பக்கங்கள்

Thursday, February 12, 2015

ஒரு விசாலிப்பூ.....??????

படம்-tamil.filmibeat.comஏலேய்......வெண்ணே.....  ஒங்க..ஏரியாவுல..என்னடா...? ரேடியா  பாடுது....

ரேடியாவாாா........!!! ஓ...... அதுவா......ண்ணே......

ஆமாலே.......

அது ஒன்னுமில்லே...ண்ணே... விசயந்து கட்சிகாரங்க  ரேடியா போடுராங்க..ண்ணே...”

அதுதாண்டா....வெண்ணே........ எதுக்குடா.....ரேடியா ...போடுறாங்கே.....


அதுணே..... விசயந்து கட்சி தொடங்கி  பதிணைந்து வருசமாச்சாம்...ணே.... அத  நிணவு படுத்தி ...ரேடியா  ....போடுறாங்கண்ணே.......


பாருடா....... டில்லியில...... ஊழல..ஒழிப்பேன்னு சொல்லி... கேசரிவாலு வந்தது மாதிரி  இங்கேயும்....  இவுனுக.... வந்திருவாங்கே...யடா.....

அட.. போண்ணே...இவிங்களாவது வர்தாவது...... ஆத்தா  நம்ம கஷ்ட நஷ்டத்த
புரிஞ்சு தெருவுக்கு நாலு கடய தெறந்து வச்சு குடிச்சு சந்தோசமா...இருங்கடான்னு வச்சுருக்கு. இந்தாளு என்னத்த திறந்து வச்சாரு....ம்ம்ம்....

 டேய்.......அதுக்குத்தாண்டா...... இப்போ ரேடியா போட்டு...குடி மக்களுக்கு நிணவு படுத்துறாங்கே.....அடுத்து எங்கள ஆட்சீயில ஏத்துங்க....டான்னு....

ஆத்தாளா..விட... இவரு நல்லா..செய்வாரா...ண்ணே......

ஏய் ... ஒனக்கு தெரியுமாடா..?..  அந்த வெள்ள எம்ஜியாரு குடிச்சு பழகாத  மகன்டா....இந்த  கருப்பு எம்ஜியாரு ..குடிச்சு பழகின குடி மகன்டா ஆத்தா..என்ன குடிச்சா இருக்கு....அதே தெருவுக்கு நாலு தொறந்து வச்சயிரக்கேயில.... இவரு வந்தா.. நாட்டு குடி உயர.. குடி மகனுக்கு நல்லது செய்யாமலா  இருந்திடுவாரு..........????

 ஆமாண்ணே.... நீங்க...சொல்றதிலேயும்.... ஒரு ஞாயம் இருக்குண்ணே...... அவரு..நம்ம  குடி மகண்னுல்ல.......ஆத்தா..குடிச்சதா  தெரியலைண்ணே...16 comments :

 1. இந்த குடி மக்களின் பிரச்சனையே வேற.

  ReplyDelete

 2. இந்த வெண்னகளாவது வந்து ஏதாச்சும் செய்யட்டுமுண்ணே
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 3. நீங்க...
  சொல்றதிலேயும்...
  ஒரு நியாயம் இருக்குண்ணே...

  மதுரையில் நாம் நேரில் சந்திக்க விரும்பியும்
  எம்மைக் கடவுள் தடுத்துவிட்டார் போலும்
  எனக்கு மிகவும் துயர் தான் எஞ்சியது!

  ReplyDelete
 4. ஹி ஹி ஹி ! பாத்துனோ முகும கட்சிக்காரங்க பார்த்துடப்போறாங்க

  (முகுமு -முரட்டுக்குடி முன்னேற்ற சங்கம் )

  தம+

  ReplyDelete
 5. இந்த குடி மக்கள் வேற பிரச்சனையத்தானே..பேசிக்கிறாங்க...திரு. வேகநரி அவர்களே!!!

  ReplyDelete
 6. இந்த வெண்ணெய்களுக்கு கொடுக்கிற காசுக்கும், ஊத்திக்கிற சாரயத்துக்கும் ஓட்டு போடத்தான் தெரியுமுண்ணே...!!!

  ReplyDelete
 7. நீங்க சொல்றதிலும் ஒரு ஞாயம் இருக்குண்ணே.....

  ReplyDelete
 8. இவர்கள் முரட்டுகுடி மக்கள் மாதிரியா தெரிகிறார்களண்ணே......

  ReplyDelete
 9. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கே வந்து சாராய பாக்கெட் கொடுப்போம்னு வாக்குறுதி கொடுத்தாலும் கொடுப்பார்கள் :)
  த ம 3

  ReplyDelete
 10. என்னாது மதுரை வி.ஐ.பியையும் அவர் கூட்டாளியையும் இலங்கை வி.ஐ.பி சந்திக்கவிடாம கடவுள் தடுத்திட்டாரா!!! ஒரு யாகம் நடத்த வேண்டியது தான்.

  ReplyDelete
 11. வாக்குறுதிக்கே குடிமகன் ஏக குஷி மகன் ஆகிவிடுவாங்கண்ணே.....

  ReplyDelete
 12. இனிமேலும் நாசமா போவதற்கு இன்னாது இருக்கிறது...அண்ணே....

  ReplyDelete
 13. கடவுளால் தடுக்கப்பட்ட வி.ஐ.பி.தான் அடுத்த சந்திப்பின் பொது கடவுளோ..கடவுளின் ஆட்களோ தடுத்துவிட முடியாதபடி யாகம் நடாத்தி கடவுளிடம் முன் பதிவு செய்து நிணைவுபடுத்திக் கொள்ளவேண்டும் திரு. வேகநரி அவர்களே!!!!

  ReplyDelete
 14. என்ன இது! இப்படி அப்படி ஏதாவது சொல்லி அவரையும் அந்த முதல்வர் நாற்காலியில் உட்கார்த்தி விடுவீர்கள் போலிருக்கிறதே! பட்ட பாடு போதாதா!

  ReplyDelete
 15. பட்டபாடு தெரிஞ்சிருந்தா....இப்படியெல்லாம்..உளறல் வருங்களா??... ஐயா....

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!