த நேரம்.. அவனவன் மோட்டார் போட்டு சட்டிமுட்டிகளில் எல்லாம் தண்ணீர நிரப்பிக் கொண்டு இருந்த வேளையில் அடி பம்பில் இடைவெளி விடாமல் அடித்ததில் ஒன்றறை ட்ரம்ப்தான் தான் அடிக்க முடிந்தது. வந்த இரண்டு மணி நேரத்துக்குள் தண்ணீர் நின்று விட்டது. 

தண்ணி அடித்த அதாவது குழாயில் அடித்த களைப்பில் உறங்கியதில் பழைய சம்பவம் ..


கந்தையாக இருந்தாலும் கசக்கி கட்டுன்னு யாரு சொன்னாங்கன்னு தெரியல...ஆரம்ப பாடசாலை டீச்சரு ..என்னயப்பாத்து அடிக்கடி சொல்லும்...அதுக்கு பயந்தே செம்மண் ஏறிய என் கால் டவுசரையும் சட்டையையும் தினசரி துவைத்துதான் அணிந்து செல்வேன்.. எவ்வளவுதான் கசக்கினாலும் சோப்பு போடாததால் என் வெள்ளை சட்டை பழுப்பேறிய செம்மண் கலராகவே காட்சிஅளிக்கும்..இது அந்த டீச்சருக்கு உறுத்தும்போல...

ஒரு நாளு காலையில எழுந்தவுடன் அருகில் உள்ள பம்ப் செட்டுக்கு போககையில் யாரோ ஒரு புண்ணியவன்  துவைக்கிற சோப்பு  கரைந்து சிறியதாக இருந்த காரணத்தால் மறந்து வச்சுட்டு போனார்...

அந்த சோப்பைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி... சட்டையில் உள்ள செம்மண்ணை விரட்டிவிடலாம்....என்று கால் டவசர். மேல் சட்டை ஆகியவற்றை கழட்டி தண்ணீரில் நணைத்து அம்மணத்துடன் சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன்.


சிறிது நேரத்தில் கூட்டம் வந்துவிடும் அதற்குள் துணிகளை துவைத்து குளித்து முடிக்க வேண்டும். கூட்டம் வந்துவிட்டால் குளிக்க முடியாது .பரபரப்பாக துவைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் ஒன்னுக்கு வந்து விட்டது. தண்ணியோடு தண்ணியாக ஒன்னுக்கு இருந்துவிடகூடாது.  எழுந்து சென்றுவிட்டால் துவைத்துக் கொண்டிருக்கும் கல்லில் மீண்டும் துவைக்க முடியாது.. அந்தக் கல்லில் இடம் பிடிப்பதற்காக இரண்டு பேர் வரிசை கட்டி நிற்கிறார்கள்...

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்று  அன்றே செயல் முறை விளக்கமாக இருந்தது.  இலேசாக சொர்ர்க் சொர்ர்க் என்று வந்தது.  தட்டுத்தடுமாறி கண்விழித்து. தூக்கத்தில் அவிழ்ந்து கிடந்த கையிலியை பிடித்தபடி அரக்கபரக்க கதவை திறந்து  வேகமாக வெளியே வந்து  கால்வழியாக வழிந்த  சிறு இடைவெளியில் வெட்ட.வெளியில் நீண்ட நேரமாக சிறுநீர் கழித்து.பின் நிதானத்துக்கு வந்தேன்.

நல்லவேளை குழாயில் தண்ணி அடித்த களைப்பினால் படுக்கையில் சிறு கழிப்பதை தடுத்து நிறுத்தியது என். சிறு வயதில் நடந்த  சம்பவம் கனவாக....

வெள்ளி 21 2019

அதிகாலை கனவு-29.


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...!!!









மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டு கதவுக்கு அருகில் காக்கி உடையும் தலையில் தொப்பியும் அணிந்தவர்கள் காவலுக்கு நிறுத்தப் பட்டு இருந்தனர்....


போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தவண்ணம் சென்று கொண்டிருந்தனர்....இதில்  வாய விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் ஒருவன். இந்தக் காட்சியைக் கண்டு...  மெதுவாக கேட்டுக்கு அருகில் நின்ற  ஒரு காக்கியிடம் அய்யா... ஏன்?  கதவை சாத்திவிட்டீர்கள். என்று கேட்க..அடுத்த காக்கி ஒன்று ஏய்..? ஒழுங்கா   போயிடு.......இல்ல..சாத்து வாங்கிட்டு போகாத...


கதவ சாத்தியதை பற்றி கேட்டா.. எனக்கு சாத்து விழுமா..? என்னங்கடா இது இந்த மாவட்டத்துக்கு வந்த சோதனை   நல்ல மாவட்டம் நல்ல ஆட்சியர் என்று வார்த்தைகளை கொட்டிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.


