படம்
மூன்றே நாட்களில் எழுதி முடித்த நாவல் பெயர் “கானகன்” இந்த நாவலைப் பற்றி நான் என்ன நிணைத்னோ அதில் ஒன்றிரண்டை, நாவலைப்பற்றிய அமர்வில் உறையாற்றியவர் கூறி விட்டார்.
அவர் பேசுவதற்கு முன்பே நான் நிணைத்தவிட்டதால் அதனையும் மற்ற சிலவற்றையும் கூறிவிட்டு நான் தப்பித்துவிடலாம்.
பழிவாங்கும் தமிழ்படம் ஒன்றை பார்த்ததை நிணைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கதாநாயகன் .அவனுடைய சிறுவயதில் தாயை கொன்ற வில்லனை
பழி வாங்கவேண்டும் என்ற சிந்தனையிலே வளர்ந்து அல்லும்பகலுமாய் அலைந்து திரிந்து, வில்லனை கொல்வதற்கு சமயம் பார்த்து,வில்லனை பழி வாங்கியவுடன் கதை முடியும். இதே மாதிரியானமுடிவுதான், “கானகன்” நாவலின் முடிவாகத் தெரிகிறது. இந்த முடிவானது நாவலின் ஆசிரியர் திரைத்துறையில் இருப்பதால்..அதன் தாக்கத்தின் பாதிப்பாக இருக்கலாம்.
அய்ந்தறிவு படைத்தாக சொல்லப்படும் விலங்குகளுக்கு பழிக்குபழி வாங்கும் திறன் இருப்பதாக ஆசிரியர் சரவணக்குமார் உரையாடல் அரங்கில் கூறியபடி வேட்டையன் தங்கப்பனால் கொல்லப்பட்ட தாய்ப்புலியின் வாரிசான பாப்பா புலி வேட்டையன் தங்கப்பனைநிணைவில் வைத்திருந்து பழிவாங்கியதற்கு ஆதாரமாக“காடடுயீர்-கானகப் பாதுகாப்பாளர் லாரன்ஸ் அந்தோனி எழுதிய மூன்று புத்தகங்களையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஆதாரமாகக்கொண்டு இந்த நாவலை எழுதியிருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது.
இதற்கு மாறாக. நடப்பில்..சமூகத்தில் நிலவும் நிகழ்வுகளை பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.
சில உதாரணங்கள் . பாம்பு பால் குடிக்கும் என்று பால் ஊற்றுகிறார்கள்.பாம்பு மகுடி இசைக்கு ஆடுவதாக கூறுவதும். கொட்டாச்சியை ஒதக்கி வைத்துக்கொண்டு பழி வாங்கின யானை கதைகள் மாதிரியான கதைகளை தமிழ் சினிமாவில் கண் காது எல்லா வைத்தும் காடடி இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்ன? பாம்பு பால் குடிக்காது. மகுடி இசை கேட்க பாம்புக்கு காது இருக்காது. இப்படியாக ஒவ்வொருத்தரும் தங்களின் வாழ்விடங்களில் நடந்த நிகழ்ந்த கதைகளை தொன்று தொட்டு உப்பு,புளி, காரம் சேர்த்து சொல்வார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லனும் என்றால். இந்தியாவுக்கு காந்தி, அடிஉதை, மிதிபட்டு, கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்- என்ற எதிர்த்து பேச முடியாத கதைகளைப் போல்தான்.
மலைவாழ் மக்கள் -தாய் புலியை கொன்ற வேட்டையனை ,பாப்பா புலி பழிக்குப்பழியாக கொன்றதாக அவர்கள் ரசனைக்கு ஏற்றாற்போல் கதை கூறியிருக்கிறார்கள்.
இந்த நாவலின் சிறப்பு.மலைவாழ் மக்களின் பேச்சு வழக்குகளை அப்படியே பதிவிட்டு இருப்பது.............முடிவாக.........
குறையைச் சொன்னால் சோர்ந்து விடுவார். நிறையைச் சொன்னால் மிதந்து விடுவார் ,
என்ற சமூக நடப்பு நிகழ்வுகளினால் ” வலசை” உரையாடல் அரங்கில் வெளியிடப்பட்ட , லச்சுமி சரவணக்குமார் “ மூன்றே நாட்களில் எழுதிமுடித்த நாவல்” ஆன “காரிகனை” படித்துப் பார்த்து தங்களின்கருத்துகளை பகிருங்கள்என்று கூறி. “கானகன்” நாவல் பற்றியஎனது புராணத்தை நிறுத்திக் கொண்டு தங்களின் பார்வையில் “கானகன்” புராணம் எப்படி??? என்று எதிர் பார்க்கிறேன்.
ராம .நாராயணன் இல்லாத குறையை இந்த கதை தீர்த்து வைத்துவிடும் போலிருக்கே !
பதிலளிநீக்குத ம 1
ராம நாரயணன் படத்தில் மிருகங்கள் பேசி பழி வாங்கும். இந்த நாவலில் பாப்பா புலி பேசாமல் சவுண்டு கொடுக்காமல் பலி வாங்கும் ..
பதிலளிநீக்கு