சற்று விடிந்துவிட்ட அதிகாலை நேரம் சாலையோரம் நடந்து கொண்டு இருந்த பொழுது. சாலை ஓர சுவற்றிலே ஒருவர் சர் சர் ரென்று. போஸ்டர் ஓட்டிக்கொண்டு இருந்தார்.
போஸ்டரின் வாசகத்தை படித்தால் அது “கொள்ளைக்கார தனியார் பள்ளிகளிலே சிறந்த கொள்ளக்கார பள்ளி எங்கள் பள்ளி” என்று இருந்தது.
வாளியில் கரைக்கபட்ட பசையை பெரிய பிரஸ்ஸால் தொட்டு சுவற்றில் பசையை தடவி பின் போஸ்டரை ஒட்டினார். அவரது கையில் பசை ஒட்டவில்லை. போஸ்டரை ஒட்டிய பின் அருகில் நின்று இருந்த ஹீரோ ஹோண்டா பைக்கில் பசை வாளியை தொங்கவிட்டு அதில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள துணியில் பேருக்கு கைகளை துடைத்துவிட்டுக் கொண்டு வண்டியில் சர்ரென்று கிளம்பிவிட்டார் அடுத்த இடத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கு............
இதைக்கண்டதும் அட போஸடர் ஒட்டுவதற்கு கூட தொழில் நுட்பம் வளர்ந்திருப்பதை கண்டேன். முன்னோரு காலத்தில் சைக்களிலே மாநகரம் முழுவதும் சென்று போஸ்டர் ஒட்டி ய நிணைவும். போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிணைவும் வந்தது.
http://www.vinavu.com/2009/12/04/eelam-rathi-8-ipkf/ |
இந்திய கொலைகார(அமைதி) படை, ஈழத்தில் சென்று தன் பராக்கிரமத்தை. தன் வல்லமையை ஈழத்து மக்களிடம் காட்டிக் கொண்டு இருந்த நேரம்.
அதை எதிர்த்து தமிழகத்து மக்கள் அலைகடலென திரண்டு இந்திய கொலைகாரப படையை எதிர்த்து வீதிகளில் இறங்கி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது தமிழகத்தில் செயல் பட்டுக் கொண்டு இருந்த (மகஇக)மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற அதன் தோழமை அமைப்புகளும் களத்தில் இறங்கி பரபரப்பாக செய்ல்பட்டுக் கொண்டு இருந்தது.
நகரமெங்கும் ஈழப் போராட்டத்தை ஆதரித்தும், இந்திய (அமைதி)கொலைகார படையை எதிர்த்தும் ஈழத்திலிருந்து வாபஸ்வாங்க கோரியும் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் தாங்கள் செயல்பட்டுக் கொண்டு இருந்த நகரம் மற்றும் மாநகரமெங்கும் போஸ்டர் இயக்கம் நடத்தியது.
கூலிக்கு ஒட்டுபவர்கள் கூட அந்த மாநகரமெங்கும் ஒட்டியிருக்க மாட்டார்கள் .அவர்களே வியக்கும் வண்ணம்,அவர்களைத்தாண்டி கண்ணில் படும் இடங்களில் எல்லாம் அமைதிப் படையை எதிர்த்த பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டது.
போஸ்டர் ஒட்டும்போது ஒரு விதிமுறையுடன் ஒட்டப்பட்டது. இன்றைக்கு இருப்பது மாதிரி,விதிமீறி ஒட்டப்பட்டது கிடையாது
அதாவது, தலைவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களின் சிலைகள் மீதோ தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெருக்களை குறித்து ஊண்டப்பட்டுள்ள வழிகாட்டி போர்டுகளில் மீதோ, ஏற்கனவே, ஒட்டப்பட்டுள்ள.நிகழ்ச்சிகள் முடிந்திறாத போஸ்டர்களின் மீதோ, மாற்றுக் கொள்கை கொண்டவர்களின் போஸ்டர்கள் மீதோ, வெள்ளை அடித்து சுத்தமாக வைத்திருக்கும் சுவற்றின் மீதோ சுவரெழுத்து எழுதப்பட்ட சுவரின் மீதோ தவறியும் ஒட்டப்பட்டது கிடையாது.