மனு எழுதி கொடுப்பவரிடம் சென்று எனக்கு ஒரு மனு ஒன்னு எழுதி தரனுமே..! எவ்வளவு தொகை !..என்றவர் தொகையை கேட்டதும் போங்கப்பா.. ஒரு பேப்பரில் நாலு வார்த்தை எழதி தருவதற்கு அம்பது ரூபாயாா???  ...  என்று  எழுந்தார்.

முதல் கேட்டில் கூட்டமாக கூடியவர்கள் முழக்கம் விடும் சத்தம் கேட்டதும் வேகமாக அவ்விடத்தை நோக்கி வந்தார். மூழக்கவிடும் சத்தம்  கூடுவதும் கூட்டம் பெருகுவதையும் கண்டதும்.. சாத்திய  கதவு திறந்தது...

கடுப்பான அவர்... ஏண்டாப்பா.... கதவ எதுக்குடா சாத்துனிங்கன்னு கேட்டதுக்கு என்ன சாத்து வாங்கப்போற  போயீடு எனச் சொன்னீங்க..... இப்ப சாத்துன கதவு பொளந்துவிட்டுட்டிங்கே  என்றார்..

அவர் சொன்னது அந்த சத்தத்தில்  எவர் காதுக்கும் கேட்கவில்லை...... ஆனால். .தூங்கிக் கொண்டிருந்த என் காதுக்கும் மட்டும்  அருகில் மிக அழகாக கேட்டது எப்படி??  கண் விழித்து எழுந்தபோதும் அவர் சொன்னது என் காதுக்கு மட்டும் எ கேட்டது எப்படி என்ற யோசனையாக இருந்தது..  மேற்படி பேசியவரின் முகத்தை பார்க்க வில்லை.. பகலில் அவரை பார்க்க நேர்ந்தால் சிக்கல் வந்துவிடும் என்பதால்...........






திங்கள் 10 2019

அதிகாலை கனவு-27.

சத்தியம் தவறாத உத்தமனா/ தியாகியா..???






ஆறாம் வகுப்பில் வயதுக்கு வந்து ஏழாம் வகுப்பில் படிக்கும்போது திருமணம் முடிக்கப்பட்டவர் என்சகோதரி... திருமணம் முடித்த எட்டாவது மாதத்தில் குறை பிரசவத்தால் ஒரு குழந்தை இறந்துவிட... அடுத்த குழந்தை பத்தாவது மாதத்தில் பிறந்து சில நாளில் இறந்துவிட்டது..


பிள்ளை பெறும்  இயந்திரமான என் சகோதரி.  மூன்றாவதாக  ஒரு பெண் குழந்தை நான்காவதாக இரண்டாவது பெண் குழந்தை. ஆண் குழந்தைக்காக ஐந்தாவதாக...ஆண்குழந்தை ஆறாவதாக ஆண் குழந்தை  ஆகா   ஆறு குழந்தைகள் பெற்றெடுத்து இரண்டை பறிகொடுத்து விட்டு இருக்கும் நான்கு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு என் தாயார் மூலமாக என் தலையில் விழுந்தது...எப்படி.. என்றால்.....

கடைசி பிள்ளை பிறந்த சில மாதங்களில். அவர்கள் வளர்க்கும் பசு மாட்டை  கதிர் அறுத்த வயல்களில்   மாட்டின் கயிற்றை பிடித்துக் கொண்டு மேய்ச்சலுக்கு விட்டு நின்று கொண்டிருந்தார் ஒழுங்கா மேய்ந்த அந்த மாடு அடுத்த இடத்தில் மேய்வதற்க்காக கயிற்றை பிடித்துக் கொண்டிருந்த என் சகோதரியை இழுத்துக் கொண்டு ஓடியது... பலமில்லாத என் சகோதரி மாட்டின் கயிற்றை விடாமல் இழுத்து பிடிக்க..பசுமாடும் தன் பலத்தால் இழுக்க..கயிற்றோடு என் சகோதரி கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் நேற்று அறுக்கப்பட்ட கதிர் சுனை என் சகோதரியின் இரு கண்களையும் பதம் பார்த்துவிட்டது.  ஒரு வருடம் இல்லை.இரு வருடம் இல்லை..ஐந்து வருடத்திற்க்கு  அரவிந்த் கண் மருத்துவமனை அரசு மருத்துவமனை என்று அலைந்து பார்வை திரும்ப கொண்டுவர முடிவில்லை
என்னனென்னமோ பெயர் சொன்னார்கள்.....சத்து குறைபாடு என்றார்கள்..

