பக்கங்கள்

Friday, June 06, 2014

பெண் பித்து தெளிந்து கவிஞரான பக்தன்.

படம்tamilnation.coபதினைந்தாம் நூற்றாண்டில் காவிரிப் பூம்பட்டணத்தில் பிறந்தவர். இல்லையில்லை அவதரித்தவர்.

சிறு வயதிலே தேவாரம், திருமந்திரம்,திருமுருகாற்றுப்படை போன்றவற்றை நண்கு கற்றார்.


கற்றபடி கந்தனை நிணையாமல் இளமையின் முறுக்கு காரணமாக கண்டபடி மயக்கும் மங்கயரை நாடினார்.

இதனால் அவரின் அப்பன் சேர்த்து வைத்துவிட்டுப்போன பொன்னும் பொருளையும் இழந்தார்.

பொன் பொருளோடு தன்னுடைய இளமையின் மேனிப் பொலிவையும் இழந்தார்.

அன்றைக்கு, வசூல் ராஜாக்கள் எம்பிபிஎஸ்களும் அதி உயர் அப்போலோ மருத்துவ மனைகளும், போக்கத்தவர்களுக்கான அரசு மருத்துவமனையும் இல்லாததால்...........

மனம் நொந்த அவர், திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரின் அருளால் முருகனை உபாசிக்கத் தொடங்கினார்.

அங்கு முருகன் வேறு வேலையின் காரணமாக இருந்ததினால்..இவருக்கு தரிசனம் கிடைக்கவில்லை.

மீண்டும் வேதனை அடைந்து. கடைசி முயற்சியாக. அண்ணாமலையாரின் கோபுரத்தின் மேல் ஏறி, கோபுரத்தின் உச்சியிலிருந்து “ முருகா” எனக் கூவியவாறு கீழே விழுந்து தற்கொலைக்கு  துணிந்தார்.

இன்றைக்கு இருப்பதுபோல் தீவிரவாதி ஒழிப்பு படை, மெட்டல் டிக்டெட்ர் கண்காணிப்பு, போலீஸ பாதுகாப்பு எதுவும் அப்போது இல்லாததால் கோயில் நிர்வாகத்தின் அனுமதி அட்டை எதுவும் இல்லாமல் தங்கு தடையின்றி கோபுர உச்சிக்கு சென்று விட்டார்.

கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்த பக்தரை “எந்த வேளையும் காக்கும் கந்தவேல” எனபதை நிருபிப்பதற்க்காக,.  செய்து கொண்டு இருந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு, உடனே, கீழே விழுந்தவரை கைத்தாங்கலாக தாங்கிப் பிடித்து காப்பாற்றினார்.கந்தவேல்

பின்  அவருக்கு “சும்மா இரு........சொல்ற........” என்று கந்தவேல் உபதேசித்தார். அதோடு நில்லாமல் “ முத்து .........” என்றும் அடி எடுத்துக் கொடுத்தார்.

அதிலிருந்து பெண் பித்து தெளிந்து  பக்தனாகி  “ முத்தைத்திரு பத்தி....” என முருகன்  மேல் கவி பாடத் துவங்கி எண்ணற்ற திருப்புகழ்களை இயற்றி பேறு பெற்ற  அருணகிரிநாதர் என்ற பெயருடன் கவிஞரானார்.

குறிப்பு.

அருணகிரி நாதர் திரைப்பட்த்தில் டி.எம் சௌந்தராஜன் பாடிய பாடலை, தம்பி சைக்கோ சேது பாலா இயக்கிய “பிதாமகன்” திரைப்படத்தில்  பல வண்ணப் தேனகின்னம் பாடலில் முதல்வரிப் பாடலாக வருகின்றன.

2 comments :

 1. " தம்பி சைக்கோ சேது பாலா இயக்கிய ... "

  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை உமது லொள்ளு இருக்கிறதே... அட.. அடடட... !

  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 2. பெரிய தலகளோடு என்னால் போட்டி போட முடியுமா?? சாமானியரே!!!

  தங்களின் கருத்துரைக்கு நன்றி ! திரு. சாமானியன். அவர்களே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com