ஞாயிறு 28 2014

புதைக்கப்பட்ட மொழியை..தோண்டி எடுத்து உயிர் கொடுத்த அறிஞர்.


 ராபர்ட கால்டுவெல்    http://ta.wikipedia.org/s/7s7

சூத்திரர்கள் மொழி தமிழ்.  இதை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் ஆரியர்கள் என்றார் அறிஞர் கால்டுவெல்

இன்றைய நூற்றாண்டைப் போலவே, 18ம் நூற்றாண்டிலும் ஆங்கிலம் படித்தால்தான் பிழைக்க முடியும், சமஸ்கிருதம் படித்தால்தான் தெய்வத்தின் அருள் கிட்டும்  என்ற நிலை இருந்தது.

இன்றைக்கு மத்திய-மாநில அரசுகள் மாதிரிதான்  தமிழகத்தை ஆண்டவர்கள் மன்னர்களான ராஜராஜன் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் சமஸ்கிருதம் படிப்பதற்கு மானியம் கொடுத்தனர்

அதனால் அன்றைய காலத்தில் தமிழை படிக்கவோ, வளர்க்கவோ ஆளே இல்லாத நிலைமை இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் 18ம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் அறிஞர் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தார். கால்டுவெல் மட்டுமல்ல அவரின் நண்பர்களான வெள்ளைக்காரர்கள் அனைவரும் தமிழ் அறிஞர்கள்.

பவர் என்ற பிரஞ்சுக்காரர்தான் சீவக சிந்தாமணியை கொண்டுவந்தார். இவர் மூலம்தான் உ.வே.சா. பல நூல்களைத் தேடிச்சென்றார். முர்டோக் என்ற அறிஞர்தான் தமிழ் நூல்களின் அட்டவனையைத் தொகுத்தவர். முதன் முதலில் தமிழ் கல்வெட்டை படித்துச் சொன்னவர் ஏ.ஜி. பர்னல் என்பவராவார். இவரைப் போன்றவர்களிடம் தமிழ் பயின்று வந்தவர்கள்தான் ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள்.

தமிழ் மொழியும் கலாச்சாரமும் உன்னமானவை. என்னுடைய ஆய்வு தமிழ் மொழியின் மதியப் பொழுதிலிருந்துதான் தொடங்குகிறது என்றார் கால்டுவெல்.

ஆரியர்-பார்ப்பனர்களின் வேதப் புராணங்களின் புளுகு புரட்டையும் இந்தியாவின் மூல மொழி சமஸ்கிருதமே என்ற வரலாற்று அயோக்கியதனங்களை தகர்த்தது கால்டுவெல்லின் தமிழ் ஆராய்ச்சிதான்.

தமிழை விற்று வயிறு வளர்த்த மன்னர்களும்  (கவி)பேரரசர்களும், தமிழை இளித்தும் பழித்தும் பேசிய நாற வாய்  ஒன்று.  தமிழை வாழ்த்தியது என்று சிலிர்த்து எழுந்து விழா எடுத்தார்கள்.

புதைக்கப்பட்ட தமிழ் மொழியைத் தோண்டி எடுத்து உயிர் கொடுத்து உலா விட்டவர்கள்  கால்டுவெல்லும் அவருடைய சம காலத்து மனிதர்களும்தான்.

அவர்கள்தான்  தமிழ் மரபு குறித்த அடையாளத்தையும் பெருமிதத்தையும் வழங்கியவர்கள்.

தமிழ் மொழியை எனது தாய்மொழி என்றும் , என்னை வாழ வைத்த மொழி என்று சொல்லிக் கொள்பவர்கள் கால்வெல்லை மறப்பது நன்றிக் கெட்டத்தனமாகும்.



நன்றி!!--புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014
தலைப்பைச் சேருங்கள்



11 கருத்துகள்:

  1. கால்டு வெல்லின் கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள் இந்த' நாற' வாய்க்காரர்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. நண்பரே புதுமையான விடயமாக இருக்கிறதே.... எமக்கு..

    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே!
    இதுபோன்ற அரிய பாராட்டினை உரியவர்களுக்கு
    "கால்டூவெல்" சேர்த்தமைக்கு!
    உண்மையில் நீங்கள் சிகப்பு சிந்தனையாளரோ என்றிருந்தேன்!
    அது பொய் நண்பரே!
    சிறந்த சிந்தனையாளர்
    அதுதான் உண்மை!
    (குடிக்கு கூஜா தூக்கும் உலகத்தில்
    மேல்மாடிக்கு(மூளை) ஒரு பிடி கருத்தை
    படி என்று சொல்லும் உமது கருத்தை
    கால்டூவெல் கல்வெட்டே போற்றும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    (தோழரே இந்த கருத்து கசையடிக்கு பயந்து அல்ல)

    பதிலளிநீக்கு
  4. கால் தூசுக்கு ஆகாதவர்கள், நாறவாய்க்கு பாராட்டுவிழா நடத்துகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் கடல்கடந்து இருப்பதால் தெரிய வாய்ப்பில்லைதான் நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் நான் சிகப்பு சிந்தனையாளராக இருப்பதால்தான் விறுப்பு வெறுப்பு இன்றி அறிஞர் கால்டுவெல் பற்றி அறிந்து அவரைப்பற்றி பதிவிட்டுள்ளேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. அய்யா வணக்கம்!
    கார்டுவெல் திராவிடத் தொல்குடிகள் மற்றும் சாதிகள் பற்றி முன்னுரையில் கூறி இருந்த பலபக்கக் கருத்துகளை நீக்கி விட்டே, அவர் ஆய்ந்தெழுதிய,“A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN FAMILY OF LANGUAGE“ பதிப்பிக்கப் பட்டுவந்தது. பறையர், தோடர் முதலிய இனங்கள் தமிழின் தொல்குடிகள் எனக் குறிப்பிட்டிருந்தார் அவர். அவர் கூறிய கருத்துகளை மறுக்க முடியவில்ல என்ன செய்யலாம்,“ தூக்குடா அந்தப் பக்கங்களை எனத தூக்கிவிட்டனர்“
    உங்கள் கட்டுரை காணத் தோன்றுகின்றன நம் தமிழ் வரலாற்றின் மறைக்கப்பட்ட இன்னும் பல பக்கங்கள்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. இன்றைய காலத்தில் தமிழை பேசவோ படிக்கவோ வெட்கபடுகிறவர்கள் தமிழக தமிழர்கள் தான்.

    பதிலளிநீக்கு
  9. உண்தைான் அய்யா.. கால்டுவெல்லின் ஆய்வு “ பறையர்களே பூர்வீகத் தமிழர்கள் என்று நிறுவினார்.

    பாரப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக் கொண்ட சற்சூத்திர தமிழர்கள், தாழ்த்தப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுத்த சாதி வெறியில்தான் ,“ தூக்குடா அந்தப் பக்கங்களை எனத தூக்கிவிட்டனர்“

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான் திரு. வேக நரி அவர்களே... சாதிவெறியாலும், அடிமை மோகத்தாலும்தான் இந்த நிலைமை ஏற்ப்பட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....