என் தாயாராலும் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை... கிராமத்தில் இருந்தவர்களை அடிக்கடி போய் பார்த்தும் கடன் பெருகி வருமானம் குறைந்து  அன்றாட தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமல் தவித்த நிலையில் என் தாயார் தன் மகள் மருமகன் பேரப்பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்துவிட்டார்




  முப்பத்திமூன்றாவது வயதில் சுயமாக தொழில் தொடங்கி முப்பத்தி ஐந்தாவது வயதில் திருமணம் முடிக்க என் உறவுக்காரரும் நண்பர் ஒருவரும் என் தாயாரிடம்  பேசிய போதுதான்.. என் தாயாரின் கருத்தும் முடிவும் தெரிந்தது..நான் திருமணம் செய்து கொண்டால் வரப்போகும் மருமகள் தன் மகளையும் பேரப்பிள்ளைகளையும்  வளர்க்க விடமால் தன் மகனை மாற்றிவிடுவாள்... என்று  பல்வேறு குடும்பங்களில் அன்று நடந்த நடப்பை தெரிந்து கொண்டு  என்னிடம்  தன் நிலை..தன் மகள் நிலை பேரப்பிள்ளைகளின் நிலை எல்லாவற்றையும் தான் வேலை செய்யும் எஜமானிகள் சொல்லிக் கொடுத்தபடி என்னிடம் பேசி..கசிந்துருக வைத்துவிட்டார்...இயல்பாகவே... இரக்க குணமுள்ள நான்.. என் தாயாரின்  அழுகைக்கும் அழுதபடியே பேசிய பேச்சுக்கும் இரக்கத்துக்கு அடிபணிந்து அவர்  கேட்டபடியே சத்தியம் செய்து கொடுத்து.. என் தாயார் இறக்கும்வரை அதாவது இரண்டுவருடத்துக்கு முன்பு வரை கொடுத்த சத்தியத்தை காப்பற்றி வந்தேன்.

தாய் சொல்லை தட்டாத நானும்  என் உடன் பிறப்புக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை என்பதால்... நானும் அவர்களை வளர்க்க பல உழைப்புகளில் ஈடுபட்டேன். என்னுடன் படித்த ஆசிரியர் நண்பர் பணிபுரியும் பள்ளியில் இரு ஆண்பிள்ளைகளை  சேர்த்து படிக்க வைத்தேன் மூத்த பெண் குழந்தை பள்ளிக்கு செல்ல அடம் பிடித்ததால் ஏழாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டது இரண்டாவது பத்தாவது வரை படித்துவிட்டு மேல் படிக்க விரும்பவில்லை.கடைசியாக இரு மருமகள்களை என் சகோதரி மற்றும் அவரின் கணவரின் விருப்படியும் ..முடிவுப்படியும்அவர்கள் பார்த்த மாப்பிள்ளைகளுக்கே திருமணம் முடித்து வைத்தேன்  . என்தாய் இறந்த ஒரு வருடம் கழித்து மூத்த மருமகனுக்கு  அவன் விருப்பப்படியும் அவன் தந்தை-தாயின் பெருமைப்படியும் அவர்கள் பார்த்த பெண்னை மணமுடித்து வைத்தேன்..அடுத்த மருமகன்.. எதற்கும் பிடி கொடுக்காமல் இருப்பதாலும் நான் சொல்வதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் இருப்பதாலும்  எனக்கும் கடனும் பெருகிவிட்டதாலும்  இதனால் அவனுக்கு மணமுடிக்கும் நிகழ்ச்சி நிரல் மட்டும் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தக் கதையை அடுத்து சொல்கிறேன். 

நான் திருமணம் முடிக்காமல் இருக்கும் காரணத்தை சுட்டிக் காட்டியே என் தெருக்காரிகளின்-காரன்களும் இவர்களோடு  என் தந்தை வழி உறவுக்காரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் . ஆட்பட்டுவருகிறேன்... அது பெரியகதை...

இதோடு என் தெரு.. நாட்டாமையும் தெருக் கோயிலின் பூசாரி மற்றும் அவனின் வைப்பாட்டி. காதலி.சின்னவீடு பெரியவீடு போன்றர்கள் என் இடம் வீட்டை அபகரிக்க தொடுத்த இம்சைகளாலும்.. சுயமாக தொடங்கிய தொழிலால் வருமானத்தை பார்க்க வேண்டிய நிலையில் தவியாய் தவித்து போனதாலும்....திருமணம்..உறவு எதுவும் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன்....என்று    ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தவற்வையும் நடந்தவற்றையும் நண்பரிடம் சொல்லி முடித்தபோது..
நண்பரின் முகம் சற்று வாடிப் போயிருந்தது...

அமைதியாக இருந்த நண்பர்.... உண்மையிலே   நீ  தியாகிதாண்டா.... அதுல எனக்கு எந்த சந்தேகம்...இல்லை என்று நண்பர் சொன்னபோது...

வேறு ஒரு நண்பர் சொன்னது... என் கனவை கலைத்தது.... எவன்டா சொன்னது உன்னை தியாகியென்று... நீ இஇ.....அவ்வளவு  சத்தியம் தவறாத உத்தமனடா ..
போடா  கேனப்பயலே....கூமுட்ட...கிறுக்கன்டா...

வெள்ளி 07 2019

அதிகாலை கனவு-26
















நண்பரின் நிகழ்வுகளே...கனவாக...










