வெள்ளி 27 2015

இறப்புக்குப்பின் சொர்க்கம்+நரகம்-எவ்வித ஆதாரமும் ஆவணமும் இல்லை..

படம்-poocharam.net

நான்கு தனிமங்கள்
தற்செயலால் இணைகின்றன.
இணைவதின் பயனால்
உருவமுள்ள தோற்றம்
ஒன்று உருவாகிறது.

இந்த தனிமங்களின்
சேர்மானத்திற்கு வெளித்
தூண்டல்கள் எதுவும்
அதுகளுக்கு தேவைப்படவில்லை...

போதை இல்லாத சில
தனிமங்கள் ஒன்றினைந்து
போதை தரும் பானங்களை
உருவாவது போன்றே...
உணர்வற்ற தனிமங்கள்
இணைவதால் உணர்வுள்ள
பொருள் ஒன்று உருவாகிறது.

இப்படிபட்ட நான்கு வகை
தனிமங்களால் உருவாகியவன்
தான் மனிதன். அந்த மனிதன்
இறந்த பின் அவனது சடலம்
பாடையில் எடுத்துச் செல்லப் படுகிறது.

இறந்த மனிதனுக்கு இரங்கற்பா
பாடப்படுகிறது.. அந்த உடலை
எரித்தால் உடலில் உள்ள
எலும்புகள் சிறிது சிறிதாக
வெந்து சாம்பலாக ஆகிறது.

புதைத்தால் உடலிருக்கும்
மண் நிலத்தோடு கலக்கிறது
திரவம் நீருடன் கரைகிறது
வெப்பம் நெருப்புடன் இணைகிறது
மூச்சு காற்றுடன் சேர்கிறது.

இதில் ஏழை,பணக்காரன்
அறிஞன்,மூடன் என
பாகுபாடு இல்லாமல்
அனைவரது சடலமும்
அழிந்து பட வேண்டியதே.

இறப்புக்கு பின்
சொர்க்கம் நரகம்
இருந்ததாக, இருப்பதாக
எவ்வித ஆதாரமும்
இல்லை.. எந்தவித
ஆவணமும் இல்லை.

உடலின் முடிவே....
ஆன்மாவின் முடிவு..!!!

34 கருத்துகள்:

  1. தூங்கும் போதே எங்கிருக்கிறோம் என தெரியவில்லை ,செத்த பின் சொர்க்கமாவது ,நரகமாவது :)

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்ககூடிய விடயங்கள் அருமை நண்பரே... நான் முன்னாடி போனால் கண்டிப்பாக வந்து சொல்வேன் நண்பரே..

    பதிலளிநீக்கு
  3. நல்லது.... தாங்கள் வரும்வரை காத்திருக் கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    இறப்புக்குப்பின் சொர்க்கம்+நரகம்-எவ்வித ஆதாரமும் ஆவணமும் இல்லை. உண்மையைச் சொன்னீர்கள்!

    சொர்க்கம் மேலோகத்தில் என்றும் நரகம் கீழோகத்திலும் இருக்கிறது என்றும் பூலோகத்தில் உள்ளவர்கள் உண்மைக்கு புறம்பானவைகளைச் சொல்லி மக்களைப் பகுத்தறிவில்லா மாக்களாக வைத்திருந்தார்கள். கடவுளின் பெயரைச் சொல்லி... மதத்தைக் காட்டி மனிதனுக்கு மதம் பிடிக்க வைத்ததுதான் மிச்சம்.

    சொர்க்கம் நரகத்தை எவனும் இன்றுவரை காட்டவில்லை. உயிரின் முடிவே உடலின் முடிவு! ஆன்மா என்று ஒன்று இல்லை...! உயிருக்கு வேறு பெயர் ஆன்மா என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

    எனக்குத் தெரிய... தின்பதற்கு உப்புமா இருக்கிறது. ஆன்மா? பூசாரிகள்...சாமியார்கள்...சீடர்கள்...அடியார்கள்... இப்படி பல பெயர்களில் அலையும் போலிகள்... ஏமாற்றுப் பேர்வலிகள்... எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

    இறப்பு பற்றி சிறப்பான கருத்து. அருமை.

    நன்றி.
    த.ம.2.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், குட்டி பதிவாக தந்த கருத்துரைக்கும் நன்றி ! அய்யா...

      நீக்கு
  5. உங்கள் கருத்தை முழுவதும் வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. மனிதன் என்பவனுக்குரிய விளக்கம்
    கன கச்சிதமான உண்மைக் கருத்து
    தோழரே!

    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!

    Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    பதிலளிநீக்கு
  8. காட்டவில்லை என்பதற்கு பதில் , அதை அறிந்துகொள்ளக்கூடிய அறிவு நம்மிடம் இல்லை எனலாம் . கார்ல் சேகனின் காஸ்மோஸ் , மிச்சியோ காகுவின் கட்டுரைகள்லாம் கொஞ்சம் படிங்க அண்ணே .

