பக்கங்கள்

Thursday, July 10, 2014

சினிமா பாடலுக்கு கண்கலங்கியவர்கள்---சிறுகதை


படம.அன்பின்வாசல்.

நண்பர்கள் இருவர். பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள். சொந்த ஊருக்கு வந்தவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.தங்களுடைய சந்திப்பில் தங்களுடைய வாழ்நிலையைப்பற்றியும் குடும்ப நிலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டார்கள்.

தொடர்ந்த அவர்களது பேச்சில் தங்களின் பழைய நிணைவுகளையும் அசை போட்டனர். அந்த அசைவுகளில் சினிமா பக்கமும்,சினிமா பாடல்களைப் பற்றியும் அவர்களின் பேச்சு சென்றது.

நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்த பக்கம் வந்த ஒருவர். தன் வேலையின் ஊடே நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்ததை செவிமெடுத்து கேட்டுக் கொண்டு இருந்தார்.

சினிமா பாடலைப்பற்றிய பேச்சில்.இளையராஜாவின்இசையில் வந்த “கண்ணே கலைமானே” என்றபாடல், படம் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே தன் கண்களை கலங்க வைத்தாகவும் .

அந்தப் படத்தின் வரிகளையும், அந்த வரிகளுக்கு ஏற்றவாறு இசையும். அப்படத்தில் நடித்திருந்த கமலும் சிறிதேவியும் தங்களது நடிப்பால் அவரை கண் கலங்க வைத்தவிட்டார்கள் என்றார் ஒரு நண்பர்.

இதை ஆமோதித்தவராக அடுத்த நண்பர் . படத்தை பார்த்து கண் கலங்குவதைவிட பாடலை கேட்ட மாத்திரத்திலே தான்  கண்
கலங்கியதாக, “நானாக நானில்லை தாயே” என்ற பாடலைக்
குறிப்பிட்டார். மற்றொரு நண்பர்.

அவர்கள் இளையராஜா ரசிகர்களாக இருக்கவேண்டும் அல்லது கமல் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கவனித்தவர்.

சிவ பூஜையில் கரடி நுழைந்த கதையாக... நீங்கள் கமல் ரசிகர்களா?  இளையராஜா ரசிகர்களா? என்று கேட்டுவிட்டார்.

அப்பொழுதுதான் இரு நண்பர்களுக்கும் தங்களின் பேச்சை அவர் கவனித்து கொண்டு வந்திருப்பதை அறிந்தார்கள்.

இருந்தும் அதற்க்காக நண்பர்கள் வெட்கப்படாமல்,“ நாங்கள் யாருடைய ரசிகர்களும் இல்லை. நாங்கள் பார்த்த படங்களில் உள்ள பாடல்கள் எப்படி எங்களை அறியாமல் கண் கலங்க வைத்துவிட்டதை  பேசிக் கொண்டு இருக்கிறோம் என்றுவிட்டு தங்களை பற்றி சிறிது அறிமுகம் செய்து கொண்டார்கள்.

அவரும் நண்பர்களிடம் தன்னைப்பற்றி அறிமுகம் செய்துவிட்டு, நண்பர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

அந்தக் காலத்து பாடல்களுக்கு நீங்கள் கண் கலங்குவது மாதிரி கண் கலங்க கூடாதன்னுதான் இந்தக் காலத்து படங்களின் பாடல்களில் குத்துப் பாட்டும் ஓவர் சத்தமும் புரியாத வார்த்தைகளும் கொண்ட பாடல்களாக வருகின்றன

 இப்ப வரும் பாடல்களும் காட்சிகளும்  ரசிக்கிற மாதிரியாக இருப்பதில்லை. அப்படியே ரசித்தாலும் இப்படிக நீங்கள் பேசிக் கொள்வது மாதிரியாக மனதில் ஒட்டவில்லை என்றும்

அப்படியே, இப்ப வந்த படங்களிலுள்ள பாடல்களில் உங்கள் மனதை தொட்ட பாடல்களை ஒன்று கூறுங்கள் என்றார்.

நண்பர்கள் இருவரும்  அவரின் வாதத்துக்கு மறுப்புரை எதுவும் கூறாமல் ஆமாம், நீங்கள் கூறுவது உண்மைதான் என்றனர்.இப்ப வரும் பாடல்கள் மன்தில் நிற்பதில்லை என்றனர்.

நண்பர்களான உங்களைப்போல் சினிமாவில் காட்டப்படும் துயரக் காட்சியையும்  துக்க   காட்சியையும்  அதனுடாக பாடப் படும் பாடலையும் கேட்டு கண் கலங்கியவர்கள். நிஜத்தில் நடக்கும் துக்க துயர காட்சிகளுக்கு கண் கலங்கி இருப்பார்களா...?? என்று கேட்டார்

நண்பர்கள் இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக அவரையே பார்த்தார்கள்.

