ஞாயிறு 29 2014

போதையில் பறிகொடுத்த போதை ஆசாமி!!!


படம்.தினகரன்.










ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு” வழக்கின் வாய்தாவிற்க்காக“உள்ளேன் அய்யா” என்று வருகை பதிவேட்டிற்கு ஆஜர் ஆகிவிட்டு என் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தேன்.

என் வீட்டிற்கு அருகில் இறங்குவதற்ககு ஒரே பஸ் இல்லாததால்இரண்டு பஸ் மாறி வரவேண்டும். அதோடு டிஜிடல் பஸஸில் (சொகுசு பஸ்) ஏறினால் பயணசீட்டு தொகை இரண்டு மடங்காகும் என்பதால். சாதாரண பஸ்ஸில்தான்  பயணம் செய்வது.

அப்படியான, கொள்கையின்படி நெடுநேரம் காத்திருந்து சாதாரண பஸ்ஸில் வந்து கொண்டு இருந்தேன்.என் கொள்கைப்படி எல்லோரும் சாதாரண பஸ்ஸில் பயணம் செய்ததால் அந்தப் பஸ்ஸில் கூட்டம் அதிகமிருந்தது.

பஸ்ஸில் கூட்டம்  இருந்தது மாதிரி சாலையிலும் வாகனங்களும் அதிகமிருந்தது.. வாகனங்கள் அதிகமிருந்ததால், எல்லா வாகனங்களும் போக்கவரத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு,ஒவ்வொரு வாகனமும் ஆமையைவிட மெதுவாக ஊர்ந்து கொண்டு இருந்தன.


அந்த போக்கவரத்து சிக்கலில் ஒரு அவசர ஊர்தியும் விரைவாக போவதற்கு வழி கிடைக்காமல் சைரன் ஒலி எழுப்பியவாறு  ஊர்ந்தது.

பஸ்ஸில்  இருந்த கூட்டம் வெயிலின் கொடுமையால் பஸ்ஸில் ஏற்பட்ட வெக்கையால் புழுங்கிக் கொண்டு இருந்தார்கள்.

இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் முனங்கியபடி எழுந்து பஸ்ஸிலிருந்து இறங்கினார். நான் அந்த சீட்டீல் அமர்ந்தவடன். எதார்த்தமாக முன் சீட்டில் இருப்பவரையும் அவருக்கு முட்டுக் கொடுத்து அருகில் நின்று கொண்டு இருப்பவரையும் கவனித்தேன்.

மு்ன சீட்டில் அமர்ந்திருந்தவரின்  தலை ஒரு நிலையில் இல்லாமல். அங்குமிங்கும் ஆடுவதைக கண்டவுடன் போதை ஆசாமி என்று தெரிந்துவிட்டது.

அந்த போதை ஆசாமியின் தலைக்கு முட்டுக் கொடுத்து நின்ற ஆசாமி திருட்டு ஆசாமி என்று  சில நடவடிக்கையின்போது தெரிந்து கொண்டேன்.

அந்தத் திருட்டு ஆசாமியின் பார்வை சில நேரங்களில் என்னையும், போதை ஆசாமியின் செல்போன் உள்ள கனமான மேல் சட்டை பையையும் கவனித்துக் கொண்டது.

நான் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருப்பதால் திருட்டு ஆசாமிக்கு நான் கவனிப்பது தெரியவில்லை என்று நிணைக்கிறேன். அதனால்தான் திருட்டு ஆசாமி ,நான் கவனிக்கவில்லை என்று நிணைத்து கொண்டார்.

நான் கண் சிமிட்டி பார்ப்பதற்குள். போதை ஆசாமின் மேல் சட்டை பையில் இருந்தததை திருட்டு ஆசாமி  சுட்டுட்டார்.  திருட்டு ஆசாமி ரெம்ப அனுபவசாலி    போல.........

போதை ஆசாமி தன் பையிலிருந்தது சுடப்பட்டுவிட்டது என்று தெரியாமல் போதையின் மயக்கத்தில் இருந்தார்.

எனக்குள் மனப் போராட்டம். திருட்டு ஆசாமியை பிடித்து உதைக்கலாமா? என்று... திருட்டு ஆசாமியோ என்னைவிட பலமாக சற்று குண்டாக இருந்தான். இருந்தாலும் பறிகொடுத்த ஆசாமி வாய் பொளந்து இருக்கும்போது....எப்படி விசயத்தை சக பயணிகளிடம்...........

போதை ஆசாமி...அய்யோ,என் பையிலிருந்தது காணவில்லை என்று குரல் கொடுத்தால் ஓரே குத்து திருட்டு ஆசாமியின் முகத்தில் விட்டு, பறி கொடுத்தவரின் பலத்தையும் சேர்த்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று நிணைத்து போதை ஆசாமியை பார்த்தேன்.

போதை ஆசாமிக்கு தன்னுடைய கனமான பை லேசானது தெரியாமல் போதையின் மப்பில் இருந்தார். ஒரு முடிவுக்கு வர முடியாமல் திருட்டு ஆசாமியை பார்த்தால்.................

திருட்டு ஆசாமி ,கம்பி நீட்டிவிட்டார். எந்த வழியில் இறங்கினார் என்று தெரியவில்லை. பார்வையை வெளியே செலுத்தி பார்த்தால்......திருட்டு ஆசாமி போன திக்கு தெரியவில்லை.

சைரன் ஒலி எழுப்பியபடியே வழி கேட்டு கொண்டு இருந்த அவசர ஊர்திக்கு ஒரவழியாக  பொருட்காட்சி மைதானத்தின் வழியாக பாதை விடப்பட்டு அதில் பாய்ந்து சென்றது. ஊர்ந்து சென்ற வாகனங்களுக்கும் வழி கிடைத்து. அததது  இடைவெளி விடாமல் சென்று கொண்டு இருந்தன.

நான் சென்ற பேருந்தும் நகர்ந்து பாலத்திற்கு வந்து வேகமாக சென்றன..

போதை ஆசாமியின் தலைக்கு முட்டுக் கொடுக்க ஆள் இல்லாததால் தலை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஆடியபடியே இருந்தது.

என் மனதுக்குள் இப்படி கூறிக் கொண்டேன. காசு.பணம் வைத்திருக்கும் வெண்ணெய்கள் போதையில் வந்தா.... இந்த மாதிரியான திருட்டு ஆசாமிக்கு கொடுத்துதான். ஆகனும் என்ற டாஸ்மாக் விதியை யாரால் வெல்ல முடியும்

பேருந்து  பெரியார் நிலையத்திற்கு வந்து நின்று, நான் இறங்கும் வரை. போதை ஆசாமிக்கு முழிப்பு இல்லை..........





2 கருத்துகள்:

  1. இப்படிப்பட்ட போதை ஆசாமிகளுக்கு ஆதரவாய் எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நானும் அப்படியே! வேடிக்கை பார்ப்பதோடு இருந்துவிட்டேன்.ஜீ

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...