    ஆடத்தெரியாத சிலுக்கு , கால்ல சுலுக்குன்னாளாம்'ங்றமாதிரி மேம்போக்கா சொல்லாதிங்கணா . சொர்க்க , நரகம் பற்றி எனக்கு கவலையில்லை . ஆன்மாவின் முடிவு என்று தாங்கள் கூறுவதுதான் அதிசயமாக இருக்கிறது . ஆன்மாவுக்கு முடிவு இருக்கிறதா இன்னும் யாரும் விஞ்ஞானப்பூர்வமாகவும் விளக்கல , மெய்ஞானத்தின் அடிப்படையிலும் விளக்கவில்லை . அப்படி இருக்கும்போது இது உங்களின் சொந்தக்கருத்து எனும் பட்சத்தில் எனக்குக்கவலையில்லை . ஆனால் , சொர்க்க ந்கரம் இருப்பதற்கு எப்படிஎவ்வித ஆதாரமும் இல்லையோ , அதபோல் இல்லை என்று கூறுவதற்கு ஏதாவது ஸ்ட்ராங்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால் கொடுங்கள் . நானும் படித்துப்புரிந்துகொள்கிறேன் அண்ணா ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறுக்க மாட்டாதவனுக்கு பத்தொன்பது கருக்கவாள் என்ற பழமொழி மாதிரிதான்..சொர்க்கம் நரகம் பற்றி தனக்கு தெரியாது அது பற்றிய கவலையும் இல்லை... ஆனால் இல்லை என்று சொல்பவர்கள் ஆதாரம் கொடுங்கள் என்பதாகத்தான் தங்கள் கருத்துரை இருக்கிறது நண்பரே.... இதற்கு தக்க ஆதாரம் இதுதான் செத்த பிறகு உடலை விட்டு ஆன்மா பிரிந்து செல்வதை கண்ணால் பார்த்தவர்கள் யார் நண்பரே....

      நீக்கு
  9. அனைத்துமே நமக்கு நாமாக ஏற்படுத்திக்கொள்வதுதான். வேறில்லை.

    பதிலளிநீக்கு
  10. உண்மையை அருமையா சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. இதோ இந்த ஞானத்தைத் தான் உலோகாயுதம் என்றார்கள்.
    சமய வாதிகள் தங்களுக்குள் உன் கடவுள் பெரிதா என் கடவுள் பெரிதா... யாரை வழிபட்டால் வீடுபேறு கிடைக்கும் என்று தம்முள் சண்டையிட்டார்களே ஒழிய நின்று நல்ல ஒரு பதிலாய் நீங்கள் கூறியுள்ளதைப் போன்றவரின் கருத்துக்களுக்குப் பதில் சொன்னதாய்த் தெரியவி்ல்லையே...!
    தொடர்ந்து கருத்துகளைத் தாருங்கள் அய்யா!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைப்படியே..எனக்கு தெரிந்தததை தொடர்ந்து தருகிறேன் அய்யா....

      நீக்கு
  12. நிஜம் இதுதான் வாழும் காலம் சொர்க்கம்.

    பதிலளிநீக்கு
  13. இந்த வாழும் காலமே...இருப்பவர்களுக்கு சொர்க்கமாகவும், இல்லாதவர்களுக்கு நரகமாகவும்தான் இருக்கிறது திரு. தனிமரம் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  14. என்று மனிதன் தோன்றிய ஆன்மீக சிந்தனையை உருவாக்கினோ. அப்போதிருந்து பலர் இதே வண்ணம் சொல்லித்தான் வருகின்றார்கள். அவர்களுக்குப் பதிலில்லை. ஏனென்றால் மரித்தோர் மீண்டு வந்து நம்மிடம் என்ன பார்த்தோம்? எங்கு போயிருக்கிறோம் என்றெல்லாம் சொல்வதில்லை. எனவே ஆதாரம் தரமுடியுமா எனத்தாராளாமாக கேட்டுவிட்டு வெற்றியடைந்ததாக இறும்பூதெயதலாம்.

    உங்கள் வழிப்படியே போய்விட்டால் என்னவாகும்? மனிதன் வாழவே ஆசைப்படமாட்டான். ஆசையில்லாவிட்டால் வாழ வேண்டிய தேவையிருக்காது. வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை நோக்கி போய்க்கொண்டேயிருப்பதுதான். அதில் கொஞ்சம் கிடைத்தாலும், மேலும் அல்லது இன்னொரு புதுவிதமாக ஒன்றை உருவாக்கிக்கொண்டு ஓடுவதுதான் வாழ்க்கை. தேர்வு, மதிப்பெண், பட்டயம், வேலை, மணம், குழந்தைகள், பேரன்கள், பின்னர் மரணம். இறுதிவரை ஏதாவது நம் கண்முன் தொங்கி வா...வா என அழைக்க நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒன்றுமே இல்லையென்றால்...?

    உயிர்; உயிர் போனபின் சடலம். சடலம் எரிந்து சாம்பலானது; ஒருவனோ ஒருத்தியோ தமர்தமர் கதையை முடித்தார்கள் என்றால், அல்லது அப்படித்தான் போகுமென்றால், வாழமுடியாது. எல்லாரும் உயிர் இருக்கும்போதே நடைப்பிணங்கள்தான்.

