வெள்ளி 01 2014

நடுநிலையில்லாத நீதி மன்றங்கள்....

படம் வினவு












மத்தியில் மோடி அரசின்  உச்ச நீதி மன்றமாகட்டும், மாநில ஜெ அரசின் உயர் நீதி மன்றமாகட்டும் மாவட்ட  நீதி மன்றமாகட்டும்  இந்த நீதி மன்றங்கள் . “சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற சட்டத்தின் படி நடுநிலையாக இருந்தது இல்லை . நேர்மையாகவும் இருந்தது இல்லை .

சூ தந்திரம் வாங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஏகப்பட்ட சான்றுகளை கூறலாம். இருந்தாலும். சமீபத்தில் நிகழ்ந்த, நிகழும் நிகழ்வுகளை கன்டாலே  நடுநிலையில்லாத நீதி மன்றங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த நீதி மன்றங்கள்  ஆங்கிலேயன் கோலோச்சிய காலமான அப்போதும் சரி,
இப்போதும்சரி, எப்போதும்சரி, அதன் விசாரனையும். காலம் கடந்து வழங்கும் தீர்ப்பும் சரி,நேர்மையாகவோ, நடுநிலையானதாகவே இருந்ததே இல்லை.

வறியவர்களுக்கு ஒரு நீதியும் வசதியுள்ளவர்களுக்கு ஒரு நீதியுமாகத்தான் வழங்கி வருகிறது. அப்படியான நீதிகளுள் ஒன்று கும்பகோணம் தீ விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு.  பார்க்க. http://www.vinavu.com/2014/07/30/kumbakonam-school-fire-tragedy-11-acquited-10-guilty/

 குஜராத்தில் மோடி செய்த படுகொலை வழுக்கு விசாரனையின்போது   சிறப்பு புலனாய்வின் மோசடியும் அதையொட்டி உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகள்  ஒரு சான்று.


பார்க்க--- http://www.vinavu.com/category/hindutva-judgements/

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு  வழக்கு முறையைப்பார்த்தால், மத்திய உச்ச நீதி மன்றமும் சரி, மாநில உயர் நீதி மன்றமம் சரி, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற ஊதி பெருக்க வைத்த பலூன் வாசகம்  வெடித்து சிதறுவதைக் கானலாம். இவருக்காக இந்த நீதி மன்றங்கள் எப்படி எல்லாம் வளைந்து கொடுக்கின்றன.

அப்படி வளைந்து கொடுக்கும் செயல்களுக்கு தொழில் முறைக்குக்கூட நேர்மை இல்லாமல் வியாக்கினம் செய்கின்றன.எனபதை செய்தி ஏடுகளிலும். வழக்கு தொடுத்த கட்சியின் தலைவர் புலம்பும்  கட்டுரைகளிலும் கானலாம்.

இப்படிப்பட்ட நீதி அரசர்கள் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சிகளின் சார்பான நீதி அரசர்களாக இருப்பார்களாக....!! அல்லது நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்றும்  சொல்வார்களா??ஃ நானே (நீதி) அரசன் நானே கள்வன் என்று நீதி  தவறியதற்க்காக  செத்து போவார்களாக.........




படம் வினவு


















பார்க்க---http://www.vinavu.com/2013/10/10/jayalalithaadisproportionate-assets-case/


ஏழை- பணக்காரன், தொழிலாளி- முதலாளி,உண்மைகள் நிலவுகின்றதைப் பார்த்தால் ,சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் இந்த அரசுகள் நடுநிலையாக  இருந்ததே இல்லை 

இருக்கப்பட்டவர்கள்,  “சட்டம் அனைவருக்கும் சமம்” என்பதை தங்களின் வசதிக்கேற்ப எப்படியெல்லாம் வளைத்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தகிறார்கள். என்பதும்  வழக்காடுபவர்களுக்கும், வழக்குதொடுப்பவர்களுக்கும், இருவரின் வாதகங்களை கேட்பவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும்.

இந்த அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், போலீசும், நீதி மன்றங்களும் ஒரு பக்க சார்பாக இருந்துகொண்டு, அவர்களிலே ஒரு சிலரின் நேர்மையைச சுட்டிக்காட்டி, இது அனைவருக்கும் சார்பான அரசு என்று ஏய்க்கின்றனர்.

பத்திலே ஒன்று பழுதில்லை என்பது மாதிரிதான் மக்களும் மாற்றுவழிக்கு செல்ல மனமில்லாமல் அடித்துவிட்ட பந்துபோல் இவர்களிடமே செல்கின்றனர். இதனால்தான் உலகில் உள்ள நீதி மன்றங்கள்  எல்லாம் நடுநிலையில்லாத நீதி மன்றங்களாக  நேர்மையில்லாத மன்றங்களாக பீடு நடை போடுகின்றன.

நேர்மையான ,நடுநிலையான தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அரசு நிர்வாகத்தில் ஒரு சிலரைத்தவிர,மற்ற எல்லோருமே  சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்களாக இருப்பதால்தான் .இந்த அரசைக் காப்பாற்ற நேர்மையற்ற..ஒருதலை பட்சமான தீர்ப்புகளை வழங்குகின்றன.





5 கருத்துகள்:


  1. உறங்கும் மக்கள் விழிக்காத வரை விடியாது நண்பா...

    பதிலளிநீக்கு
  2. ஒண்ணும் கவலைப் படாதீர்கள் ,நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் உண்மையை பிட்டு பிட்டு வைப்பார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. முழிச்சிகிட்டே தூங்குகிற மக்கள் என்னைக்கு முழிச்சு விடிவு வந்து.....ம்..ம்.ம்

    பதிலளிநீக்கு
  4. ஓய்வு பெற்ற பின்பு ...பிட்டு படமா ஓட்டி ... அதைப்பார்த்து ...ஓன்னும் பன்னமுடியாது.....சொரியக்கூட முடியாது...

    பதிலளிநீக்கு
  5. மாபெரும்(கவிதை) போரா........அடி...ஆத்தி...... இது மொதல்லக்கே மோசமாச்சே...........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்