நண்பர் கணத்த உருவாமாய் இருந்தார்... எந்தக் கடையில் அரிசி வாங்கி சாப்பிடுகிறார் என்று கேட்க நினைவு வந்தாலும் அதை கேட்கவில்லை... அவர்தான் தன் வகுப்பு நண்பரிடம் ஆச்சரியமாய் கேட்டார்..

“ எப்படி  நீ அன்று மாதிரியே அச்சு கொளையாமல் இருக்கிறாய்..   இந்தப் பக்கமாய் வண்டியில் போகும்போது எதார்த்தமாய் பார்த்தேன்.  உடனே உன் பெயரும்  நாம் இருவரும் தென்கரை கண்மாயில் குளித்ததும். மறுநாள் பிரையரில் தென்கரை கண்மாயில் குளித்தவர்களை கண்டுபிடிப்பதற்க்காக 
ஹெட்மாஸ்டர் பரிசு வழங்குவதாக அறிவித்தபோது..  மகிழ்ச்சியில் உன்னை பார்த்து  “ சொல்லவடா என்று கேட்டபோது...  பொய்யிடா வேண்டாம்டா ..நம்மள உதைக்க போறாங்கடா என்று நீ சொன்னதை மறுத்த போது என் குண்டியில   ஊக்கால் குத்தியதுதாண்டா  ஞாபத்திற்கு வந்தது.

அதிலிருந்து நீ இந்த வழி எப்படா வருவேன்னு வழிமேல் விழி வைத்து.. உன் மொழியில் சொல்வதென்றால் ஒரு வாரமாய்  கண்ணக்கோல் வைத்து.   பிடித்து விட்டேன்டா...என்று நண்பர் சொன்னதும்  அவருக்கு வாழ்த்துச் சொன்னேன்.

எதுக்குடா வாழ்த்து என்றார்..

என்னை மறக்காமல்..பார்த்தும் விடாமல் என்னை பிடித்து ..பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு என்றபோது... இன்னும்சில நிகழ்வுகள் இருக்கு சொல்கிறேன்... முதலில் உன்னைப் பற்றி சொல்... என்றார். என்ன தொழில் செய்கிறாய், பிள்ளை குட்டி  ,எல்லா விபரத்தையும் சொல் என்றபோது... முதலில் உன்னைப்பற்றி  சொல்.... பிறகு என்னைப் பற்றி சொல்கிறேன்.

முதலில் முக்கியமானவற்றை  சொல்கிறேன்.. மற்றவைகளை பிறகு சொல்கிறேன்...  சுற்றி நின்றிருந்தவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு..  வா..நடந்துகொண்டே பேசலாம் என்று சொல்ல... புரிந்து கொண்ட நான்  சரி என்று அவருடன் சேர்ந்து .. சிறிது தூரம் நடப்பதும் பின் ஒதுக்குப்புறமாக நின்று பேசுவதுமாக இருந்தோம்..

“ கௌசு  தெரியுமில்ல...”  என்ன  தெரியலையா.... கௌசல்யா...நம்ம பள்ளிக்கு அடுத்த கேல்ஸ் ஸ்கூல்ல படித்த கௌசல்யா..... சர்ச்சுக்கு போறப்ப...சைட் அடிப்போம்ல....

நான் எப்ப சைட் அடிச்சேன்    .....

ஓ..... நீயில்ல....சரி..பொரு.. உனக்கு ஞாபகத்துடுறேன்....சயின்ஸ் வாத்தியாரு வீட்டுக்கு போவேம்ல..... அங்க ஒரு அம்மா வீட்டு வேல பாத்துச்சுல....அந்த அம்மாவோட பொன்னு கௌசல்யா....இப்ப தெரிஞ்சுருச்சா....

ஆமா....ஆமா.... அது  பேரு கௌசல்யாவா.......???

பேரு என்னவாக இருந்தட்டு போகட்டும் ஞாபகம் வந்திருச்சுல......விடு..

கௌசல்யா என் லவ்வர்.....தெரிஞ்சுக்கோ...?

அப்படின்னா..அவுங்கதான் உன் மனைவியா...?

என் மனைவியா அமைவதற்கு எனக்கு கொடுத்து வைக்கல..... ஆனா  இன்னவரைக்கும்  ......என் லவ்வர்....எனக்கு ரெண்டு பசங்க..ஒரு பொண்ணு... கௌசுக்கு ரெண்டு பசங்க..ஒரு பொண்ணு....எல்லோரும் நல்ல நிலைமயில இருக்கோம்....நம்ம குருப்புல.. நீ ஒருத்தன்தான் இப்படி  கல்யாணம் செய்யாமல்....எதையும் அனுபவிக்காமல்....மறதி மன்னனாட்டம்.....

சரி...வா.. அந்த முதியவரிடம் சென்று  உன்னை சோதிப்போம்.. என்ன சொல்கிறார் என்று கேட்போம்.

