பக்கங்கள்

Saturday, December 27, 2014

அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்..........


படம்--பாரத்ரத்னா.. 

காங்கிரசின் ஊழல் தயவால்  ஆட்சிக்கு வந்தது பாரதீய் ஜனதா கட்சி. அந்தக் கட்சி மற்ற கட்சிகளை மாதிரி ,அந்தக்கட்சிகளைவிட தொழில்நுட்ப உதவியுடன்..  தேர்தலில்  பொய்யான வாக்குறுதி அள்ளி வீசி வாக்காளர்களை  மோசடி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் . அந்தக் கட்சியை வழி நடத்தி வந்தவர்கள் சொன்னார்கள்.

கடந்த அய்ந்து தலைமுறையாக ஆட்சியை கைப்பற்றுவதற்குத் போராடினோம் என்று...., அப்படி போராடியவர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்வார்களோ? அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முதல் வேலையாக எல்லா அதிகார உயர் பதவிகளில் தங்கள் இனமான உயர் பார்ப்பனர்களை நியமித்தார்கள். நீதி வழங்கும் நீதிபதிகளின் தேர்வு முறையை மாற்றியமைத்தார்கள். இதுபோல பலப்பல....

 மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்று ஏட்டளவிலும் வாயளவிலும் இருப்பதை கூடிய விவைில் சனாதனம் நிரம்பிய இந்து (பார்ப்பனர்கள்) தேசம் என மாற்றியமைப்பார்கள்.

படிப்படியாக மாற்றியமைக்கும் வேலைகளில் ஒன்றதான். பார்ப்பனர்களிடையே உயர்ந்தவரும், அவர்கள் சொல்லிக் கொள்கின்ற சுதந்திரத்தை காட்டிக் கொடுத்த தீரரும். போலிகள் உள்பட பல கட்சி ஆதரவில் நல்லாட்சி செய்ததாக வாஜ்பாய்க்கும் சனாதன தர்மத்தை ஊரெங்கும் பரப்புதவதற்க்காகவும் அந்த சனாதனத்தை பாதுகாப்பதற்கு சனாதன மகா சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்கும். “பாரத்ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவதென்ன ,அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

மோசமான கட்சியில் இருக்கும் சரியான நபர்க்கு கொடுத்த விருதைப் பாராட்டியும், மோசமான சனாதன தர்மத்தை விதைத்த மோசமானவர்க்கு வழங்கிய விருதை எதிர்த்தும், ஜனநாயகம், மனிதநேயம்.,கத்திரிக்கா, புடலங்கா, மதச்சார்பற்ற நாடு, பெரியார் பிறந்த  பூமி, அரசியல்  சட்டத்தை வகுத்தவர் அம்பேத்கர் என்று பலப்பல போதையிலே வீழ்ந்து கிடந்ததோடு.  நாண்கு வர்ணங்களை  நிலைநாட்டும் சனாதனம் ஆட்சியில்அமர எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டுட்டு கடைசி கட்டமாக தங்களுடைய கையாலகத்தனத்தால் புலம்பி தவிக்கிறார்கள்.....

 மாளவியாவுக்கு பரதரத்னாக்கு விருது கொடுத்துவிட்டு.... அடுத்ததாக. வில்லாளன்  ராமனுக்கு பாரத்ரத்னாவிருது  அவர்கள் கொடுப்பார்கள். அப்போது  எந்த  புலம்பலும் இருக்காது.


8 comments :


 1. இவங்கே பாரத ரத்னா விருது கொடுக்கிறதால ஏழைக்கு வயிற நிறைஞ்சுடுமா ?
  த.ம. 1

  ReplyDelete
 2. கனவுலகூட நடக்காது நண்பரே.......

  ReplyDelete
 3. அடுத்து ராமனுக்குத்தான் சந்தேகமெனன......

  ReplyDelete
 4. என் கவலை எல்லாம் ,இவர்களின் மத வெறியால் இந்தியாவிலும் தினசரி குண்டுகள் வெடிக்க ஆரம்பித்து விடுமோ என்பதுதான் !
  த ம 2

  ReplyDelete
 5. தோழர் வலிப் போக்கரே!
  பாரத ரத்னா யாருக்கு
  வேண்டுமானாலும் கொடுக்கட்டும்!
  பாரதத்தில் ரத்த ஆறு ஓடமால்
  இருந்தால் போதும் அய்யா
  ஐந்து ஆண்டு ஆட்சிக்கு
  அதுதானய்யா அடிநாதம்!
  கங்கை தூய்மைத் திட்டம்
  சூப்பர் திட்டமாக
  வாழ்த்துங்கள்
  வலிப் போக்கரே!
  புதுவை வேலு

  ReplyDelete
 6. மாளவியாவுக்கு கொடுத்தப்பின் இவர்களின் மூலவர்க்கு கொடுக்காமல் இருப்பார்களா...????????

  ReplyDelete
 7. . பூவோடு நாறும் காய்வது போல..நாமும் கவலைப்படத்தான் வேண்டும்

  ReplyDelete
 8. கங்கை தூய்மைத் திட்டம் என்பதே பெரும் மோசடி திட்டம் திரு.யாதவன் நம்பி அவர்களே!!...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com