திங்கள் 18 2014

குத்துகாலிட்டு உட்கார்ந்த நிலையை என்னவென்று சொல்வார்கள்??



படம்-www.katturai.com


கிராமப்புறங்களில், மறைவான இடங்களில். ஆண்,பெண், சிறுவர்கள், சிறுமியர்கள் குத்துகாலிட்டு உட்கார்ந்து இருக்கும் நிலையை பார்ப்பவர்கள்  என்னவென்று சொல்வார்கள்.

இதே போல் நகரத்தில் உள்ள நடுத்தரமான வீடுகளிலுள்ள கழிப்பறையிலோ, நகரத்து வீதிகளில் உள்ள கட்டண கழிப்பறைகளிலோ,  குத்துகாலிட்டு உட்கார்ந்து இருக்கும் நிலைகளை என்னவென்று சொல்வார்கள்.

காலையில் இருந்தால் காலைக்கடன் என்றும் மாலையில் இருந்தால் மாலைக்கடன் என்றும் இரவில் இருந்தால் இரவுக்கடன் என்றும்,ரெண்டுங்கெட்டான் நேரத்தில் இருந்தால் ரெண்டுங்கெட்டான் கடன் என்பார்கள் நாகரிகமாக............

என்னுடைய மொழிகளில் சொல்வதென்றால் வெளிக்குப் போவதை சாமி கும்பிடுவது என்று சொல்வேன்.அவசரமாக வருவதை, அருள் வந்துவிட்டது என்று சொல்வேன். கழிப்பறையை கோயில் என்று சொல்வேன்.

இந்தக் கோயில்களிலும்  பாகுபாடு உண்டு. ஒன்று கட்டண தரிசனக்கோயில், மற்றொருன்று கட்டணமில்லா தரிசனக்கோயிலிலும் இரண்டு வகையுண்டு. ஒன்று தங்கள்  வீடுகளில் சொந்தமாக கழிப்பறை வைத்திருப்பவர்கள்,இரண்டு  இல்லாமல்  திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்கள்.

இப்படிபட்ட கோயில்களில் மனிதன் திண்டதில் மிச்ச மீதி கழிவுகளை வெளியேற்ற  குத்துகாலிட்டு உட்கார்ந்திருக்கும் நிலைக்கும் ஒரு ஆசனத்தின் பெயரைச்சூட்டி, அப்படி அமர வைத்திருக்கும் ஒரு கற்சிலையையும் சுட்டிகாட்டி  அதற்கும் ஒரு அவதார வரலாற்றுக் கதையென்று ஒன்றை பரப்பி.

 வெளிக்கு போக குத்துகாலிட்டு உட்கார்ந்து இருப்பது  குக்குடம் ஆசனம் என்றும்,  வெளிக்கு இருக்கும்  கோலத்தில்  ஐயப்பன் சிலை அமர்ந்திருப்பதை ஒலி-ஒளி காட்சியளித்து . அந்தச் சிலைக்கு கண்,காது,மூக்கு வைத்து வைத்து  பரப்பி விடுவது இருக்கே....................


இதைத்தான்.....   மகா......மகா.............. புல்லூருவித்தனம் என்பார்களோ???

6 கருத்துகள்:


  1. படிச்சேன் நண்பா,,, எனது எண்ணத்தை எழுதத்தான் நினைச்சேன் அதுக்குள்ளே அவசரம் TOILET போயிட்டு மீண்டும் வர்றேன்.

    பதிலளிநீக்கு
  2. சாமி கும்பிடுவதைப் பார்க்க வராக அவதாரமும் வருமோ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. இந்த அவசரத்தைத்தான் நண்பா...அருள் வந்துவிட்டது என்கிறேன் நண்பா.

    பதிலளிநீக்கு
  4. அதான் படத்தில் வராகன் காத்துக் கொண்டு இருக்கிறது ஜீ...

    பதிலளிநீக்கு
  5. நம்ம ஊரில
    பனையின் கீழே
    தலைக்கு மேலே
    காவோலை பிடித்துக் கொண்டு
    குந்துவோர் நினைவுக்கு வருகிறதே!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் நிணைவுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....