அந்த முதியவர் நண்பரைக் கண்டதும் வணக்கம் சொன்னார்... வந்த விசயம் என்னவென்று கேட்காமல் நண்பரின் முகத்தையே பார்த்தார்.

நண்பர்  சொன்னார்....இவர் என்னுடைன் பள்ளியில் படித்த நண்பர்... திருமணம் முடிக்காமல் பல செட்டப்புடன் இருக்கிறார்..... ஏகப்பட்ட கெட்ட பழக்கத்துடன் குடியும் கூத்தியுமாக இருக்கிறார்.... இவரை திருத்துவதற்கு அதிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்யலாம்...நோய் நோக்காடு.....என்று மெதுவாக இழுத்தார்...

அந்த முதியவர் என்னை ஏற இறங்க பார்த்தார் இரு கால்களை நீட்டச் சொல்லி பாரத்தார் .பின் இரண்டு உள்ளங்  கைகளையும் பார்த்தவர் . நண்பரிடம் சொன்னார்

 உங்க நண்பர் திருமணம் ஆகாதவர்,... அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எந்த கோளாறும் இல்லை.....இதுநாள்வரை அவருக்கு கால் பழக்கமும் இல்லை  ..கைப்பழக்கமும் இல்லை... கடும் உழைப்பாளி.... என்றவரிடம் நண்பர் எதோ மெதுவாக சொல்ல அந்த முதியவர் சிரித்து கொண்டே.. இல்லையில்லை என்று. நண்பரிடம் மெதுவாக எனக்கு கேட்காதவாறு எதோ சொன்னார்...


என்னப்பா... நான் சொன்னதை நம்பாமல் அந்த முதியவர் சொல்வதை நம்புறயப்பா......என்றபோது...


நம்ப முடியாமல்தானப்பா  நான் அவரிடம் கேட்டேன்... எப்படி உன்னால் இருக்க முடிந்தது... உடல் கோளாறா....ஆண்மையின்மையா என்று தெரிஞ்சுக்கதானப்பா கேட்டேன்...ஆஸ்பத்திரியல் டெஸ்ட் எடுத்து தெரிஞ்சுக்கிறத விட...  நாடி,சுத்தி வைத்தியர்களிடம் காட்டினால் என்னவென்று தெரிஞ்க்கிறலாம்ப்பா....அந்த முதியவர் லேசுபட்டவர் இல்ல.....ரெம்ப அனுபவம் உள்ளவர்.... என்றார்.

இனி..  நீ எதைச் சொன்னாலும் நம்புறேன்பா.......  ஆமா...எப்படியப்பா.. அந்தக்காலத்த கடத்தின என்று வியப்பாய் கேட்டார்..

எனக்கும்தான் வியப்பாக இருந்தது .. அந்த காலத்தை கடத்தியது...

 ஒன்பதாம் வகுப்பில் இரண்டு வருடம் பத்தாம் வகுப்பில் ஒரு வருடம் ஆக மூன்று வருடங்கள் ஒரே வகுப்பில்  அடுத்தடுத்த இருக்கையில் இணைபிரியாமல்  சேர்ந்திருந் படித்த நண்பர்.. முப்பதைந்து வருடத்துக்கு பின் என்னை அடையாளம் கண்டு தன் வேலை ஆட்களுடன் என்னை வழி மறிக்க...அவர் யாரென்று தெரியாமல்  நிற்க!...அவரே நட்பின் சம்பவத்தை விவரிக்க பின் அவனை தெரிந்து  ஆச்சரியமாய. நான் வாய் பிளக்க...  பின் என்னைப்பற்றி கேட்டபோது   என் கதையை அவர்க்கு சொல்ல... அவர் கதையை எனக்கு சொல்ல....... இந்த சம்பவமே எனக்கு கனவாக வந்தது... .

புதன் 22 2019

அதிகாலை கனவு-21.

கனவால் தப்பித்த கதை...




பெரும்பாலும் எனக்கு வரும் கனவுகள்  எல்லாம்  என்னை பயமுறுத்தும் நிகழ்வுகளாகவே வந்து தொலைக்கின்றன... சில சமயம் கவலையை அள்ளி தெளித்து விடுகின்றன...அதோடு பெரும் குழப்பத்தை தோற்றுவித்துவிடுகின்றன்.

என் தந்தையின் தந்தை பெயர் ஆறுமுகம். ஆறுமுகத்தின் தந்தையின் பெயர் ஆறுமுகம். ஆக ஆறுமுகத்தின் மகன் ஆறுமுகத்திற்கு ஒரு பெண்ணும் நாலு ஆண் மகன்களும் பிறந்தன... மூத்த மகளுக்கு மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் உள்ளனர். இரண்டாவது ஆண்மகனுக்கு  அதாவது என் அப்பாவுக்கு நானும் என் அக்காவும், ஆறுமுகத்தின் மூன்றாவது மகனுக்கு இரண்டு பெண்களும் ஒரு ஆணும், நலாவதுக்கு மூன்று பெண்களும் ஒரு ஆணும், ஐந்தாவது ஆணுக்கு இரண்டு மகன்களும் ஒரு பெண்ணும்... 

