பக்கங்கள்

Saturday, June 28, 2014

எல்லா கொடுமையும் இங்கு நடக்கும்..

கொள்ளைக்காரர்களே.....கொளளைக்கு எதிராக போராடுவார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதாக சொல்பவர்கள்,  சட்டத்தையும் நீதியையும் மதிக்க வேண்டும் என்பார்கள். நடைமுறையில் அவர்களே மதிக்க மாட்டார்கள்.

எப்படின்னு கேட்பவர்களுக்கு ......

முன்னால் மத்தியஅரசை ஆண்டவர்கள், கொள்ளைக்காரர்கள் கொள்ளையடிக்க பாதுகாப்பாக இருந்து கொள்ளையடித்தவர்கள். எந்தெந்த வழிகளெல்லாம் இருக்கிறதோ? அத்துனை சந்து பொந்துகளிலும் நுழைந்து கொள்ளையடித்தவர்கள்.

இவர்களுக்கு பதிலாக அதாவது அடுத்த ரவுண்டுக்கு வந்த கொலைகாரர்கள் ஆட்சியில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து. ரயில் மறியல் போராட்டம் செய்கிறார்கள். கொள்ளைக்காரர்கள் கொள்ளையை எதிர்த்து போராடுகிறார்கள்.

அதற்க்காக அடுத்த ரவண்டாக வந்துள்ள கொலைகாரர்கள் யோக்கிய சீகாமணிகள் அல்ல. அவர்கள் கொலைகாரர்கள் என்ற கூடுதல் திறமையோடு கொள்ளளைக்காரர்கள் வழியிலே கொள்ளையும் அடிப்பார்கள்.

மதுரை காமராஜர் பல்கலை துண்வேந்தரின் நியமனம் செல்லாது என்று தப்பித்தவறி, உண்மையாக நடுநிலையாக, அபூர்வமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும்.  சட்டத்தையும் நீதியையும் மதிக்க மாட்டார்கள்.

சட்டத்தையும் நீதியையும் மதிக்கச் சொன்னவர்களே. மதிக்காதபோது, மற்றவர்களை மதிக்கச் சொல்லி ,பெரும்படையை குவித்து  தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.

இப்படிபட்ட நிலைமைதான் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும்....

இத்தகைய நிலைமையை  தெரிந்த படித்தவர்களும் சரி,படிக்காதவர்களும் சரி இநதக் கொள்ளைக்காரனைவிட்டா...அந்த கொலைகாரன்., இந்த கொலைகாரனைவிட்டா.....அந்தக் கொள்ளைக்காரி..கொள்ளக்காரன்... மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதையே, தங்களது ஜனநாயக உரிமைன்னு பீத்திக் கொள்கிறார்கள்.

இப்படி பீத்திக் கொள்பவர்கள்  ஓட்டு போடுவதை நிறுத்தி யோசிக்காதவரை இந்த நிலைமை தீரப்போவதில்லை..

அடுத்த  ஒரு கட்டத்தில் கொள்ளைக்காரர்களும்,கொலைகாரர்களும் சேர்ந்து  ஜனநாயக உரிமையான ஓட்டு போடுவதை அவர்களே! நிறுத்தி விடுவார்கள்.

அப்போது பீத்தவும் முடியாது..கத்தவும்முடியாது.. இப்படியான எல்லாக் கொடுமையும் இங்கு நடக்கும்.


No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!