பக்கங்கள்

Wednesday, June 04, 2014

இப்படியும் ஒரு வியாபாரம்......


மனித வாழ்க்கையில் சிக்கல்களும்.பிரச்சினைகளும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், சிக்கல்களே வாழ்க்கையானால்???

குடும்பத்தில் பிரச்சினை.தொழிலிலும்,உத்தியோகத்திலும் சிக்கல்கள், கல்வியில்தடை, பில்லி சூனியம் போன்றவைகளால் கெடுதல்கள் ஏற்படுதல  மற்றும் பூர்வ ஜென்ம கர்மாவின் பயனாக ஏற்ப்படக்கூடிய பிரச்சினைகளுக்கும் உரிய பரிகாரமாக (தீர்வாக) திகழ்வது “ குடும்ப கலச தேங்காய்”

கண் திருஷ்டி ,மற்றும் காரிய சித்தி போன்ற எந்திரங்களை வைத்து கேரள நம்பூதீரீகளால் உரிய மந்திர தந்திர பிரோயோகங்களுடன் பூசிக்கப் பெற்ற குடும்ப கலச தேங்காயை பக்தியுடனும் நம்பிககையுடனும் பெற்று

மற்றவர்களின் பார்வையில் படும்படி வீட்டு வாசல்களில் கட்டி பூசித்து வந்தால், கடன்களால் கலக்கம், பகைவர்களால் அச்சுருத்தல் போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்ந்து குறைவற்ற மகிழ்ச்சியுடனும் குடும்ப வாழ்க்கை அமையும்.

மேலும் தொடர்புக்கு---------------என்ற எண்ணிலும்,மற்றும்  www.---------இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு...

இந்தியாவுக்கு  எதிரிகளால் அச்சம் இருப்பதாலும் உலக வங்கி கடன்கள் இருப்பதாலும்,  இந்திய பாராளுமன்ற வீட்டு வாசலில்  கும்பகலச தேங்காயை  கட்டலாமா ??? என்று என்னை கேட்கக்கூடாது

3 comments :

  1. மீண்டும் சொல்கிறேன். நான் வியாபாரி அல்ல... தொழிலாளி!!!

    இந்தியாவுக்கு எதிரிகளால் அச்சம் இருப்பதாலும் உலக வங்கி கடன்கள் இருப்பதாலும், இந்திய பாராளுமன்ற வீட்டு வாசலில் கும்பகலச தேங்காயை கட்டலாமா ??? என்று என்னை கேட்கக்கூடாது..

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி! குமார்.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com