அப்படிபட்ட ஜனநாயக விதி முறைகளுடன் முதல்நாள் நகரமெங்கும் போஸ்டர் ஓட்டப்பட்டது. அப்படி போஸ்டர் ஒட்டியும் திருப்தி ஏற்ப்படவில்லை. அவருக்கு. போஸ்டரும் அதிகமிருந்தது.
மாநகர பேருந்துகளில் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். அதன்மூலம்தான் பட்டி.தொட்டிகளுக்கெல்லாம் சென்று சேரும் .முதல்நாள் நகரங்களில் ஒட்டும் வேலை முடிந்ததும். அன்று இரவோடு இரவாக பசை காய்ச்சி போஸ்டர்களை மடித்து ஒழுங்கு படுத்திக் கொண்டார்
இன்றைக்கு பசை பாக்கெட்டில் விற்பனை செய்வது மாதிரி அன்றைக்கு இல்லை . பசையை காய்ச்சி கரைத்து எல்லாம் ரெடியாக்கி மணி பார்த்த போது மணி மூன்று ஆகியது. படுத்தால் அசதியில் தூங்கி விடுவோம் என்று நிணைத்த அவர். அந்த மாதத்தில் வந்திருந்த “புதிய கலாச்சாரம்“ இதழை மணி ஆகும் வரை படித்திருந்து விட்டு மணி ஆகியதும் சைக்கிளைில் எடுத்துக் கொண்டு அந்த நகரத்தின் மையப் பேருந்து நிலையத்துக்கு சென்றார்.
இன்றைய நாளில் அழகை விரும்பும் அழகே இல்லாத அழகர்கள் “அரசு பேருந்துகளில் போஸடர் ஒட்டுவது ”தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது போல் அன்று இல்லை.
அன்று மாநகரப் பேருந்தில் போஸ்டர் விளம்பரம் செய்வது. அந்த மாநகர மக்களிடத்திலும் அந்த மாநகரைச் சுற்றியுள்ள கிராம மக்களிடத்திலும் அரசியலை கொண்டு சேர்க்கும் பிரதானமான சாதனமாக இருந்தது.
இன்றைக்கு இருக்கிற மாதிரி, சேர். ஆட்டோ, கால்டாகஸி, மினிபஸ் என்று எதுவும் கிடையாது. பெரும்பாலான போக்குவரத்து சாதனமாக அரசு மாநகரப் பேருந்துதான் இருந்தது. நாசமாய் போன புன்னிவான்களால் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாரளமயத்தால் உலகமயத்தால் பொதுப் போக்குவரத்தை குறைத்து எல்லாத்தையும் தனியார் மயமாக்கி விட்டார்கள்.
இந்தப் புன்னியவான்களில் தனியார் மயத்தால்தால்தான்., ஒன்னுக்கு போனால் போஸ்டர், வெளிக்கு போனால் போஸ்டர் என்று எழவு எடுத்தெற்க்கெல்லாம் பேருந்தில் போஸ்டர் ஒட்டியதால்.
அவர்களை சாக்கிட்டு. மகஇக போன்ற அமைப்புகளின் பிரச்சார சாதனமான சுவரொட்டி பிரச்சாரத்தை தடுக்கும் பொருட்டே அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுத்துவிட்டார்கள். சட்டமும் போட்டுவிட்டார்கள்.
இப்போது பஸ்களில் பாருங்கள். இந்த பேருந்தில் சுவரொட்டி ஒட்டுவது
தடை செய்யப்பட்டுள்ளது. மீறி ஒட்டினால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற வாசகம் இருக்கும். மீறி எழவு போஸ்டர்கள் ஒட்டும் பெரிய தலைகள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பது அந்த போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு
நன்றாகவே தெரியும்.
