பக்கங்கள்

Thursday, August 21, 2014

சாதியாய் பிரிந்து ... சாதிவெறியால் இணைந்த சாதிவெறித் தமிழர்கள்..!!

படம்-www.vinavu.com

புலியை முறத்தால்
விரட்டி அடித்தாள்
வீரத் தமிழச்சி.....

குற்றமிழைத்தவன் தன்
மகன் என்றும் பாராமல்
தேர்க்காலில் ஏற்றிக்
கொண்றார் மனு நீதி சோழன்...

போரில் புறமுதுகில்
வேல்வாங்கி வந்தான்
மகன் என்று அவனுக்கு
பாலூட்டிய முலைகளை
அறுத்து எறிந்தாள்...
மாணமிகு தமித்தாய்........

கனக விசயனின் தலையில்
கல் சுமந்து வந்து
 கண்ணகிக்கு சிலை
வடித்தான் சேரன் செங்குட்டுவன்...

இமயத்தில் மீன் கொடி 
ஏற்றி பாரில் தமிழ்
பெருமையை பறை
சாற்றினான் பாண்டியன்..

தமிழனின் தமிழச்சியின்
விரத்தையும்,மானத்தையும்
நீதி தவறாத பண்பையும்
மேடைதோறும்,அரங்குதோறும்
முழங்கி வந்த சாதியத் தமிழர்கள்

தனியார்மயம்,தாரளாமயம்,
உலகமயத்தால் வந்த வாழ்வையும்
அடக்கு முறையின் விதியையும்
கண்டு தப்பிக்கிறார்கள்.......

சாதியாய் பிரிந்து சாதி 
வெறியால் இணைந்த
சாதிவெறித்தமிழர்கள்.


4 comments :


 1. சவுக்கடி வாக்கியங்கள் நண்பா,,,
  சாதீ பிடித்து கருகட்டும்.

  ReplyDelete
 2. இந்த சாதி வெறியர்கள் பெரியார் மண்ணில் என்றுமே ஜெயிக்க முடியாது !
  த ம 1

  ReplyDelete
 3. என்னதான் சவுக்கடி கொடுத்தாலும் சாதி வெறி ஒழிய மாட்டுதே நண்பா...

  ReplyDelete
 4. அதே பெரியார் மண்ணில்தான் இப்படிபட்ட சாதி வெறியர்களும் கை கோர்த்து வலம் வருகிறார்கள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com