திங்கள் 22 2014

அம்மா உணவகம் வந்தக்கதை தெரியுமா..உங்களுக்கு???

படம்-


விண்ணை முட்டும்  கட்டிடங்களும், மால்களும், நவீன கார்களும் செல்பேசிகளுமாக மின்னும் சென்னை நகரத்தில்.

எப்போதும் இல்லாத அளவுக்கு  ரோட்டோர கையேந்தி பவன்களும், கூழ் விற்கும் பெண்களும்  புற்றிசல்களாக முளைத்து வருவதைக் கண்டு..

பெருகி வரும் உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றுப்பசி திண்டாட்த்தை,  கொள்ளைக்கார அம்மாவுக்கு ஆதரவாக அறுவடை செய்யும் நோக்கத்தில்

கையேந்தி பவன்களை ஒழித்துக்கட்டும் மத்தியரசின் புட் ஸ்டாண்ட்ர்ஸ் அன்ட் சேப்டி ஆக்ட் -ன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்க்காகவும் கொண்டு வரப்பட்டதுதான் அம்மா உணவகம் ..

இத்தகைய கையேந்தி பவன்களில் காரை நிறுத்தி, சூப்பர் ஸ்டார்கள் திண்டதை சிலாகித்து  சிலீர்த்து எழுதிய பத்திரிக்கை முண்டங்கள்

சுரண்டப்பட்ட மக்களின் வறுமையை, துர்பாக்கிய நிலையாக  சித்தரித்து கருணை  அடிப்படையில் வழங்கும் ஒரு ரூபா இட்லிக்காக...மக்களை  போதைக்கு அடிமையாக்கி அவர்களிடமிருந்து, புடுங்கிய அம்மா சாராய வருமானத்திலிருந்தும், மின்சார கட்டண உயர்வு, வாட்வரி போன்ற எண்ணற்ற மறைமுகமாகவும், நேர்முகாவும் புடுங்கப்படும் வரி  பணத்தில் தான். அம்மா உணவகம் செயல்படுகின்றன என்பதை மறைத்து கொள்ளைக்காரியை அம்மாவாக . அத்தனை பேருக்கும் படியளக்கும் அன்னலட்சுமியாக காட்டி ஓலமிடுகின்றன்.


7 கருத்துகள்:

  1. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்கிற தத்துவம் நிரூபணமாகி வருகிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்கள்......???

    பதிலளிநீக்கு
  3. தப்பித்தவறி உணர்ந்துவிடக் கூடாதன்னுதான் அம்மா சாராயம், மேய்க்க ஆடு.மாடு, இலவசம் இப்படி எண்ணற்றவைகள் இருக்கின்றன். இவற்றையும்மீறி வந்தால் இருக்கிறது குண்டாந்தடி....

    பதிலளிநீக்கு
  4. அம்மா உணவகத்தை பற்றி சரியான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. அம்மா உணவகத்தை தெரிந்து கொண்டதற்கு நன்றி! திரு. வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  6. தோழரே!
    அம்மா உணவகம் வந்தக்கதை தெரியுமா?
    தெரிந்து கொண்டோமே இன்று உமது
    புண்ணியத்தால்!
    அதுசரி அம்மா தொண்டர்கள் வருந்திய கதை தெரியுமா?
    வலிப் போக்கருக்கு?

    இப்போதயை சூழலிலும் ??????
    இதுபோன்ற பதிவுகள்!!!!

    விடாது கருப்பு(வலிப் போக்கன்) போலும்!


    (வலிப் போக்கரே எங்கே போனீர்?
    குழலின்னிசை பக்கம் ஆளைக் காண வில்லையே?°

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. வேலை அதிகமானதால் தங்களை பார்க்கவில்லை..தற்போது வேலை குறைந்துள்ளது இனி தங்களை வழக்கம்போல் பார்க்க வருகிறேன் நண்பரே.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்