ஆறுமுகத்தின் மகன் ஆறுமுகத்திற்கும் செல்லம் மகனான பண்டாரத்திற்கும் பாகப்பிரிவினை ஏற்பட்டு எனக்கு கிடைத்த இடத்தை நாளாது தேதிவரை எந்தவித வில்லங்கமும் இல்லாமல் அனுபவித்து வந்த இடத்தை நான் தங்களுக்கு  ரூபாய் 200க்கு கிரையமாக எழுதிக் கொடுக்கிறேன்.  என்று என் தந்தையார் வேலை செய்த பண்ணையார் ..தற்போது குடியிறுக்கும் வீட்டிலிருந்து என்னையும் என் தாயையும் வெளியேற்றக்கோரி முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கிரையமாக பெற்ற பத்திரத்தை ஆவணமாக இணைத்துள்ளார்.. அந்த இடம் கிரையம் ஆவதற்கு  முன்பே என் தந்தையார் பெயரில் கிஸ்தி வரியும் வுீட்டு வரியும் இருந்ததால். நானும் என் தாயும் அந்த வீட்டில் குடியிறுக்க முடிந்தது.

எங்களை வெளியேற்ற அடிதடியும், பொய் வழக்கும்.... வீட்டில் தீ வைக்கும் சம்பவமும்  காலம் கடத்தாமல் கனகச்சிதமாக நடந்தேறியது....

அன்றைய நாளில் இதே போல்தான் என் கனவில் என் வீட்டில் தீ வைத்துவிட்டு செல்வது   போல் திடுக்கிட்டு முழித்து நானும் தாயும் தப்பிக்க முடிந்தது.... அந்தக் கனவு  ..அடுத்து...

திங்கள் 20 2019

அதிகாலை கனவு-20.





சித்தியின் காதலனால் வந்த கோபம்...

கனவு க்கான பட முடிவு






 காலையில் முதல் வேலையாக கண்ட கனவு பலிக்காமல் இருப்பதற்க்கான முயற்சிகளை தொடங்கினேன். சித்தப்பனின் மனைவி வீட்டில் இருக்கிறதா..வேலைக்கு பேய்விட்டதா என்று விசாரிக்க ஆரம்பித்தேன்.


அப்போது ஒரு தகவலை சொன்னார்கள்.. சித்திக்கு இருதயத்தில் ஓட்டையாம். மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூத்த மகள் வீட்டில் ஒய்வு எடுப்பதாக.....

ஓரளவுக்கு மனம் நிம்மதியாக இருந்தாலும்  நேற்று கண்ட கனவு எப்போதும் நடக்கலாம்.. அதில் நான் கோபப்படாமல் சமயோசிதமாக செயல்பட்டால்  கனவின் கடைசியில் நடக்கும் சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எனது பகுத்தறிவு சிந்தனை தெளிவுபடுத்தியது....

அந்த நிமிடத்திலிருந்து வண்டியில் செல்லும்போது குறுக்கும்மறுக்குமாக வருவர்களிடமிருந்து தொடங்கினேன் கோபப் படக்கூடாது என்ற முடிவை...


 மறந்தும் கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்க்காக பேப்பரில் எழுதி வைத்தக் கொண்டு  அடிக்கடி அதை படித்துக் கொண்டு நினைவில் ஏற்றிக் கொண்டே வந்தேன்..



அன்று இரவு நேற்று கண்ட கனவின் தாக்கமே வந்து நின்றது.. அப்போது ஒரு சிந்தனை வந்தது. புத்தகம் படிக்கலாம்  என்று... நான் புத்தகம் படித்தால் உடனே என் தலை கோடாங்கி அடித்து தூக்கம் வந்துவிடும்.... அதை உடனடியாக செயல் படுத்தினேன். உடனடி பலன் எனக்கு கிடைத்தது.

தெருவின் மெயின் ரோட்டின் வண்டியை நிறுத்திய போது.. என் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தேன். ஒருவர் என்னை அழைத்தார். யாரென்று தெரியவில்லை. அருகில் என் சித்தப்பன் நின்று கொண்டு இருந்தான். அருகில் சென்றபோது.. சித்தப்பன் என்னை முறைத்துக் கொண்டு இருந்தான்.

கூப்பிட்டவரின் அருகில் சென்று நீங்கள் யாரென்று தெரியவில்லை. எதற்கு என்னை கூப்பிட்டீர்கள் என்று கேட்டபோது.....அவர் சொல்வது எனக்கு வேறு மாதிரியாக கேட்டது... “நான்தாண்டா உன் சித்தியின் கள்ள புருசன்  என்று”
சுதாரித்து தெளிவாக கேட்டபோது... சித்திக்கு வேண்டியவர்கள் என்று சொன்னார்.

