படம்--I |
எழுந்ததும் என் மூளையில்
பதிவாகி வாயில் வந்து
ஒலியாய் தெரித்தது
பிட்டு பிட்டாய்
சில பாடல்கள்
முழுசாய் ஒரு பாடலும்
பாடத் தெரியாத எனக்கு
பிட்டு பிட்டு பாடல்கள்
வருவது சந்தோசம் தான்.
அதில் ஒரு பாடல்
“நிணைத்ததை நடத்தி
வைப்பாய் வைகுண்டா...
நடத்தியதை முடித்து
வைப்பாய் கோயிந்தா”
அந்த வைகுண்டனை
அறிந்திருக்கவில்லை
தாது மணல் கொள்ளையன்
வைகுண்டனை அறிந்திருந்தேன்
வினவு தளத்தின் மூலமாக
அந்த கோவிந்தாவை கேட்டதில்லை
இந்தக் கோயிந்தாவை
கேட்டு இருக்கிறேன்.
இப்படியாக பல பிட்டு
பாடல்கள் இது எதனால்
வந்தது என்று திரும்பவும்
அதே மூளையை கொண்டு
யோசித்தேன்.......................
மின்சார பில்லை
கட்டிவிட்டேன்.
தொலைபேசி பில்லை
செலுத்தி விட்டேன்
கடனுக்கான வட்டியை
அடைத்துவிட்டேன்.
அபதாரம் இல்லாமல்
எனவே பிட்டு பிட்டு
பாடல்கள் வந்தது...
இதனால் இருக்கலாம்............
பதிலளிநீக்குஇருக்கலாம்,,, இருக்கலாம்
த.ம.1
நீங்கள் சொன்னால் இருக்கலாம்..இருக்கலாம்....!!!
பதிலளிநீக்கு'பிட்டு' பாடல்கள் மட்டும்தான் இப்போ வந்திருக்கு ,அடுத்து படமும் வரும் :)
பதிலளிநீக்குத ம 2
"பிட் பாடல்கள்
பதிலளிநீக்குசட்டத்தின் முன்பு நாளை சாட்சி சொல்லும் பாடல்களாக அமைந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
நிணைத்ததை நடத்தி வைப்பாய் வைகுண்டா... நடத்தியதை முடித்து வைப்பாய் கோயிந்தா”
புதுவை வேலு
பிட்டு படமும் வந்திரும்மா....அய்யய்யோ..அது ஆபத்தாச்சே.....ஜி...
பதிலளிநீக்குசட்டம்தான் வைண்டனுக்கு வளைந்து கொடுக்கும்போது..பிறகு எங்கிருந்து சாட்சி சொல்லும் பாடல்களாக அமையும் திரு.யாதவன்நம்பி அவர்களே!!
பதிலளிநீக்கு