பக்கங்கள்

Sunday, December 21, 2014

உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!

படம்-nellaionline.net

110 கோடி மக்கள்
தொகை கொண்ட
இந்திய நாட்டில்
உழைப்பால் உயர்ந்த
கொள்ளையர்கள் யாரென்று
 உங்களுக்கு  தெரியுமா???

பெரும்பாலானவர்களுக்கு
உழைப்பால் உயர்ந்த
அந்த கொள்ளையர்களை
தெரிந்திருக்காது..........
தெரிந்திருக்கவும் வாய்ப்பு
இருந்திருக்காது..............

படியரிசியில் முனியரிசி
சோமாறும்  உள்ளுர்
ரேஷன்கடை பலசரக்கு கடை
திருடர்களைத்தான் அவர்களுக்கு
தெரிந்திருக்கும்...............

படியரிசியில் முனியரிசியென்ன
படியையே கொள்ளையிட்ட
கொள்ளையிட்ட கொள்ளையர்களை
அவர்களுக்கு..... தெரியாததுதான்.

அவர்கள்தான் தலைமுறை
தலைமுறையாக வறுமையின்
நிழலிலே வாசம் செய்பவர்
களாயிற்றெ.... அவர்களுக்கு
எப்படித் தெரியும்... உழைப்பால்
உயர்ந்த கொள்ளையர்களை..

தலைமுறை தலைமுறையாக
உழைத்து வீனாய் போனவர்கள்
அல்ல கொள்ளையர்கள்.......

கடும் உழைப்பால் உயர்ந்த
 கொள்ளையர்கள் அவர்கள்.
சாதரண கொள்ளயைர்கள்
அல்ல..

கோடிக்கணக்கான விவசாயிகளின்
தொழிலாளிகளின் உழைப்பையும்
அவர்களின் வாழ்வாதாரங்களை
கொள்ளையடித்த தனியார்
மயத்தின் தாராள மயத்தின்
நவீன  கோடீஸ்வர கொள்ளையர்கள்

அவர்கள்தான் இந்தியாவின்
முகேஷ் அம்பானி,லட்சுமி மிட்டல்
திலிப்சாங்வி, அஸ்ம் பிரேம்ஜி
பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி..

4 comments :

 1. விவரமான எனக்கே , ஐவரில் இரண்டு பேரை தெரியவில்லையே !
  த ம 1

  ReplyDelete
 2. உங்களுக்கே தெரியவில்லை என்றால் பாமரர்களுக்கு .............???

  ReplyDelete
 3. அந்த கொள்ளைக்கு பெயர் தான் "திறமை" என்று அர்த்தம் மாறி ரொம்ப நாளாகி விட்டது.

  ReplyDelete
 4. அர்த்தம் மாறிவிட்டாலும் கொள்ளை கொள்ளைதானே திரு. Alien அவர்களே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com