புதன் 17 2014

உலகில் தைரியசாலிகள் நிறைந்த இரண்டாவது நாடு

படம்--ennaachi.tumblr.com


சாதிவெறி,மதவெறி, மூடநம்பிக்கை போன்ற  பழக்கவழக்கங்கள் கொண்ட காட்டுமிராண்டிகள் நிறைந்த நாடான இந்தியா

உலகத்திலே சாவுக்கு அஞ்சாத தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில்  இரண்டாவது வரிசையில் இருக்கிறது.

தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா எப்படி இரண்டாவதாக வந்தது என்று யோசித்த போது

அதற்க்கான காரணம் இதுதான். என்று தெரிந்தது.

உலகிலேயே அதிகமான செல்பேசி பயன்படுத்தும் நாடு இந்தியா.இந்தியாவில் 2013-ன் புள்ளி விபரப்படி 86.16 கோடி பேர் செல்போன் பயனாளிகள், இந்த செல்போன் பயனாளிகளுக்காக அமைக்கப்படும் செல்பேசி கோபுரங்களும் எண்ணிக்கையடங்காமல் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றபடாமல் அமைக்கப்பட்டுள்ளன். அமைக்கப்படுகின்றன.

செல்பேசிகளினாலும் செல்பேசி கோபுரங்களாலும், லாப வெறி பிடித்த முதலாளிகளிலாலும் ..அறிவியல் கண்டுபிடிப்பின் பயன்கள் சிறிதளவாக இருந்து அதனால் வரும், ஏற்ப்படும் பின் விளைவுகள் நிறைந்த ஆபத்துக்களை பற்றி நல்ல சமூகத்தை  விறும்பும் நல்லவர்கள் பல தடவை பட்டியலிட்டு சுட்டிக் காட்டினாலும்.

 மண்டை மயிறுக்குள் எதுவுமில்லை என்ற கதையாக... அதையெல்லாம் கேட்டும் உணர்ந்தும் இருந்தாலும், டாஸ்மாக் குடிமகன்களைப் போலவே இந்திய செல்பேசி பயனாளிகள் குறைவதாக இல்லாமல் அதிகமாகத்தான் இருக்கின்றன.

அதனால்தான் சாவுக்கு அஞ்சாத தைரியசாலிகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவதாக உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளேன்.


12 கருத்துகள்:

  1. மான்கேடும்.. பெருமையாக பேசப்படுகிறது நண்பரே...!!

    பதிலளிநீக்கு
  2. டாஸ்மாக் குடிமகன்களைப் போலவே இந்திய செல்பேசி பயனாளிகள் என்றது மிக பொருத்தம்.
    இந்தியாவிலே என்னென்ன செல்பேசி எல்லாம் பாவிக்கிறார்கள் என்று சொன்னா, இந்த இந்தியாவிலா சத்துணவில்லாம குழந்தைக இறக்குது யாருமே நம்ப மாட்டாங்க.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் வலிப்போக்கரே!
    செல்போனும் ஒரு போதைமாதிரிதான்!
    இல்லாது இருக்க முடியா மனநோய் மாதிரிதான் ஆகிவிட்டது!
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. உண்மையைச் சொல்றவனைத்தான் பைத்தியம் என்றும் இல்லையென்றால் கம்யூனிச தீவிரவாதி என்றும் பயமுறுத்திவிட்டு இருக்கும்போது.. உண்மையை யாரு நம்புவார்கள் திரு.வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. ஆக..போதைகள் நிறை்ந்த நாட்டின் வரிசையில் இந்தியா முதலாவதாக இடம் பெறும் என்று நிணைத்துக் கொள்ளலாமா..? திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  6. //...கம்யூனிச தீவிரவாதி...//
    என்ன இது! புது கதையா இருக்கு.
    இது எப்போதுதிலிருந்து?

    பதிலளிநீக்கு
  7. முதல் நாடு எது என்பதையும் சொல்லுங்க :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  8. தைரியசாலியின் வரிசையில் இவ்வாறாக முதன்மையாகக்கொண்டுவர இவ்வாறு ஓர் உத்தி உள்ளதா? வேதனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கம்யூனிச புரட்சியாளர்களைத்தான் அவர்கள் கம்யூனிச தீவிரவாதிகள் என்று குறிப்பிடுகிறார்கள். திரு. Alien அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  10. முதல் நாட்டைச் சொன்னால் இரண்டாம்நாட்டு அல்லக்கைகளுக்கு பொறாமை ஏற்ப்பட்டு விடும் என்பதால் பரந்த மனப்பாண்மையில் சொல்லவில்லை நண்பரே!!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஐயா Dr B Jambulingam அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...