    எனவே நம் வாழ்க்கையென்றால் உயிரும் உடலும் மட்டுமல்ல. ஆன்மாவும் கூட என்றார்கள். உயிரோடு கூடிய உடல். அவையிரண்டும் போன பின் நாம் ஆன்மாவாக இருப்போம். அஃது அழியாது. பின் அஃது எங்கே போகும்? என்று கேள்வியெழுமாதலால், அவரவர் கர்மவினைக்கேற்ப நரகம் அல்லது சுவர்க்கம் எனச்செல்லும் என்றார்கள். சுவர்க்கம் என்பது மாட மாளிகையில் கனவுக்கன்னிகளோடு மணாளன்களோடு சல்லாபிக்க அன்று. அதை இறைவனடி.

    இதற்கு ஆதாரம் உண்டா? சுவர்க்கம் நரகம் எவரேனும் பார்த்ததுண்டா? ஆதாரம் கேட்பதே இங்கு எழாது. நான் சொன்னது ஆன்மா. அஃது எங்கே போகும் என்பதற்கு விடையாக உருவாக்கிக்கொண்டார்கள். இறைவனடி வேண்டுவோர் அதை உலகிலிருக்கும்போதே வேண்டிக்கொண்டு வாழ்வர். அவ்வளவுதான்.

    நம்பிக்கையோடு பிறந்து, நம்பிக்கையோடு மடிவதுதான் வாழ்க்கை. அவையில்லாமல், நாங்கள் வெறும் சோத்தாலடித்த பிண்டங்கள் மட்டும்தான். இறப்புக்குப்பின் வெறும் சடலங்களாகி மண்ணொடு மண்தான் என்றால், சரி. உங்களுக்கும் அப்படியொரு நம்பிக்கையிருப்பதில் தவறேது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா அவர்களுக்கு.. என்வழி என்று புதிதாக எதுவுமில்லை.... என்னுடைய வாழ்க்கை மற்றவர்களைப்போல் குறைந்த பட்சம்கூட சந்தோசம் இல்லா வாழ்க்கை.... அதற்க்காக அந்த சந்தோசத்திற்க்காக ஏங்கி கிடக்கவும் வருத்தப்பட்டு சோம்பிக் கிடந்ததும் இல்லை . எனது சக்திக்குட்டுபட்டு என் வாழ்வை ஓட்டிக் கொண்டுதான் என் தாய் தந்தைக்கு நான் வாரிசு.எனக்குப்பின் வாரிசு என்பதை கிடையாது. நம்பிக்கையோடு பிறக்கவில்லை, நான் எந்த நம்பிக்கையோடு மடிவதுதான் பிரச்சனை..

      நீக்கு
    2. நம்பிக்கையோடு பிறக்கவில்லை. சரி; நம்பிக்கையோடு வாழவில்லை. ரொம்ப சரி. ஆனால் நம்பிக்கையோடு மரணிக்க ஆசைப்படுகிறீர்கள்! நம்பிக்கையாவது மண்ணங்கட்டியாவது என்று செத்துப்போகவேண்டியதுதானே? ஏன் எந்த நம்பிக்கையோடு சாவது என்ற பிரச்சினை உங்களுக்கு?

      நீக்கு
    3. நம்பிக்கையோடு பிறக்காத போது..எந்த நம்பிக்கையோடு சாவது

      நீக்கு
  15. நான் ஏற்கிறேன் தங்கள் கருத்தினை.

    பதிலளிநீக்கு
  16. சரி தவறு என்று உலகில் இருக்கும்வரை அதற்கு பிரதிபலனாக சொர்க்கம் நரகம் இருந்தே ஆகவேண்டும் சரியான வழியை தேர்ந்து எடுப்பவர்களுக்கு வெகுமதி கிடைதேயாக வேண்டும் அவர்கள் துளி அளவும் வஞ்சிக்கப் படக்கூடாது

    பதிலளிநீக்கு
  17. சரி தவறு என்று உலகில் இருக்கும்வரை அதற்கு பிரதிபலனாக சொர்க்கம் நரகம் இருந்தே ஆகவேண்டும் சரியான வழியை தேர்ந்து எடுப்பவர்களுக்கு வெகுமதி கிடைதேயாக வேண்டும் அவர்கள் துளி அளவும் வஞ்சிக்கப் படக்கூடாது

    பதிலளிநீக்கு
  18. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.Mohamed Nalim அவர்களே.....

    பதிலளிநீக்கு
  19. You need to get into depths of our spiritual epics like upanishad. Only those who take spiritual immersion will find the wisdom. Otherwise rest will be only half backed conclusions like yours.
    If possible, read the sermons of kanchi maha periyava

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களே சொல்லுக்கும் செயலுக்கும் விரோதமாக இருக்கிறார்கள். நீங்கள்தான் படிக்கவேண்டும்.

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்