பக்கங்கள்

Thursday, September 04, 2014

உலா வரும் நாலுகால் ரவுடிகளால் வியாபாரிகள் அச்சம்...???

படம்--tamilandvedas.com

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம்,உருளைக்கிழங்கு முதல் அனைத்துவகை காய்கறிகள், மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் விற்கப் படுகின்றன. இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் காலை 5 மணிமுதல்,காலை 11 மணிவரை மார்க்கெட் பரபரப்பாக இயங்கும்

அந்த நேரம் பார்த்து சமீப காலமாக  மார்க்கெட்டில் அதிகளவு நாலுகால் ரவுடிகள் சுதந்திரமாக உலா வருகின்றன.  இப்படி  உலா வரும்  நாலு கால் ரவுடிகள் சிதறிக் கிடக்கும் காய்கறிகளை மேய்வதோடு நில்லாமல், மூடைகளில் உள்ள காய்கறிகளையும் முட்டி  வாயை நுழைத்து அந்தக் காய்கறிகளையும் மேய்கின்றன.

இது குறித்து  நாலுகால் ரவுடிகளை பிடித்துச் செல்லும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, பிடித்துப்போகப் பட்ட நாலு கால் ரவுடிகளை அடைக்காமல் விட்டுவிடுவதால்....

பிடித்துச் சென்ற சில நாட்களில் அந்த ரவுடிகள் மீண்டும் சுதந்திரமாக உலா வந்து தங்களின் வாய் வரிசையை காட்டுகின்றன......

இதனால் காய்கறி விற்கும்  வியாபாரிகளும், காய்கறிகளை வாங்க வரும் பொது மக்குகளும் நாலுகால் ரவுடிகளைக் கண்டு மிகவும்  அச்சத்தில் இருக்கிறார்களாம். ..அப்படின்னு தினகரன் பச்சி கத்திச்சு..............

6 comments :


 1. 4 கால் ரவுடிகளை 2 கால் ரவுடிகள் என்ன செய்ய முடியும் நண்பா....

  ReplyDelete
 2. இந்த நாலுகால் ரவுடிகளை ஏன் காவல்துறை பார்த்துக் கொண்டே இருக்கிறது ?
  த ம 1

  ReplyDelete
 3. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 4. சரிதான் இரண்டு கால் குறைவானவர்களால் நாலுகால் உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

  ReplyDelete
 5. காவல் துறைக்கு ஒரு கால் “ ா” தானே உள்ளது. அதனால் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!