இடத்துப் பிரச்சினையை பற்றி கேட்டார்....சார் எனக்கு வயது 59 ஆகுது.. அடுத்த வருடத்தில் நான் முதியோர் வரிசைக்கு சென்று விடுவேன். என்னுடைய இருபதாவது வயதிலிருந்தே.. நான் குடியிறுக்கும் வீட்டிற்க்காக போலீஸ் ஸ்டேசன். கோர்ட்டுன்னு அலஞ்சு அலஞ்சு என் வாழ்நாளே முடிந்து போய்விட்டது.. இதுவரை எந்தவிதமான நியாயமான ஆசை எதையும் நான் அனுபவித்தது கிடையாது...  இவர்கள் இடத்துக்கான ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராகத்தான் இருந்தார்கள் தவிர.. உதவியாக இருந்தது. கிடையாது..  வழக்கு நடக்கும் இடம் என் தந்தையை சுவிகாரமாக எடுத்து வளர்த்த தாத்தாவினுடையது....இதில் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது... நான் திருமணம் ஆகதாவன் என்பதால் எனக்கு பின் இவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை என் தாயார் இறந்த பின் பொய்த்து போனது..எனது இறப்புக்குப்பின் எனது வீடு. இடம் தொழில். தொழில் இயந்திரங்கள் அனைத்தும் என் அக்காவுக்கும் அவருடைய மகள் மகன்களுக்கும் தான் சட்டப்படி செல்லும்.  இதை உங்களுக்கு வேண்டியவர்கள் மறுத்தால்  கோர்ட்டிக்கு சென்று உத்தரவு வாங்கி வாருங்கள்  மறுநிமிடமே நான் காலி செய்துவிடுகிறேன்  என்றபோது..

நான் சொல்வதை எதையும் பரிசிலிக்காமல்... மனிதாபிமானம் ஒன்று இருக்குல்ல அதன்படி நீ நடந்து கொள்ளனும் என்றார்.

என்ன மனிதாபிமானப்படி நான் நடந்து கொள்ளனும்...

அவர்களுக்குரிய பங்கை நீ கொடுக்கனும்...

அதான் கோர்ட்க்கு சென்று உத்தரவு வாங்கி வாருங்கள் என்கிறேனே..!

கோர்ட்டு, கேசு என்பதெல்லாம் ஆகாத வேலை.... 

அப்ப.... நான் நாற்பது வருசமா அலைந்தது எல்லாம் ஆகாத வேலையா...??

நீ வெட்டியா அலைஞ்சதுக்கு இவுங்க எப்படி பொறுப்பாக முடியும்.


சார்... உங்களிடம் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருப்பது எதனால என்று நிணைக்கிறிங்க....போதும்  உங்களிடம் இதற்கு மேல் பேச வேண்டிய அவசியமில்லை-என்று நகர்ந்தபோது....

இப்படி பேச்சை முறித்துக் கொண்டு பொண்டுகத்தனமா... போவதுதான்..வீரமாடா.? என்று கேட்டதும்... அதுவரை அமைதியாக இருந்த எனக்கு கோபம்  தலைக்கேறியதுது...

நான் பொண்டுகன் என்பது உனக்கு தெரியுமாடா  என்று திரும்பி கேட்டபோது.. என் சித்தப்பனும் மற்றவனும். ஆக்ரோஷமாக என்னை நோக்கி வந்தார்கள்.

படக் கென்று கண்விழித்தேன்... சித்தியின் காதலன் முன் வந்து நின்றான். ..சட்டப்பையில் எழுதி வைத்திருந்த வாசகத்தை எடுத்து மூன்று நாலு ஐந்துவரை படித்து மனப்பாடம் செய்து கொண்டேன்.

 என் தந்தைக்கு அடுத்து பிறந்தவன்  சித்தப்பன். வயதானவன்.. லேசாக தள்ளவிட செத்துப்போனால்......???



வெள்ளி 17 2019

அதிகாலை கனவு-19.









 கனவிலும் பயமுறுத்தும் சித்தப்பனின் மனைவி....!!!!!!!!!!











என்  தொழிற்கூடத்தில் அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்துக் கொண்டிருக்க  அவர்களோடு நானும் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்... என் சித்தப்பனின் மனைவியும்.. என்மீது அபாண்டமாக பொய் புகார் கொடுத்து தண்டம் கட்ட வைத்தவரும் என் பரம எதிரியின் கூட்டாளியும், என்தந்தையின் அக்கா மகளும் என் தாயின் சித்தப்பன் மகளுமான  என் தந்தையின் தம்பியின் மனைவியானவர்.

திடிரென்று படுக்கை பை முதலிய சாமன்களுடன் என் தொழிற்கூடத்தில் நுழைந்து தான் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்துவிட்டார். இதை நுழையும் போது கவனிக்காத நான் அவர் உட்கார்ந்திருப்பதை  வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் மிரட்சியாக பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் நான் கவனித்தேன்...

