படம்- |
2014ம் ஆண்டு முடிந்து 2015ம் ஆண்டு துவங்கிறது. உலகத்திலுள்ள அய்ந்தடி ஆறடி உயரமுள்ள ரெண்டு கால் பிராணிகள் எல்லாம் பழைய ஆண்டுக்கு விடை கொடுத்து, புதிய ஆண்டை வரவேற்று வாழ்த்துவார்கள்.
இந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் சடங்கும் தவறாமல் நடக்கும். பத்திரிக்கைகளும் ,தொலைக் காட்சிகளும் தங்கள் பங்குக்கு பழைய ஆண்டில் நடந்த வற்றை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு விலாவரியாக எழுதியும் காட்டியும் மனப்பாடமாக ஒப்பிப்பார்கள்.
இந்தப் புதிய ஆண்டுக்கு ரெண்டுகால் பிராணிகளின் தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் “எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்க!” என்று ஒப்புக்கு வாழ்த்துவார்கள் .
உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த ஆங்கில புத்தாண்டில் தங்கள் நண்பர்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.. இந்த வாழ்த்துக்களின் படி பெரும்பாலான் மக்களும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்வு அமைந்து விடுவதில்லை. அமையப்போவதுமில்லை.
இது வாழ்த்து சொல்பவர்களுக்கும், வாழ்த்துப் பெறுபவர்களுக்கும் உள்ளங்கனி செல்லிக்கனி போல தெரிந்த உண்மை. இருந்தாலும் வாழ்த்துச் சொல்லாமல் இருப்பதுமில்லை.
இந்தப் புத்தாண்டின் போது “ பழையன கழிதலும், புதியன புகதலும்” என்று சொல்லும் ஒரு வாசகம் ஒன்று உள்ளது. ஆனால்
நடப்பு நிகழ்வுகளைப் பார்த்தால் “ பழையன புகுதலும், புதியன கழிதலும்” மாகத்தான் நடை பெற்று வருகின்றன. கீதா உபதேசமான இன்று உன்னுடையது அது நாளை மற்றொருவருடையதாகிறது என்று நான்கு வர்ணங்களை படைத்த பரமத்மா சொன்னது மாதிரி...
காங்கிரசின் சொத்தாக இருந்த இந்தியா, இனி பாரதீய ஜனதாகட்சியின் சொத்தாக மாறிவிட்டது. அந்த பரமத்வாவின் உபதேசப்படி அடுத்து அது வேறு ஒரு வருக்கு சொத்தாக மாறவிடக்கூடாது என்பதற்க்காக.............
காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் என்னென்ன செய்யாமல் விட்டதோ.என்னென்ன செய்யத் தயங்கியதோ, அதையெல்லாம் தயங்காமல் வீரமுடன் தீரமுடன் செயல்படுத்துகிறது பாரதீய ஜனதாகட்சி... இனி இந்தியா 25 ஆண்டுகளுக்கோ அல்லது அதற்கு மேலாகவேர் .இந்தீயா பாரதீய ஜனதாவின் தலைமையான் ஆர் எஸ்எஸ்-ன் சொத்தாகவே நீடிக்க வகை செய்யுமளவுக்கு.....
அதற்க்கான அடித்தளங்கள் மு்ம்மரமாக போடப்பட்டு வருகின்றன. அதற்க்கான அடையாளம்தான் நீதித்துறை, நிதித்துறை,. நிர்வாகத்துறை , தகவல் துறை, என்று அணைத்து துறைகளிலும் உள்ள அதி உயர் பதவிகளில் ஆர் எஸ்எஸ்-யை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்படுவது இதோடு சமஸ்கிருத்ம்,இந்தி திணிப்பு, குருஉத்சவ், தாய்மதமாற்றம், கோட்சேவுக்கு சிலை, மாவியாவுக்கு விருது, இன்ன பிறவைகள்,
இவைகள் கண ஜோராக மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும். இதில் ஒன்று. தமிழ்நாட்டில் தமிழ் சாமுதாயத்தை சீரழித்த சதிகாரியும் கொள்ளையடித்த குற்றத்திற்க்காக தண்டனை பெற்று பினையில் இருக்கும் கொள்ளைக்காரியும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதும் நடக்கும்.
எவையெல்லாம் பழையவை என்று ஒழிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதோ அவையெல்லாம் மீண்டும் அரங்கேற்றப்பட்டு நிலை நிறுத்தப்படும்.
இந்த புத்தாண்டில் புதிய பயணமாக தமிழ்நாட்டில் .. தேவலோகத்தின் தேவபானமான மதுவை காப்போம், மக்களை ஒழிப்போம். இப்படியும் புத்தாண்டு சங்கல்பமும் இருக்காலாம்.
படம்- |
பதிலளிநீக்குஅருமை நண்பா, தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல பயமாகீது நண்பா,,,,
தமிழ் மணம் 2
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபயப்படாதீங்க நண்பா.... வலை சித்தர் புத்தாண்டு வாழ்த்து சொல்லியக்காங்கோ.. ஈழத்திலிருந்து. யாழ்பாவணன் புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்காங்கோ.... இவங்கெல்லாம் பயப்படாமல்தானே வாழ்த்துச் சொல்லியிருக்காங்கோ... நீங்க வாழ்த்துச் சொன்னால்தானே அதிலிருந்து ஒரு பதிவு போட முடியும் நண்பா....
பதிலளிநீக்குநல்லது வலை சித்தரே..... தங்களின் வாழ்த்து பொன்னாகட்டும்
பதிலளிநீக்குநல்லது திரு.யாழ்பாவணன் அவர்களே!! இந்த புத்தாண்டு வாழ்த்துக்கு என்நிணைவு வந்ததே நன்றி!!
பதிலளிநீக்குவணக்கம்!
பதிலளிநீக்குபொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கவிஞரின்... புத்தாண்டு
பதிலளிநீக்குபுத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்களின் எண்ணம் போல் புத்தாண்டு அமையட்டும்
பதிலளிநீக்கு