படம்- |
ஆட்சியில் இருக்கும்போதோ பதவியில், அதிகாரத்தில் இருக்கும்போதோ. தன் கண்முன்னோ , அல்லது தனக்கு தெரிந்தோ,அல்லது தாங்கள் கண்டு பிடித்தோ, அல்லது பரவலாக பேச்சு அடிபட்டபோதோ, தவறுகளோ, முறைகேடுகளோ, கொடுமைகளோ, ஊழல்களோ, எதாவது ஒன்று நடந்த பொழுது, நடக்கும் பொழுது , நடந்து முடிந்த பொழுது,
அதனால் தங்களுக்ககோ, தங்களைச சேர்ந்தவர்களோக்கோ பாதிப்போ, குறைபாடுகளோ, இம்சைகளோ வந்தால் அதைப்பற்றிய விவரங்களை மூடி மறைப்பது, அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பது, தங்களுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தால், அதைப்பற்றி உலகத் தத்துவம் பேசுவது.. இப்படியாகத்தான் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டவரையிலுள்ள ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இருந்து வந்துள்ளார்கள்.
நல்லா இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள், மற்றவர்கள் ஆடிய ஆட்டத்தைக கண்டு காணாமல் இருந்தவர்கள். சாகும்போது சங்கரா....சங்கரா...என்று புலம்புவது மாதிரி..................
முன்னால் உச்சி குடுமி மன்றத்தில் உச்சி குடுமியாக இருந்தவர். தாம பதவியில் இருந்தபோது நடந்த ஊழல்களை பற்றி வாய் திறக்காமல் இருந்தவர். தனக்கு தெரிந்த சட்டவழி முறைகளின்படியே வெளியே தெரியப்படுத்தாமல்,அம்பலத்துக்கு கொண்டு வராமல்.. இருந்தவிட்டு
பதவியில் ஓய்வுப் பெற்று. பதவிக்கான பணப்பலன்களை எல்லாம் பெற்று விட்டு, தனக்கு இனி எந்தப் பாதிப்பும் வராது என்று தெரிந்த நிலையில் தன் பதவிக் காலத்தில் நடந்த நீதிமன்ற ஊழலை வெளிப்படுததுவதால் என்ன பலன் , என்ன நடவடிக்கை வந்து விடப்போகிறது...
சரி.. சொல்வதிலும் நடுநிலையுடன் எல்லாவற்றையும் சொல்லாமல் ஒரு பக்கம் மட்டுமேயான ஊழலை சொல்லிவிட்டு, மறுபக்க ஊழலை பற்றி தனக்கு தெரியவே தெரியாது என்று மறைப்பது.... அக்கம்பக்கம் பார்க்கக்கூடாது என்று குதிரையின் கண்ணை மறைப்பது போல்தானே.... இப்படித்தான் இவரின் பணியின் போது இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.
இதுவும் மக்களுக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது.....மக்களைத்தான் தட்டிவிட்டா ...சுத்தும் .....செக்குமாடா மாத்திப்பிட்டாங்களே!!!
சரி.. சொல்வதிலும் நடுநிலையுடன் எல்லாவற்றையும் சொல்லாமல் ஒரு பக்கம் மட்டுமேயான ஊழலை சொல்லிவிட்டு, மறுபக்க ஊழலை பற்றி தனக்கு தெரியவே தெரியாது என்று மறைப்பது.... அக்கம்பக்கம் பார்க்கக்கூடாது என்று குதிரையின் கண்ணை மறைப்பது போல்தானே.... இப்படித்தான் இவரின் பணியின் போது இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.
இதுவும் மக்களுக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது.....மக்களைத்தான் தட்டிவிட்டா ...சுத்தும் .....செக்குமாடா மாத்திப்பிட்டாங்களே!!!
சாகும் தருவாயில் இருப்பவர்கள்..சங்கரா....சங்கரா.....என்று புலம்புவது போல்தான் இருக்கிறது.. இவர் சொல்வதும்
ஊழலில் திளைத்தவர்கள் பேருக்குக்கூட............
அரிச்சந்திரனாக....மாறிவிடப்போவதில்லை. மறைந்திருந்திருந்து வாலியை தாக்கிய பின் வெளியே வரும் வில்லன் ராமனைப் போல் தைரியமாய் உத்தமபுத்திரர்களாக வெளியே வந்து அதற்கும் ஒரு கதை.ஒரு வரலாறு எழுதுவார்கள்.
வாழ்க! ஊழல்! வளர்க!!ஊழல்!!!
வாழ்க! ஊழல்! வளர்க!!ஊழல்!!!
பதிலளிநீக்குமக்களைத்தான் தட்டிவிட்டா ...சுத்தும் .....செக்குமாடா மாத்திப்பிட்டாங்களே!!!
நண்பா, மேற்கண்டவற்றை ஏற்றுக்கொள்வதுபோல் இல்லை மாற்றிய மாடுகளுக்கு அறிவிருந்தால் ? மாறிய மாடுகளுக்கு(ம்) அறிவிருந்திருக்கனுமே...
இருக்கிற அறிவ மழுங்கடிக்கத்தான் டாஸ்மாக் சரக்கு ஒன்னு இருக்கு. அதையும்மீறி போனா லத்தி அடி ,கைது சிறை இருக்கே நண்பா...இதையெல்லாம் தாண்டி எப்படி???
பதிலளிநீக்குசரியாகவே சொன்னீர்கள். இதுபோன்ற ஆசாமிகள்தான் இப்பொதெல்லாம் சுயசரிதை போடுகிறார்கள்.
பதிலளிநீக்குத.ம.1
ஆமாம் சாமி போடும் ஆசாமிகள் இருக்கிற வரை இப்படிபட்ட ஆசாமிகளின் சுயசரிதைகள் அவதாரங்களாக போற்றப்படும்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அவர் எல்லோர் ஊழலையும் சுட்டிக்காட்டாமல் இருப்பது நடு நிலைமை இல்லை என்றாலும் ,அரசியல்வாதியை நம்மால் கேட்க முடியாத கேள்வியை அவரால் கேட்க முடிகிறது ,அது மக்களுக்கு உண்மையைப் பறைசாற்றுவதை வரவேற்கத்தானே வேண்டும் ?
பதிலளிநீக்குத ம 2
//மறைந்திருந்திருந்து வாலியை தாக்கிய பின் வெளியே வரும் வில்லன் ராமனைப் போல் தைரியமாய் உத்தமபுத்திரர்களாக வெளியே வந்து அதற்கும் ஒரு கதை.ஒரு வரலாறு எழுதுவார்கள்//
பதிலளிநீக்குமேடை ஏறி முழங்கவும் செய்வார்கள்.
கைதட்டலும் கிடைக்கும். விளைவு என்ன?
எழுதுவோம். செக்குமாடுகள் மெல்ல மெல்லவாவது திருந்துகின்றனவா பார்ப்போம்.
முழு உண்மையைக் காட்டிலும் அரைகுறை உண்மை ஆபத்தானது என்று கேள்வி...
பதிலளிநீக்குசெக்கு மாடுகள் திருந்தும்போது அதுகளுக்கு வயது மூப்படைத்து சாவை எதிர்நோக்கி காத்து கிடக்கும்.
பதிலளிநீக்குசிறந்த விழிப்புணர்வுப் பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்கு