அரண்டு மிரண்டு பொய் ஒருவிதமான பயத்தால் ஏற்ப்பட்ட பதட்டத்தில்...“ ஏய்..யாரும்மா நீ.....  திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைவது மாதிரி வந்து உட்கார்ந்திருக்க....உன் வீடு பின்னாடி இருக்குமா..? அங்க போ... வீடு தெரியாம வந்திட்டியா   போம்மா..... என்று சத்தமிட்டேன்
யாரு வீட்டில இருந்துகிட்டு யாரடா வெளியே போகச் சொல்ற முட்டாப் பயலே... நீ போடா வெளியே... பதிலுக்கு கத்தினாள். 

ஆகா... இவ.. எதோ திட்டம் போட்டுத்தான் தைரியமா உள்ளே வந்திருக்காள் என்று என் பயத்தை வெளிக்காட்டாமல். ஒழங்கா மருவாதியா.... உன் பொருட்களை எடுத்துகிட்டு உன் வீடு போயி சேரு.... இல்ல நடக்கிறதே வேற..

இடைமறித்து என்னடா நடக்கும்..... இங்கேயே நான்னுகிட்டு என் சாவுக்கு நீதான் காரணமுன்னு எழுதி வச்சுட்டு சாவேன்டா பொண்டுகயப்பயலே என்றாள்.. எனக்கு பயம் கூடி விட்டது... இவள் எந்த எல்லைக்கும் செல்வாள்.. சும்மா சண்டையில் கையைப்பிடித்து இழுத்தவிட்டதில் கெடுக்க முற்பட்டான் என்று பொய்புகார் கொடுத்து தண்டம் கட்ட வைத்தவள்....

 என்ன பிளான் செய்து வந்திருக்காளொ என்று மனது பதைபதைத்தது.. அவள் கொண்டுவந்து வைத்த பொருளை எடுத்து வெளியே வைக்க முற்பட்டபோது  என் கைகளை தடுத்து என்னை தள்ளிவிட்டாள்... என் வீட்டுக்கு பின் வீட்டிலுள்ள MBA படித்த இவளின் மகனை கூப்பிட்டபோது வீட்டில் ஒளிந்து கொண்டான்.. ஆகா எதோ திட்டம்தான் என்று நிணைத்துக்கொண்டு  

இந்தாரும்மா... நீ செய்வது கொஞ்சம்கூட நல்லா இல்ல.... உனக்கு இந்த வீட்டில பங்கு இருந்தால் அதற்குரிய ஆவணத்தை கொண்டு கோர்ட்ல வழக்கு போடு..உன் பக்கம் தீர்ப்பாயிடுச்சனா... அப்பீல் எதுவும் செய்ய மாட்டேன். அடுத்த நிமிடமே இடத்த விட்டு காலி செய்துவிடுகிறென். அதை விடுத்து முறைகெட்ட தனமாக  நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அடவாடித்தனம் செய்வது சரியல்ல....ஒழுங்கா நீயா போறீயா..? போலீச கூப்பிடவா? என்று சொன்னபோது....

டேய்... கூப்பிடுறா... போலீசு வரட்டும்..... அவுககிட்ட உன் ஞாயத்த சொல்வோம்.. என்றாள்...  இந்தா பாரும்மா  பொம்பளயாச்சுன்னு பாக்குறேன்  இல்ல.....

இல்லாட்டி என்னடா செய்வா...அடிச்சிடுவியா... எங்க  அடிடா....கடிக்கி மவனே என்று சொன்னதான் தாமதம் எனக்கு கோபம் எப்படி வந்ததுன்னு தெரியல... ஒரே அடில   கீழே விழுந்திட்டா...சும்மா நின்றவர்கள்... அவள் அருகில் சென்று அவளை தொட்டு பார்க்க....அவள் செத்துப்போனாள்..

அய்யோ... அம்மா என்ன கொலக்காரனக ஆக்கிப்புட்டாளே  அம்மா என்று கத்திய கத்தலில்... என் அக்கா. மச்சான்... மருமகள், பேத்தி எல்லாரும் பதறிப்போயி என் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுந்திருக்க வைத்து என்ன கனவு பயங்கரமான கனவா?? என்று துழைத்து எடுத்துவிட்டனர்..

கண்ட கனவை அவர்களிடம் சொன்னால்  அதை நிணைத்து அவர்களும் நெஞ்சுக்கும் தொண்டைக்குமா நிணைத்து கொண்டு இருப்பார்கள் என்று நிணைத்துக் கொண்டு  என்னவென்று தெரியவில்லை என்று பேந்த பேந்த முழித்தேன்... விடிவதற்கு நேரம் இருந்தாலும் உறங்க முடியவில்லை. என் சித்தப்பனின் மனைவியான அந்த கொடூர மனது படைத்த சித்தியின் செயலே மனதில் பயத்தை உண்டு பன்னிக் கொண்டு இருந்தது. இந்தக் கனவு நிஜத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருந்தாலும் அதை தடுப்பதற்கு என்ன வழி என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன்.


தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...