செவ்வாய் 03 2014

நிழலைக் கண்டு குதுகாலிக்கும் கூமுட்டைகள்....

படம்












அன்றும் சரி இன்றும் சரி என்றும் சரி  நிழலைக் கண்டு குதுகாலிக்கும் கூமுட்டைகள் நிறைந்தது தமிழ்நாடு என்பதை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

இன்றும் அப்படித்தான் அன்றும் இப்படித்தான் அதற்கு  பல சான்றுகளில் இது ஒன்று.

எம்ஜியார் என்ற நடிகனின் நிழலைக்கண்டு குதுகாலித்தது.


ஒரு படத்தில் எம்ஜியார். கஷ்டப்பட்டு  வேர்வை சிந்தி உழைத்து கூலியாக ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டு வருவார்.

வரும் வழியில் வில்லன்கள் அவரை வம்புக்கு இழுத்து தகராறு செய்து ஒரு ரூபாய் கூலியை அருகிலுள்ள குளத்தில் விழும்படி தட்டிவிடுவார்கள்.

 முதலில் பொறுமையாக இருந்த சூரப்புலி, கூலியாகப் பெற்ற ஒரு ரூபாயை தட்டிவிட்டதும் கோபம் வந்து வில்லன்களை  மாங்கு மாங்குன்னு அடித்து துவைத்து தண்ணிரில் விழுந்த காசை எடுக்க வைக்கும்

 இதை திரையில் பார்த்துக் கொண்டு இருக்கும் கூமுட்டைகள் தன் வாழ்வின் நிஜத்தோடு ஒப்பிட்டு பார்க்க திராணியில்லாமல். ரெம்பவும் அக மகிழ்ந்து கைதட்டி  மகிழ்ச்சியை தெரிவித்து ரெம்பவும் அளப்பரை பன்னும்.

நிழலைப் பார்த்து அளப்பரை பன்னும் ரசிகர்கள் என்ற பெயர் கொண்ட
 இந்த கூமுட்டைகள் . நிஜத்தில் அப்படியான ஒரு நிகழ்ச்சி நடந்தால் பாராமுகமாகவோ,   அல்லது பயந்தாங் கொள்ளித்தனத்தாலோ  அஞ்சி நடுங்கி வீண் வம்பு எதற்குன்னு ஒதுங்கி ஓடும். ஆனால் தங்கள் வீடுகளிலோ,தெருக்களிலோ. கூட்டமாக சேர்ந்து கொண்டு அளப்பரை பன்னும்

நிழலில் சாதிக்கும் நடிகரைப்போல் நிஜத்தில் சாதிப்பவர்கள் ஒரு சிலராக இருந்தாலும்  அவர்களைப் பற்றி உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து இல்லாததை பற்றி கதைக்கும்.“ இவருக்கு பெரிய ஹீரோ நிணப்பு” என்று கேலி பேசி தன்னை பெரிய வென்னையாக  பீத்திக் கொள்ளும்.

இப்படித்தான் இந்தக் கூமுட்டைகள் அன்றிலிருந்து இன்றுவரைதங்களுடைய கூமுட்டை தனத்தை மன்னோடு தோண்டி புதைப்பதை விட்டுட்டு பால் அபிசேகம், கட்வுட்டு, வுாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டுவது. போன்ற வழிகளில்  கூமுட்டைகள்  கூட்டம் வளர்ந்து
கொண்டே செல்கிறது.

இந்த கூமுட்டைகளால்தான்  நிழல் ஹீரோக்கள் எல்லாம் நிஜஹீரோக்களாக மாறி அரசியலிலும் சமூகத்திலும் வலம் வந்து. கூமுட்டைகளில் பொச்சுகளிலும் அவர்களில் குடும்பங்களிலும்தார்குச்சி குத்து விழும்போதும் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமும்இல்லாமல் இந்த கூமுட்டைகள் விதிவிட்ட வழி என்ற சந்தோசமாக ஏற்றுக் கொண்டு குதுகாலிக்கின்றன.............

4 கருத்துகள்:

  1. நண்பர் வலிப்போக்கனுக்கு,சமூக அவலத்தை சரியானபடி சொல்லி சவுக்கடி கொடுத்துள்ளீர்கள், ஆனால் இந்த கூமுட்டைகள் எல்லாம் இதனை படிக்க கூடியவர்களாக இருக்கமாட்டார்கள், அதுதான் நமது துரதிர்ஷ்டம்.
    எனது தற்போதைய பதிவை தாங்கள் அவசியம் காணவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தலைப்பு உள்ளடக்கிய செய்தியும் நச்சென்று உள்ளது.இதில் பாமரன் மட்டுமல்ல படித்த கூமுட்டைகளும் அடக்கம்.என்ன செய்வது விழலுக்கு இறைத்த நீர். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!திரு.Barari அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...