வாரத்தின் முதல்நாள் திங்கள் கிழமை என்பதால் அந்த வாத்தியார் தன் வகுப்பறையில் அமர்ந்து மாணவ-மாணவிகளின் பெயரை அழைத்தபடி வருகைப்பதிவேட்டில் குறித்துக்கொண்டு இருந்தார்.
வாத்தியார் பெயர் சொல்லி அழைக்க, பெயருக்கு உரிய மாணவ -மாணவியர்கள் “உள்ளேன் அய்யா” என்று சொல்வதன் மூலம் தங்கள் வந்து இருப்பதை உறுதி படுத்திக் கொண்டனர்.
ஒரு பெயரை வாசித்தபோது “ உள்ளேன் அய்யா” பதில் இல்லாததால் , மூக்கின் நுனியில் வந்து நின்ற கண் கண்ணாடியை ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு தலை நிமிர்ந்து பார்த்தார் வகுப்பறை அமைதியாக இருந்தது.
அடுத்த பெயரையும் வாசித்தார். அதற்கும் பதில் இல்லை. அந்த இரண்டு மாணவிகளும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் மற்ற மாணவ- மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வது மதிரி நடந்து கொள்ளாமல், பவ்வியமாக தோழிகளான இந்த ரெண்டு மாணவிகள் வகுப்புக்கு வராதது பற்றி தெரியுமா? என்று கேட்டார்.
அப்போது ஒரு மாணவன் எழுந்தான். முதலில் வாசித்த மாணவி ஆஜராகத காரணத்தை சொன்னான்.
அய்யா, அவுக வீட்டுக் நீச்சல் தொட்டியில் மீன் பிடிக்கும் பணி அதிகமாக இருப்பதால் அந்த மாணவி ஆஜராகவில்லை என்றான்.
ரெண்டாவது மாணவியைப்பற்றி கேட்டபோது அந்த மாணவனே ஆஜராகி சொன்னான்.
“ அவுக வீட்டு நீச்சல் குளத்தில் பிடித்த மீனை ,குழம்பு வைத்து சாப்பிட்டபோது மீன்முள் பற்களில் குத்தி விட்டதால். பற்களில் வலியெடுத்தது. அதனால் வலியை பொறுக்க முடியாததால் பற்களில் ஆப்ரேசன் செய்து உள்ளார்..
என்னிடமே எதுவும் பேச முடியாமல் சைகையில் காட்டியபோது , “உள்ளேன் அய்யா” என்று நீங்கள் அழைக்கும்போது, எப்படி பேச முடியும் அதனால் வரவில்லை என்றான்.
அந்த மாணவனைப் பார்த்து வாத்தியார் சொன்னார். பரிட்சை நெருங்குவதால் யாரும் வகுப்புக்கு வராமல் கட் அடிக்கக்கூடாது என்று போன மாசமே தலைமையாசிரியர் உத்தரவு போட்டார் அல்லாவா, அதனால அடுத்த தடவையாவது வகுப்புக்கு வரச் சொல்லு என்றார். வகுப்பாசிரியர்.
இன்னொரு மாணவன் எழுந்து சொன்னான். சார், அவன் பொய் சொல்றான் சார், என்றான் கொடுத்த வீட்டுப்பாடத்த எழுதல சார். கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றதுன்னு, பயந்துகிட்டு வரல சார். என்றான்.
சார், அவன் பொய் சொல்றான் சார், அவனுக்கு அந்த ரெண்டு பிள்ளைகளும் இவனுக்கு சாக்லேட் தராததால் கொள்மூட்டி விடுறான் சார்.என்றான்.முதல் மாணவன்.
ரெண்டு மாணவர்களும் சொல்வதை கவனித்த வாத்தியார் சரி சரி, தலைமையாசரியர் சீக்கிரமாக பாட்த்த நடத்தி முடிச்சிறமுன்னு உத்தரவு போட்டு இருக்காருப்பா அதனால, கொஞ்சம் மனது வச்சு வரச் சொல்லங்கப்பா.....மத்தவங்களுக்கு பள்ளிக்கூடத்து மேல மதிப்பு மரியாதை இல்லாமா போயிடும்ப்பா என்றார். வாத்தியார்.
கடைசி பெஞ்ச் மாணவன் தன் சக மாணவனிடம் புலம்பினான்.
“பார்ரா.......வாத்தியாரின் ஓரவஞ்சனைய.... நாம மட்டும் ஆஜராகலைன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவரு....... பெரிய இடத்து பிள்ளைக ன்னதும் குலையுறது...பாருடா.. என்றான்.
நீதி.
இல்லாதவங்களுக்குத்தான் சட்டம் தன் கடமைச் செய்யும். இருக்கப்பட்டவங்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கும்
வணக்கம்.
பதிலளிநீக்குதேர்வுக்கு வராமலே மாகாணத்தில் முதலிடம் பிடித்து தலைமையாசிரியராலேயே மதிக்கப்படும் நிலைக்கு அம்மாணவிகள் வர இன்னும் கனவு கண்டுகொண்டிருக்கக் கூடும்.
நகைச்சுவையாய் அதே நேரம் செருப்படியாய் விழுந்த மன்னிக்க எழுந்த பதிவு.
நன்றி
தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி! ஊமைக்கனவுகள் அவர்களுக்கு!
பதிலளிநீக்கு