பக்கங்கள்

Thursday, January 01, 2015

ஆங்கில புத்தாண்டில் இந்த சாமனியனின் புத்தாண்டு வாழ்த்துரை.படம்--www.thenkoodu.in


அன்பு நண்பர்களே..!
எல்லா வளமும்
பெற்று பெரு
வாழ்வு வாழ
தாங்கள் புத்
தாண்டு வாழ்த்து
கூறி உங்கள்
கடமையை முடித்து
விட்டீர்கள்.................

தங்களின் வாழ்த்துகளில்
வெறுமனமே பலிக்காத
நிகழாத அந்த
வாழ்த்துக்களை போல்
நானும் புத்தாண்டு
வாழ்த்துக்களைச் சொல்லி
முடித்துக் கொள்ள
 விரும்பவில்லை..அதனால்
தான் புத்தான்டு
வாழ்த்துக்கள் கூறவில்லை.

இந்தப் புத்தாண்டில்
தமிழ்நாட்டு தமிழர்களுக்கு
தமிழ்நாட்டு அரசு
புத்தாண்டு பரிசு
ஒன்று வழங்கியிருப்பது
தெரியுமா...??

இருந்தாலும் அரசு
வழங்கிய  புத்து
ஆண்டு பரிசு
என்ன என்று
தெரியுமா...??


15 சதம் மின்
கட்டணம் உடனடியாக
அமுலுக்கு வந்துவிட்டது.
3400 கோடி கூடுதல்
பணம் உங்களைப்
போன்ற என்னைப்
போன்ற மக்களின்
தலையில் புத்தாண்டு
பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் கூடுதல்
விலைக்கு வாங்கி
தனியார் மின்
நிறுவனங்களை கொழுக்க
வைக்கவே இந்த
மின்கட்டன உயர்வு
என்பது உங்களுக்கு
தெரியாமல் போனது
 தகவல் தொடர்பு
வளர்ச்சியின் கோளாறு
என்று தெரிகிறது.

இதில் தனியாரிடம்
அதிக விலைக்கு
வாங்கி கார்பரேட்
நிறுவனங்களுக்கு
நம்மைவிட குறைந்த
விலையில் தடையற்ற
மின்சாரம் வழங்குகிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை
என்ன என்றால்
மின்சார ஒழுங்கு
முறை ஆணையம்
என்று ஒன்று.........

அது .......
மக்களிடம் கருத்து
கேட்பு  நாடகத்தை
நடத்தி மின் கட்டணத்தை
வருடம் தோறும்
உயர்த்து விற்பதற்க்காகவே
அது இயங்குகிறது.

இப்படி.....
ஒவ்வொரு முறையும்
மின்கட்டன உயர்வு
ஏற்றப்படும் போது
எல்லாம் மற்ற
நண்பர்களின் வழி
காட்டலின் படி
மின் தேவையைக்
குறைத்து மின்
சிக்கனத்தை கடை
பிடித்த போதும்...

பாழாய்ப் போன
கொசுக்களின் வகை
யாறக்களும் கும்மிருட்டு
கோவிந்தர்களுக்கும் என்
மின்  சிக்கனம் பற்றி
தெரியவது இல்லை.

புகை மூட்டம்
போட்டும் கொசு
வலையில் புகுந்தும்
சிக்கனத்தை கடை
பிடித்தாலும் மின்
கட்டண உயர்வால்
தாக்கு முடியவில்லை.

நிரந்தர வருமானமோ
தாய்தந்தை வருவாயோ
எதுவும் இல்லாததும்
பல வித அத்தியா வசிய
தேவைக்கும் அல்லல்
படுவதும்  வாடிக்கையாகி
விட்டது............

இதனை தவிர்க்க
 கற் காலத்துக்கு
மீண்டும் திரும்பிப்
போக முடியுமா..??
நிணைத்தாலும் முடியாது
முயன்றாலும் முடியாது.
 குறுக்குவழியும் இல்லை
நேர் வழியும் இல்லை
என்பதால்.............


கல்வி, சுகாதாரம்,
மருத்துவம் என
இப்படி அனைத்தும்
தனியார் கொள்ளைக்கு
திறந்து  விடும அரசையும்
தனியார்மய தாராள மயத்தை
எதிர்த்து போராடும்
மக்களோடு மக்களாய்
நானும் வீதியில்
இறங்கப் போகிறேன்
இதுதான் இந்த
புத்தாண்டில் இந்த
சாமானியனின். புத்
தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே,...!!!!

கோவன்
படம்-www.vinavu.com

9 comments :


 1. வணக்கம் நண்பரே தாங்கள் புதுமையான வகையில் சிந்தித்ததற்க்கு ஒரு சல்யூட்டும் தமிழ் மண வாக்கும் ஒன்று.

  ReplyDelete
 2. இல்லாததை இருப்பதாக நிணைத்து சல்யூட்டு அடித்து கருத்துரை வழங்கிய நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 3. வலிப் போக்கரே
  வருடத்தின் முதல் நாளிலே
  எலக்டிரிக் ஷாக்கா?
  பதிவை பார்த்து ஷாக்காகி விட்டேன்!

  புதுவை வேலு

  ReplyDelete
 4. வித்தியாசமான வாழ்த்துரை தந்த தோழருக்கு வணக்கம்! எது எப்படி இருப்பினும், தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள். .
  த.ம.2

  ReplyDelete
 5. சாக் அடிக்கும் எலக்ட்டிரிக்கு முதல்நாளென்ன..இடை நாளென்ன..கடைசி நாளென்ன என்று தெரியவா போகிறது ...திரு. புதுவை வேலு அவர்களே!!!!

  ReplyDelete
 6. திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு தங்களின் வருகைக்கும் வாழ்த்துரை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி!!!

  ReplyDelete
 7. இதைதான் ஏற்கனவே நீங்கள் செய்துகொண்டுதானே வருகிறீர்கள் ?
  த ம 1

  ReplyDelete
 8. சாமானியனுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. சமானியனுக்கு புதுவருட வாழ்த்துக்கள் கூறிய திரு.வேகநரி அவர்களுக்கு நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com