மையப்பேருந்து நிலையத்தில் சென்ற பிறகு சைக்கிளை ”புதிய கலாச்சாரம்” பத்திரிக்கை போடும் ஒரு கடையில் ஓரமாக நிறுத்திவிட்டு மளமளவென்று போஸ்டரில் பசையை போட்டு தனி ஒருவராக, நகரும் பஸ்களில் ஒட்ட ஆரம்பித்தார்.
மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்களும் இவரைப்போலவே, இந்திய அமைதிப்படை பிரச்சினைக்காவே போஸ்டர் ஒட்டிக் கொண்டு இருந்தனர். அவர்கள் இருவர் மூவராக சேர்ந்து ஒட்டிக் கொண்டு இருந்தனர்.
கொஞ்சம் விடிந்த நேரத்தில் இவருக்கு ஆதரவாக ஒரு தோழர் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நின்று கொண்டு இருந்த பஸ்களிலும் வெளியேறும் பஸ்களிலும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டினர்.
ஒட்டிய போஸ்டருடன் வெளியேறிய பஸ்களினால் பிரச்சாரம் சூடு பிடித்தது. அதை மோப்பம் பிடித்து பொறுக்க முடியாத காங்கிரசு களவானிகளில் யாரோ ஒருத்தர் போலீசுக்கு போன் செய்து தூண்டிவிட....
போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு இருந்தவர்களை தேடி , நாலு போலீஸ் நாலா புறமும் தேடி வந்தது. உதவிக்கு வந்து போஸ்டர் ஒட்டிக் கொண்டு இருந்த தோழரை போலீஸ் பிடித்தது.
போஸ்டருக்கு பசை போட்டுக் கொண்டு இருந்த இவர். அதனைக் கண்டதும் பசை வாளியுடன் ஓடிச் சென்று, நான்தான் போஸ்டர் ஒட்டியவன். நான் ஒட்டுவது புதிய கலாச்சாரம் என்ற பதிவுப்பெற்ற பத்திரிக்கையின் வால் போஸ்டர் அவர் எனக்கு உதவிக்காக வந்தவர்.
அவரை விட்டு விடுங்கள் என்றார்.
பசை வாளியுடனும். போஸ்டர்ருடனும் இருப்பதை பார்த்ததும், அவரை அடிக்கடி பார்த்து இருப்பதால் அவரிடம், அமைதிபடையை எதிர்த்து போஸ்டர் ஒட்டுவதாக சங்கு ஊதி விட்டவர்களை பற்றிய விபரத்தை சொல்லியபடி போஸ்டரின வாசகத்தை பார்த்துவிட்டு உதவிக்கு வந்த தோழரை அந்த இடத்தை விட்டு போகச் சொன்னார்கள்.
இதைக்கண்டதும் ஒட்டிக் கொண்டு இருந்த மாற்று அமைப்பினர்களும் பின்வாங்கி விட்டனர்.
இவரையும் மாற்று அமைப்பினைச் சேர்ந்த இருவரையும் சேர்த்து,அருகில் இருந்த ரிக்சாவில ஏற்றிக் கொண்டு போலீஸ் நிலைத்திற்கு கொண்டு சென்றனர். அவரும் எல்லா போஸ்டர்களையும் ஒட்டிவிட்ட வெற்றிக் களிப்பில் மிதந்தார்.
அன்று மதியம் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக வழக்கு போடப்பட்டு மாவட்டக் கோர்ட்டிக்கு கூட்டிச் சென்று மாஜிஸதிரேட்
முன் இழுத்து ஆஜர்படுத்தப்பட்டு பதிணைந்துநாள் காவலில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
போஸ்டர் ஓட்டக்கூட உரிமை இல்லை ஜனநாயக நாட்டில் !
பதிலளிநீக்குத ம 1
அதனால்தான் புடுச்சு 15 நாள் உள்ளே தள்ளிடாங்க......பகவான்ஜீ
பதிலளிநீக்கு