பின் அவரே தொடர்ந்தார். நிஜத்தில் மவுலிபாக்கத்தில் நடந்த 11மாடி இடிந்த விபத்தில் மடிந்துபோன 60 பேர்கள் பலியான காட்சிகளை கண்டும் கேட்டும் இருந்தவர்களில் எத்தனைபேர்கள், இறந்தவர்களின் உறவினர்களைத்தவிர நிஜத்தில் கண் கலங்கி இருப்பார்கள் சொல்லுங்கள் என்றார்.

மனசாட்சிபடி சொல்வதென்றால் இறந்தவர்களின் உறவினர்களைத் தவிர மற்ற யாரும் கண் கலங்கி இருக்க மாட்டார்கள். நாங்களும் பேப்பர்களை படித்தோம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். ஆனால் எங்களின் பேச்சின் ஊடே மவுலிப்பாக்கம் சம்பவம் பற்றி பேச்சே வரவே இல்லை. நீங்கள் சுட்டிகாட்டிய பின்புதான் அந்த சம்பவத்தின் நிணைவே வருகிறது.என்றார்கள் நண்பர்கள் இருவரும்.

அவர்களும் வெளியூரில்  தங்கி வேலை பார்ப்பவர்களாக இருந்தார்கள் .

நண்பரிகளில் ஒருவர் கேட்டார்.ஏன்? இப்படி மறதி??? என்றார்.

மறதி மட்டும் இதற்கு காரணமல்ல.... சிந்தனையும் அப்படியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் உங்கள் வாழ்நிலைதான் உங்கள் சிந்தனையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது.

இப்படிபட்ட சிந்தனைக்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் இன்றைய அரசியலும், சமூக அமைப்பும் செயலாற்றுகின்றன. அதனால்தான்.

நீங்கள் மட்டுமல்ல, வறியவர்களும்கூடசினிமாவில் காட்டப்படும் துயரக் காட்சிகளையும் துக்கப்பாடல்களையும் கண்டு கண் கலங்குபவர்கள். நிஜத்தில் நடக்கும் காட்சிகளுக்கும் நடந்த நிகழ்வுகளுக்கும் கண் கலங்கவதில்லை. அதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை.

செத்துப்போனவர்களின் உறவினர்கள்கூட பதினாறு நாட்கள் கழித்து நடக்கும் கருமாதி என்ற ஈமக்கிரியை வரைக்கும் தான் நிணைப்பார்கள்.அப்புறம் அவர்களும் இந்த மைய நீரோட்டத்தில் கலந்து விடுவார்கள். என்றுவிட்டு

அமைதியாக தன் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த நண்பர்களிடம், இடையில் நுழைந்து உங்கள் ரசனையை குலைத்துவிட்டதற்க்காக மன்னிப்பு கேட்டுவிட்டு , அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அவர்.

நண்பர்கள் இருவரும்  அவர் சென்ற திக்கை பார்த்தபடி,  தங்கள்  கண்களுக்கு அவர் உருவம்மறையும் வரைஅமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
.
4 comments :


 1. சினிமாவில் காட்டப்படும் துயரக் காட்சியையும் துக்க காட்சியையும் அதனுடாக பாடப் படும் பாடலையும் கேட்டு கண் கலங்கியவர்கள். நிஜத்தில் நடக்கும் துக்க துயர காட்சிகளுக்கு கண் கலங்கி இருப்பார்களா...??

  சரியான சவுக்கடி கேள்வி நண்பரே உண்மைதான் நிஜத்தை மறந்து விட்டு நிழலை பூஜிக்கிறது தற்போதைய சமூகம், அருமையான பதிவு.
  குறிப்பு-என்னை சினிமா எப்பொழுதுமே சலனப்படுத்தியதில்லை நண்பரே... ரசித்திருக்கிறேன் ரசனைக்குறியவைகளை மட்டும், அன்றும்,
  இன்றும்,
  என்றும்...

  ReplyDelete
 2. தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பரே!!

  ReplyDelete
 3. நல்ல கேள்வி ,செத்த பிணத்திற்கு சாகப் போற பிணம் அனுதாபப பட்டு என்ன நடக்கப் போகிறது என்ற ஞானம் எல்லோருக்கும் வந்து விட்டதோ ?
  த ம 1

  ReplyDelete
 4. அவ்வளவு சீக்கிரத்திலோ ஞானம் வந்துவிடப்போகிறது... பெய்ய வேண்டிய நேரத்தில் மழையே மறுக்கும்போது...

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!