ஞாயிறு 08 2014

தந்தைக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த மகன்....


படம்ohoproduction.blogspot.com











ஒரு ஊரில் ஒரு அப்பன் ஒருவன் இருந்தான். அந்த அப்பனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.

அந்த அப்பன் ஒரு நாள் சாகும் தருவாயில் இருந்தபோது. தன் மகனை அழைத்து  சொன்னான்.

மகனே நீதான் எனக்கு உண்மையான மகன். நான் சேர்த்த வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தும் உனக்குத்தான். நீ கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்  மற்றவர்களிடம் ஈவு,இரக்கம் பார்க்காமல் இந்த சொத்துக்களை சம்பாதித்தேன.

இதனால் எனக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. பொறுக்கி, கொள்ளக்காரன், கொலகாரன் என்று பெயர்களை பெற்றேன்.

இந்தப் பெயர்கள் அப்போது எனக்கு பெருமையாக இருந்தாலும் போய் சேர வேண்டிய நாளில் இந்தப் பெயர்களால் எனக்கு மன நிம்மதி இல்லை.

அதனால் என் மகனான நீ. என் மனக்குறையை போக்கும் விதமாக இந்த சொத்துக்களை  பயன்படுத்தி என்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் விதமாக பயன்படுத்தி என் மனக்குறையை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

 கண்களில் நீர் வழிய ,சீராட்டி பாராட்டி வளர்த்த அப்பன் சாகப்போகும் நிலையை கண்டு அமைதியாக இருந்த மகன். தந்தையின் கரத்தை பிடித்து

தந்தையே.. தங்களின் மனக்குறையை போக்கி உங்களுக்கு நற்பெயரை வாங்கித் தருவதே..உங்கள் மகனின் லட்சியம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கி நற்பெயரை நிலைநாட்டுவதே என் கடமை என்றான்.

 மகனின் நம்பிக்கையான வீர வசனத்தால் சந்தோஷம் அடைந்த தந்தை மனம் நிம்மதி அடைந்தவனாக போய்ச்சேர்ந்தான்.

தந்தையை புதை்த மண்ணின் ஈரம் காய்வதற்குள் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற  எந்தெந்த வழிகளை கையாலாம் என்று தன் நலம் விரும்பி மற்றும் அடியாட்களுடன் வினவினான.

தங்களின் தந்தையின் ஒவ்வொரு பிறந்த நாள் மற்றும் நிணைவு நாட்களில் இந்த ஊரு மக்களுக்கு தான தருமங்கள் செய்து அன்னதானமிடலாம் என்று ஒருவன் முன்மொழிந்தான்.

இது சரிப்படாது. இந்த ஊரு மக்கள்  இன்னிக்கி நம்மகிட்ட வாங்கித் தின்னுபட்டு, நாளைக்கு வேறு ஒருத்தன் நம்மளைவிட அதிகமாக கொடுத்தால் அவன் பக்கம் சாய்ந்து விடுவார்கள். என்றும் பிறந்த நாளும் இறந்த நாளும் அருகருகே இருப்பதால். இலவசத்தை வாங்கிக்கொண்டு மறந்து விடுவார்கள் என்றான்  வேறு ஒருவன்.

உடனடியாகவும் செய்தாகவேண்டும் தந்தையின் நற்பெயரும் நீண்ட நாள்  நிநிலைக்க வேண்டும் அதற்கு வழி என்னவென்று மகனும் யோசனையில் ஆழ்ந்தான்.

அப்போது, தந்தை செய்த  அநியாயத்தை விட மகன்  செய்யும் அதிகமான அநியாயம்தான் தந்தையின் அநியாயம் மறைந்து தந்தைக்கு பேறும் புகழும் நிலைக்கும். அதனால் தந்தையைவிட மகன் பஞ்சாமா பாதங்களை செய்தால் மக்கள் மகனை தூற்றி தந்தையை போற்றுவார்கள் என்று சொன்னான் அடி ஆட்களின் ஒருவன்.

மகனுக்கு அதுவே  சரியாக தென்பட்டது. தன் பெயரைவிட தன் தந்தையின் பெயரே நிலைக்க விரும்பினான.உடனே அந்தச் செயலை செயல் படுத்தினான்.

அந்த ஊரிலுள்ள பெண்களின் தாலியில் இருந்த தங்கத்தையும் தங்கச் செயினையும் பறித்தான். தந்தைக்கு எதிராக இருந்தவர்களை அடித்து விரட்டினான். தன்னை எதிர்த்தவர்களின் வீட்டுப் பெண்களை மானபங்கம் செய்தான். இவனுடைய அக்கிரமங்களை கண்டு கொதித்து எழவில்லை எல்லோரும்  ஊருக்கு வந்தது நமக்கும் வந்தது என்று  இப்படி புலம்பினார்கள்

எப்பா சாமி தந்தையைவிட மகன் படு கொடுமைக்காரனாக இருக்கானே.. இவன் தந்தையே பராவாயில்லையே என்று  நிணைக்க வைத்தான் நாளடைவில். இவனின் தந்தை நல்லவனாப்பா, நேர்மையான ஆளப்பா! என்றும் சொல்ல வைத்தான்.

இப்படியாக இந்த மகன் தன்னுடைய பராமக்கிரக செயல்களால் தன் தந்தையின் கெட்டப் பெயரை போக்கி நற்பெயரை ஏற்ப்படுத்தினான். தன் தந்தைக்கு கொடுத்த வாக்கையும் தன் லட்சியத்தையும் நிறைவேற்றிய மகனாக வலம் வந்தான்.
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...